ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகி, அறிமுகப் படத்திலேயே பெரும்பாலானவர்களின் இதயத்தைக் கொள்ளையடித்தார் தனுஷ். இப்படம் பல்வேறு விருதுகளையும் பெற்றுத்தந்ததோடு, பாலிவுட்டின் முக்கிய நடிகராகவும் தனுஷினை மாற்றியுள்ளது.
ராஞ்சனா திரைப்படத்தினைத் தொடர்ந்து தனுஷ் நடித்துவரும் இரண்டாவது திரைப்படத்திற்கு ஷமிதாப் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாம். கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்புக்கள் நடைபெற்றுவந்தாலும் தற்பொழுதுதான் தலைப்பிடப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் மிக முக்கிய இயக்குனரான பால்கி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துவருகிறார். உலகநாயகன் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துவருகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் தனுஷ் இணைந்து நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளியாக தனுஷ் நடித்துவரும் இப்படமும் தனுஷின் நடிப்பிற்குத் தீனியிடும் விதமாக அமையும் என்று பேச்சுக்கள் எழுந்துவருகின்றன. மேலும் இயக்குனர் பால்கி இயக்கிய முந்தைய படங்களான சீனி கும், பா முதலான படங்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றது நினைவிருக்கலாம்.

0 comments:
Post a Comment