Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, June 6, 2014

பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா கேரக்டரில் நடிக்கிறார் தீபிகா!

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்குவது இந்தியில் இப்போது புதிய டிரண்ட். ஓட்டப்பந்தைய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை பாஹ்க் மில்கா பாஹ்க் என்ற பெயரில் வெளிவந்து தேசிய விருது பெற்றது. தற்போது குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை சினிமாவாகி வருகிறது. இதில் மேரிகோமாக பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெய்வாலின் வாழ்க்கையை படமாக்க பிரபல இந்தி இயக்குனர் மகேஷ் பட் முடிவு செய்திருக்கிறார். இதில் சாய்னா கேரக்டரில் தீபிகா படுகோனே நடிக்கலாம் என்று தெரிகிறது. படத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்து சாய்னாவிடம் காட்டிய பிறகு சாய்னா நெய்வால் தான் தனது கேரக்டரில் நடிக்க சரியான நபர் தீபிகாதான் என்று மகேஷ் பட்டிடம் கருத்து தெரிவித்தாராம்.

காரணம் தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோனே தேசிய பேட்மிட்டன் வீரர். தீபிகாவும் பள்ளி, கல்லூரி காலத்தில் பேட்மிட்டன் வீராங்கனையாக இருந்தவர். மாநில அளவில் விளையாடி இருக்கிறார். அதனால்தான் சாய்னா, தனது கேரக்டருக்கு தீபிகா பொருத்தமானவர் என்று கூறியிருக்கிறார். இது பற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒருசில நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிங்காவில் முதல் முறையாக நவீன அதிவேக காமிரா!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முதல் முறையாக அதிவேக காமிராவான பாந்தம் ப்ளக்ஸ் 4கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய திரைப்பமொன்றில் இத்தகைய கேமிரா பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

லிங்காவில் முதல் முறையாக நவீன அதிவேக காமிரா!

இந்த காமிராவை ஸ்டீரியோவிஷன் நிறுவனம் லிங்காவுக்கு வழங்கியுள்ளது.

ரஜினி நடித்த ஸ்டன்ட் காட்சி ஒன்றை இந்தக் கேமராவைக் கொண்டு படமாக்கியிள்ளனர். ஹாலிவுட்டைச் சேர்ந்த ஸ்டன்ட் இயக்குநர் லீ விட்டேகர் அமைத்த ஒரு பெரிய சண்டைக்காட்சியை பாந்தம் ப்ளக்ஸ் கேமிராவில் படமாக்கினார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு.

இத்தகவலை ஸ்டீரியோயோவிஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போது லிங்கா படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது. ஹைதராபாதில் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நசக்கவிருக்கிறது.

ஜாகையை மும்பைக்கு மாற்றுகிறேனா? முருகதாஸ் விளக்கம்!

பாலிவுட்டிலும் கவனம் செலுத்தும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ஜாகையை மும்பைக்கு மாற்றமாட்டாராம்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து கத்தி படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அந்த படம் நாளை ரிலீஸாகிறது. இதனால் கத்தி படப்பிடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு முருகதாஸ் மும்பையில் தங்கி ரிலீஸ் வேலைகளை கவனித்து வருகிறார்.

ஜாகையை மும்பைக்கு மாற்றுகிறேனா?: முருகதாஸ் விளக்கம்

இப்படி பாலிவுட், கோலிவுட் என்று போகிறாரே மனிதர் பிரபுதேவாவை போன்று மும்பையில் செட்டிலாகிவிடுவாரோ என்ற சந்தேகம் எழுந்தது. இதை அவரிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

தமிழ் படங்கள் எனக்கு புகழும், பணமும் கொடுத்தன. எனக்கு மேலும் பல இந்தி படங்கள் எடுக்க ஆசை. இந்தி கற்க விரும்புகிறேன். ஆனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்துவேன். நான் மும்பைக்கு வந்து செல்வேனே தவிர இங்கு செட்டிலாகிவிட வேண்டும் என்று நினைக்கவில்லை என்றார்.

Thursday, June 5, 2014

விஜய், விக்ரம் படங்களில் நடிக்கும் சீதா!

விஜய் மில்டன் இயக்கிய 'கோலிசோடா' படத்தில் நடித்தவர் சீதா. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்பட்டது.

'கோலிசோடா' படத்தின் மூலம் விமர்சகர்கள், திரைநட்சத்திரங்கள் எனப் பலரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது விஜய்மில்டன் - விக்ரம் இணைந்துள்ள 'பத்து எண்றதுக்குள்ள' படத்தில் சமந்தாவின் தோழியாக நடிக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி' படத்தில் அலுவலகம் செல்லும் பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறார். இதன் மூலம் விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் இடம் பிடித்துவிட்டார் சீதா.

அஜித்தை இயக்கும் முருகதாஸ்?

'தீனா' படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்குகிறார் முருகதாஸ் என்று சொல்லப்படுகிறது.

முருகதாஸின் முதல் படம் 'தீனா'. அஜித், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இப்படத்தில் நடித்தனர். அஜித்தை தல என்று அன்போடு அழைத்தது 'தீனா' படத்தில்தான். இன்று வரைக்கும் அஜித் தல என்று அழைக்கப்படுகிறார்.

'தீனா' படத்தைத் தொடர்ந்து 'ரமணா', 'கஜினி', 'ஏழாம் அறிவு', 'துப்பாக்கி' படங்களை இயக்கிய முருகதாஸ் இப்போது 'கத்தி' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

'கத்தி' படம் முடிந்த பிறகு மீண்டும் அஜித்தை இயக்க இருக்கிறாராம். இதுவரை சூர்யாவுக்கும், விஜய்க்கும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் முருகதாஸ்.

அந்த வகையில் அஜித்துக்கும் இரண்டாவது முறையாக படம் இயக்க உள்ளார். இன்னும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் தெரியவரும்.

விஸ்வரூபம் 2 லேட் ரகசியம்..?

க‌மல் நடித்து, இயக்கியுள்ள விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படத்துக்குப் பிறகுதான் வெளியாகும் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு பல பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது கமலின் விஸ்வரூபம். அந்தப் படம் நல்ல வசூலையும் பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து, உடனடியாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார் கமல். இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்ததது.

கடந்த ஜனவரியிலேயே படம் வெளியாகிவிடும் என்று கூறப்பட்ட நிலையில், 10 சதவீத படப்பிடிப்பு முடியாத நிலையில், கமல் தனது அடுத்தடுத்த படங்களுக்கு தேதி கொடுத்து நடிக்கப் போய்விட்டார். இப்போது உத்தம வில்லனில் நடிக்கும் கமல், அது முடிந்ததுமே, த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறார். உத்தம வில்லன் செப்டம்பர் 10- ம் தேதி நிச்சய ரிலீஸ் என தயாரிப்பாளர் லிங்குசாமி கூறியுள்ளார். எனவே இந்தப் படத்துக்குப் பிறகுதான் விஸ்வரூபம் 2 வெளியாக வேண்டும். விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் நிதி நெருக்கியில் சிக்கியிருப்பதாலேயே இந்த நிலை என்கிறார்கள் ஆஸ்கர் பிலிம்ஸ் வட்டாரத்தில்.

ரஜினியின் லிங்கா ரிலீஸ் தேதி..!

கே.எஸ். ரவிகுமார் இயக்கும் 'லிங்கா' படத்தை தீபாவலியை ஒட்டி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

ரஜினிகாந்த் இரட்டை  வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் 'லிங்கா'. இதில்  சோனாக்ஷி சின்ஹா,  அனுஷ்கா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

 நயன்தாரா ஒரு பாடலுக்கு ரஜினியுடன் டான்ஸ் ஆடுகிறார். சந்தானம் காமெடி ரோலில் நடிக்கிறார். ஆர்.சுந்தர்ராஜன், விஜயகுமார், ராதாரவி ஆகியோர் இப்படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.

ரஜினியுடன் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன் ஜே இர்வின் நடித்திருக்கிறார். 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு விருவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால், தீபாவளிக்கு படத்தை வெளியிடலாமா என்று யோசித்து வருகிறார்களாம்.

விஜய் நடிக்கும் 'கத்தி', விஷால் நடிக்கும் 'பூஜை' , அஜித்- கௌதம் மேனன் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சான்’ சூர்யாவின் மாஸ் ‘ஓபனிங்’ சாங்!

படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படம் நாளுக்கு நாள் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்றிக் கொண்டே போகிறது. ஒருபுறம் டப்பிங் வேலைகள் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்க மற்றொ

எந்தத் தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்!
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்!
இங்க அப்பப்ப அங்கங்க தீப்பத்திக்குமே
ஓர் ஆபத்தில் அவன் பேரு காப்பாத்துமே
அந்தேரி புலி பேரச் சொன்னா அடி நெஞ்சிலே
பேங் பேங் பேங்!!!
ராஜு பாய் உன்ன கண்ணால பாத்தாலே
பேங் பேங் பேங்!!!
ராஜு பாய் வந்து முன்னால நின்னா
பேங் பேங் பேங்!!!

இந்தப் பாடல் வரிகளை கவனிக்கும்போது ‘அஞ்சான்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யாவில் ஒருவர் மும்பை ‘டான்’ என்பதும், அவரின் பெயர் ‘ராஜு பாய்’ என்பதும் தெரிகிறது. ‘நாயகன்’, ‘பாட்ஷா’ வரிசையில் ‘அஞ்சான்’ படமும் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பது சூர்யா ரசிகர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை!

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் என்.லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இன்னும் சில தினங்களில் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் டீஸரை வெளியிட இருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் அனேகமாக ஜூலை மாதம் வெளிவரும்.
ருபுறம் ‘அஞ்சான்’ படத்திற்கான பாடல்களும் சூப்பராக உருவாகிக் கொண்டிருக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி இசையில் சூர்யாவுக்கான ஓபனிங் பாடலை சமீபத்தில் எழுதி முடித்திருக்கிறார் மதன் கார்க்கி. ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற இருக்கும் ‘அஞ்சான்’ சூர்யாவுக்கான ஓபனிங் பாடலின் சிலவரிகள் இங்கே உங்களுக்காக..

ரஜினி மீது தீபிகா திடீர் கோபம்!

ரஜினி மீது தீபிகா கோபமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக தகவல் வெளியிட்டுள்ளது.ரஜினி நடித்துள்ள படம் ‘கோச்சடையான். மோஷன் கேப்சர் முறையில் சவுந்தர்யா ரஜினி இயக்கினார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் பங்கேற்காததற்கு காரணம் அவரது கதாபாத்திரம் படத்தில் சரியாக காட்டப்படாததுதான் என்று பாலிவுட் தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றி பாலிவுட் மீடியாவில் வெளிவந்துள்ள பரபரப்பு தகவல்:கோச்சடையான் படத் தில் தனது கதாபாத்திரம் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று தீபிகா எண்ணியதால்தான் அப்படத்தின் புரமோஷன்களுக்கும் வராமல் தவிர்த்துவிட்டார். இதுதொடர்பாக ரஜினி மீதும் சவுந்தர்யா மீதும் அவர் கோபமாக இருக்கிறார். மேலும் சல்மான் கான் நடிக்கும் ‘பிரேம் ரத்தன் தான் பயோ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அழைத்தபோது அதை ஏற்க மறுத்துவிட்டதுடன் அவர் ஹீரோவாக நடித்த ‘கிக் படத்தில் குத்து பாடலுக்கு ஆட அழைத்தபோதும் மறுத்துவிட்டாராம். இதெல்லாமே சல்மான் மீது அவருக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடுதான்.

இவ்வளவுக்கு பிறகும் காதலன் ரன்வீர் படங்களில் நடிப்பதில் மட்டும் தீபிகா கவனமாக இருக்கிறார். ‘பஜிராவ் மஸ்தானி‘ என்ற படத்தில் ரன்வீர் ஜோடியாக நடிக்க மட்டும் அவர் கால்ஷீட் தந்திருக்கிறார். மற்ற ஹீரோயின்கள் டாப் ஹீரோக்களுடன் ஒத்துழைக்கும்போக்கை கடைப்பிடிக்கும் தருணத்தில் தீபிகா மட்டும் இப்படி மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் அவரது திரையுலக வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கிறார் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது

பின்னணி பாடுகிறார் சூர்யா!

சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ‘அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக சூர்யா சொந்த குரலில் பாடல் பாடப்போவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது,‘இப்படத்துக்காக சூர்யா சொந்த குரலில் பாடும் ஐடியா உள்ளது. ஆனால் இன்னும் அந்த பாடல் ஒலிப்பதிவாகவில்லை என்றனர். இப்படத்தையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். பட ஷூட்டிங்கிற்கான ஆரம்ப கட்ட பணிகளில் வெங்கட் பிரபு மும்முரமாக உள்ளார்

ஜூன் 19ல் வடகறி விருந்து!

ஜெய், ஸ்வாதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் வடகறி திரைப்படம் வருகிற ஜூன் 19ல் வெளியாகவுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனரான சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தினை தயாநிதி அழகிரியின் மேகா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

காதல் மற்றும் நகைச்சுவையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஒரு பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடியிருப்பதால் படம் குறித்த பலவித எதிர்பார்ப்புக்கள் இளைஞர்களிடையே எழுந்துள்ளது. பிரபல ஆர்.ஜேவான பாலாஜியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இசையமைப்பாளர்களான மெர்வின் சாலமன் விவேக் சிவா ஆகியோர் இசையமைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலுக்கு இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் வில்லன் சூப்பர் சுப்புராயன்!

அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் காளி திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
இப்படத்திற்குப் பிறகு கார்த்தி நடிக்கவுள்ள படம் குறித்த தகவல்கள்வெளியாகிவருகின்றன.

குட்டிப்புலி திரைப்படத்தின் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகவுள்ள கொம்பன் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஹீரோயின் யாரென்பது இதுவரையிலும் தெரியாவிட்டாலும், குட்டிப்புலி படத்தின் ஹீரோயினும், கோலிவுட்டின் ராசியான நடிகையுமான லக்‌ஷ்மிமேனன் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொம்பன் திரைப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தின் வில்லன்
குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல சண்டைப்பயிற்சி மாஸ்டரான சூப்பர் சுப்புராயன் கொம்பன் படத்தில் கார்த்தியின் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.

கிராமத்துக் கதையினை மையப்படுத்தி உருவாகவிருக்கும் இப்படத்தில் ராஜ்கிரணும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். யுவன் சங்கர் ராஜா
இப்படத்திற்கு இசையமைக்கலாம் என்று பேச்சுக்கள் அடிபட்டுவருகின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏக்சன் ஹீரோயினாக பூஜா குமார்!

உலக நாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்த விஷ்வரூபம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் ஜோடியாக நடித்திருந்தவர் பூஜா குமார். அமைதியான ஹீரோயினாக இப்படத்தில் அவரது வேடம் அமைந்திருந்தது. ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பூஜா குமார் சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.

கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஷ்வரூபம். இதன் அடுத்த பாகமான விஷ்வரூபம் -2 திரைப்படம் ஏற்கெனவே படமாக்கப்பட்டு, வெளியீட்டிற்குத் தயார் நிலையில் இருந்துவருகிறது. இவ்விரு படங்களிலும் கமல்ஹாசனின் ஜோடியாக நடித்தவர் பூஜா குமார். இப்படங்களில் கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து கமல்ஹாசன் தற்பொழுது நடித்துவரும் உத்தம வில்லன் திரைப்படத்திலும் இவர் நடித்துவருகிறார்.

உத்தமவில்லன் திரைப்படத்தில் இவருடன் ஆண்ட்ரியா, பார்வதி மேனன் ஆகியோரும் நடித்துவருகின்றனர். உத்தமவில்லன் திரைப்படம் வழக்கமான காமெடிப் படமாக மட்டுமல்லாமல் வேறு சிலவற்றையும் எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார் பூஜாகுமார்.

கன்னட நடிகர் ரமேஷ் அர்விந்த் இயக்கத்தில் உருவாகிவருகிறது உத்தமவில்லன் திரைப்படம். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துவருகிறார்.

பிக்கேட் 43 படத்தில் பிருத்திவிராஜ்வுடன் மோகன்லால்...!

பிருத்திவிராஜ் நடித்து கொண்டு இருக்கும் படம் பிக்கேட் 43. இந்த படத்தில் மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளிவந்து இருக்கிறது.

பிரபல இயக்குனர் மேஜர் ரவி இயக்கி கொண்டு இருக்கும் இப் படத்தில் மோகன்லால் நடிக்கிறது உறுதி என்று மலையாள உலகம் தெரிவிக்கிறது.

என்னென்றால் இது வரை இயக்கிய மேஜர் ரவி படத்தில் மோகன்லால் இல்லாமல் எடுத்து இல்லை அதுவும் அவர் என் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தால் கூட படம் நல்ல ஓடும் என்று நம்புகிறார்

ஒரு சிப்பாய் காஷ்மீரில் திசை தெரியாமல் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிக்கி கொள்கிறார். அதன் பின் அவர் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே பிக்கேட் 43 படம் படத்தின் கதை. இப் படத்தை ஹிந்திலும் எடுக்க உள்ளனர்.

ஜெயம் ரவி விட்ட சாபம் பலித்தது...!

தமிழ் நாட்டில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் வைத்து உருவாக்கப்படுள்ள படம் தான் "என்ன சத்தம் இந்த நேரம்". இதில் இயக்குனர் ஜெயம் ராஜா நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் படம்.

இந்த நன்கு குழந்தகளின் அப்பாவாக தான் இயக்குனர் ஜெயம் ராஜா நடித்து இருக்கிறார். இப் படத்தின் பாடல் வெளியிட்டு விழா நேற்று பிரசாத் லேப்பில் நடை பெற்றது அப்போது பேசிய படத்தின் இயக்குனர் குரு ரமேஷ், ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த நான்கு குழந்தைகளும் ஜூவில் காணாமல் போய் விடுகின்றனர், அப்படி காணாமல் போன குழந்தைகள் என்ன ஆனார்கள் என்பது தான் கதையின் கரு என்று கூறினார்.

இயக்குனர் ஜெயம் ராஜா பேசுகையில் , இந்த படத்தோட ஷுட்டிங்குக்கு நடிக்க போகும் போது என் தம்பி ஜெயம் அடிக்கடி சொல்வான்

எங்க எல்லாரையும் படுத்தி வச்சேல்ல. இப்ப போய் பாரு. நடிப்புன்னா என்னன்னு தெரியும்’ என்று. நிஜமாகவே அங்க போன பிறகுதான் தெரிஞ்சுது எனக்கு. ஒவ்வொருத்தரையும் ரொம்ப பிழிஞ்சு எடுத்துருக்கோம்னு.

இனிமே ரொம்ப பிழிய கூடாது. ஆனால் நான் ஏன் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று என் வீட்டிலேயே ரொம்ப பேருக்கு ஆச்சர்யம். வேறொன்றுமில்லை நான் நடிக்க ஒப்புக்கொண்டதே அந்த நான்கு குழந்தைகளை பார்த்த உடனே தான் அவர்களுடன் நடிப்பதில் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

கத்தி படத்துக்கு பிரேக் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்...!

ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தின் படப்பிடிப்பை மிக வேகமாக நடத்தி வந்தார். துப்பாக்கி பிறகு இவர்களது கூட்டணி மீது மக்களிடைய பெரிய எதிர்பார்ப்பு உள்ளது

இதற்கிடையிலும் ஏ.ஆர்.முருகதாஸ் , துப்பாக்கி படத்தை அக்ஷய் குமாரை வைத்து, ஹாலிடே என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து வந்தார்.தமிழ் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியே உதவியாளர்களை வைத்திருப்பதால் கத்தி மற்றும் ஹாலிடே படங்களின் வேலைகளை ஒரே நேரத்தில் கவனித்து வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்

வருகிற 6-ஆம் தேதி ஹாலிடே வெளியாக உள்ளதால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மும்பை சென்றுள்ளார்.இதன் காரணமாக வளசரவாக்கத்தில் உள்ள புஷ்பா கார்டனில் நடை பெற்ற வந்த கத்தி படத்தின் ஷூட்டிங்க்கு ஒரு சின்ன பிரேக் விட்டு உள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ்

ஹாலிடே படத்தின் புரமோஷன்க்காக சென்றுள்ள முருகதாஸ் அடுத்து பத்துநாட்கள் ஷூட்டிங் இல்லை என்றவுடன் விஜய் இந்த நாட்களை அடுத்து நடிக்க உள்ள படத்திற்கான போட்டோ செஷன் பண்ணிவிடலாமா என்ற யோசித்து வருகிறாராம்.

தனுஷின் தயாரிப்பில் நான் இயக்கபோவது உறுதி..!

வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம் உதயநிதியின் மனைவி கிருத்திக உதய் இயக்குனர் ஆனார். அதன் பிறகு வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் பாடல்கள் எல்லாம் நல்ல ஹிட்.

தன்னுடைய அடுத்த கதை விவாதத்தில் பிஸியாக இருந்த கிருத்திகவுக்கு தனுஷின் வொண்டர்பார் கம்பெனியில் படம் இயக்க ஒரு வாய்ப்பு வந்து உள்ளது. தற்போது வரை படத்தினுடைய நடிகர் நடிகைகள் யார் யார் என்று இன்னும் முடிவாகவில்லை ஆனால் தனுஷ் தயாரிப்பில் நான் படம் இயக்க போகிறேன் என்ற செய்தி உறுதி என்று கிருத்திக உதய் தெரிவித்தார்.

வொண்டர்பார் கம்பெனி தற்போது வேலையில்ல பட்டதாரி படமும் மற்றும் சிவ்கர்த்திகேயனின் டானா படமும் தயாரிப்பு பணியில் இருக்கிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க சமீபத்தில் தனுஷ் கம்பெனியில் விஜய்சேதுபதி நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியானது,அது கிருத்திக இயக்க போகும் படத்தில் நடிக்க போகிறாரா என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி இந்த படத்துக்கும் இசை நம்ம இளம் இசைப்புயல் அனிருத் அவர்களே தான்.

ஏன் கத்தியில் 90 பிணை கைதிகளுடன் விஜய்..!

இளைய தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் கத்தி. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சமீபத்தில் கத்தி படத்தில் ஒரு குறிப்பிட்ட போர்ஷனில் 90 பிணை கைதிகளை தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அந்த கடத்தல் கும்பலுக்கு இன்னொரு விஜய் தான் தலைவராக இருக்கிறார் என்று செய்தி வெளிவந்து உள்ளது .

ஆனால் இந்த தகவல்பற்றியும் இப் படத்தின் கதை கரு பற்றி தெரிவிக்க பட குழுவினர் மறுத்து விட்டனர்.

இதற்கிடையில் கோலிவுட் வட்டாரத்தில் இப் படத்தின் கதையை பற்றி இப்பொழுதே கிசு கிசு ஆரம்பித்து விட்டார்கள் . இப்படத்தில் விஜய், சமந்தா ,நில் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப் படத்துக்கு அனிருத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் கம்போஸ் செய்யப்பட்டன. படகுழுவினர் கத்தி படத்தின் பாஸ்ட் லுக்கை இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாசை அடுத்த மணிரத்னம் என்று பாராட்டிய பிரபல நடிகர்!

தமிழில் துப்பாக்கி படம் வெளிவருவதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.முருகதாசை சின்ன மணிரத்னம் என்று விஜய் குறிப்பிட்டுருந்தார் .

தற்போது அதே போல் பாலிவுட் நடிகரும் மற்றும் சோனக்க்ஷி சின்ஹா தந்தையுமான சத்ருகன் ஏ.ஆர்.முருகதாசை உன்னதமான மேதை என்றும் அடுத்த மணிரத்னம் என்றும் சொல்லும் தகுதி கண்டிப்பாக இவரிடம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்

சத்ருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் " துப்பாக்கி தழுவலான ஹாலிடே படத்தை பார்த்தேன் கண்டிப்பாக ஏ.ஆர்.முருகதாசை உன்னதமான மேதை மற்றும் அடுத்த மணிரத்னமாக திகழ்வார் என்றார்

படத்தை பற்றி கூறுகையில் ஹாலிடே ஒரு இந்தியன் ஆர்மி பற்றிய கதை, படம் மிக பிரமாதமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் இப்படத்துக்கு வரிசலுகை கொடுத்தது சரி என்றார்

அக்ஷய் குமார் மற்றும் சோனக்க்ஷி நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது, நிச்சயமாக "பிரிடி தருவாள" கதாபாத்திரம் பேசப்படும் என்று தெரிவித்தார்

செப்டம்பரில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’!

 ஜெயம்கொண்டான்’ மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஆர்.கண்ணன். மணிரத்னத்தின் ஆசிபெற்ற இவர் ‘சேட்டை’ படத்திற்கு பிறகு இயக்கி வரும் படம் ‘

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. விமல், ப்ரியாஆனந்த், சூரி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்யும் போது ஏற்படும் நட்பையும், அதன் பிறகு எதிர்பாராமல் நடக்கும் சில விஷயங்களையும் மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் நாயகி விசாகா சிங் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது..