கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் லிங்கா திரைப்படம் மின்னல் வேகத்தில் படமாக்கப்பட்டுவருகிறது. அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, லாரன் ஜே. இர்வின், சந்தானம் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்துவரும் இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார்.
இந்த இரண்டு வேடங்களில் ஒரு வேடத்தில் கலெக்டராக ரஜினிகாந்த் நடித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுஷ்கா கிராமத்துப் பெண்ணாக நடித்துவருகிறாராம். விரைவில் மற்றொரு வேடம் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லிங்கா திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புக்கள் மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. மைசூரின் மிகப் புகழ்பெற்ற இடமான, மைசூர் மஹாராஜா அரண்மனையின் தங்க அறையிலும் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. மஹாராஜா அறையில் முதல் முறையாகப் படம்பிடிப்பு நடைபெற்றது இப்படத்திற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
லிங்கா திரைப்படம் வருகிற தீபாவளி வெளியீடாக வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

0 comments:
Post a Comment