கார்த்தி, அனுஷ்கா நடித்த 'அலெக்ஸ் பாண்டியன்' என்ற படுதோல்விப் படத்தை இயக்கிய சுராஜுக்கு அடுத்த படம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்ததாம். ஆனாலும், சிறந்த கதையாசிரியர், நகைச்சுவைக் காட்சிகளை அமைப்பதில் வல்லவர் என்பதால் அவர் சிறிதும் தடுமாறாமல் அடுத்த கதை ஒன்றை ரெடி செய்துவிட்டாராம்.
'அலெக்ஸ் பாண்டியன்' படத்தின் தோல்விக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனமும், படத்தின் நாயகனும்தான் காரணம் என இயக்குனர் வட்டாரங்களில் காரணம் சொல்கிறார்கள். இருந்தாலும் அதைப் பற்றிப் பேசிப் பிரயோஜனமில்லை என்பதால் தன்னை நிரூபித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் அடுத்து அட்டகாசமான கதை ஒன்றை உருவாக்கி நடிகர் ஜெயம் ரவியிடம் சொல்லியிருக்கிறார்.
அந்தக் கதையைக் கேட்ட ஜெயம் ரவி படத்திற்கு உடனே சம்மதம் சொல்லியிருக்கிறார். அநேகமாக இந்த படம் படம் ஆரம்பமாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார்களாம்.
ஜெயம் ரவி ஜோடியாக யாரை நடிக்கவைக்கலாம் என அலசிப் பார்த்திருக்கிறார்கள். பொதுவாக படத்திற்குப் படம் புது ஜோடியுடனே நடிக்கும் ஜெயம் ரவியுடன், இதுவரை யார் ஜோடி சேர்ந்ததில்லை என ஆராய்ந்து, காஜல் அகர்வாலை தேர்வு செய்திருக்கிறார்களாம். அதோடு, ஆந்திராவிற்கு ஓடிப் போய் எங்கோ ஒளிந்து கொண்டுள்ள அஞ்சலியை மீண்டும் இந்தப் படம் மூலம் தமிழுக்குக் கொண்டு வரும் எண்ணத்திலும் இருக்கிறார்களாம்.
படத்தைப் பற்றிய மற்ற விவரங்களை இயக்குனர் சுராஜ் விரைவில் அறிவிப்பார் என்று இயக்குனருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0 comments:
Post a Comment