பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் முதல் முறையாக இயக்குனராகக் களம் கண்டிருக்கும் யான் திரைப்படம் வருகிற ஜூலை இறுதியில் வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜீவா, துளசி நாயர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரில்லர் திரைப்படமான இப்படத்தினை ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே மெஹா ஹிட்டாகியுள்ளன.
ஆப்பிரிக்கா நாடான மொராக்கோ உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டிற்கு முன்பே இப்படத்தின் சேட்டிலைட் உரிமம் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளதால் மகிழ்ச்சியில் திளைத்துவருகிறது படக்குழு.
கடல் படத்தில் அறிமுகமான துளசி நடித்திருக்கும் இரண்டாவது படம் யான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

தங்கள் தள செய்திகள் அனைத்தும் அருமை. tamilcinemafire.com
ReplyDelete