கடந்த சில தினங்களுக்கு முன்பாக நண்பன் படம் குறித்து இயக்குனர் பார்த்திபன் கூறியதாகச் சில செய்திகள் இணைய ஊடகங்களில் வெளியாகியிருந்தன. குறிப்பாக நண்பன் திரைப்படத்தில் விஜய்க்குப் பதிலாக சூர்யா நடித்தால் பொருத்தமாக இருக்குமென்று பார்த்திபன் கூறியதாக அச்செய்திகளின் சாரம் அமைந்திருந்தது.
இச்செய்திகள் குறித்த தனது கருத்தினை வெளியிட்டுள்ளார் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்
வெளியிட்டிருக்கும் தகவல்...
”திரு.சத்யராஜுக்குப் பதிலாக நடிக்க அழைக்கப்பட்ட நான், இயக்குனர் சங்கரிடம் போய் விஜய்க்குப் பதிலாக சூர்யாவை நடிக்க வையுங்கள் என கருத்து சொன்னேனாம்... வடிவேலுவும் நானும் பண்ற காமெடியை மிஞ்சிடும் இது!
நடந்தது என்னவென்றால்...
’3 இடியட்ஸ்’ இயக்கம் எனக்கே வந்தது. பேச்சு வார்த்தையின் போது விஜய் சூரியா இருவரிடமும் தயாரிப்பு தரப்பில் பேசினார்கள். எனக்கு பதில்
இயக்குனர் சங்கரின் பெயரும் அடிபட்டது. முடிவில் ஷங்கர் + விஜய் கூட்டணியில் நண்பனானது. என்னை அப்படத்திற்கு சிபாரிசு செய்ததே நண்பர்
விஜய்தான். கதை இப்படியிருக்க விஜய் பற்றிய கருத்தை நான் எங்கு போய் சொல்ல?
சிறப்புத் தகுதிகள் இல்லாமல் யாரும் உயர்வதில்லை. விஜய்யின் இன்றைய உயரம் சிறப்பு வாய்ந்தது. துப்பாக்கி உச்சி முனை கத்தி! “
இவ்வாறு விஜய் பற்றிய தான் கூறிய கருத்தாக வெளியாகியிருக்கும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பார்த்திபன்.
பார்த்திபன் இயக்கத்தில் உருவாகிவரும் ”கதை திரைக்கதை வசனம் இயக்கம்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

0 comments:
Post a Comment