மூன்று தலைமுறை இணைந்து நடித்த மனம் படத்தை பார்த்து கண்கலங்கி விட்டாராம் கமல்.
மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையோடு சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்துள்ள படம் ‘மனம்’. அக்கினேனி குடும்பத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் நடித்திருக்கும் படம் மனம். இதில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நேற்று சிறப்புக்காட்சியாக உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தை பார்த்து ரசித்தார். படம் பற்றி அவர் கூறும்போது,திரையில் அவர்கள் சிரிக்கும்போதெல்லாம், நாகேஸ்வர ராவுடனான எனது நினைவலைகள் ஞாபகத்திற்கு வந்து என்னை அழ வைத்தன. மனம், நாகார்ஜுனா, நாக சைதன்யா மற்றும் என் மூலமும் அந்த வரலாற்று நாயகன் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.இப்படி ஒரு அற்புதமான படத்தை திரையுலகிற்கு கொடுத்ததற்காக அக்கினேனி ஃபேமிலியை நான் மனதாரப் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
மனம் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நேரத்தில் நடிகர் நாகேஸ்வர ராவ் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment