ஒருவழியாக ரஜினி ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த கோச்சடையான் இன்றே உலகமெங்கும் வெளியாகிவிட்டது. தமிழகத்தில் நாளை வெளியாகிறது. கோச்சடையான் படத்தை இன்று காலையில் பார்த்த மலேசிய ரசிகர்கள், படம் சிறப்பாக வந்திருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கோச்சடையான் எப்படி... இன்றே தெரிந்துவிடும்! கோச்சடையான் துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் இன்றே படத்தை ரசிகர்கள் பார்க்கின்றனர். அமெரிக்காவில் 250 அரங்குகளுக்கும் மேல் படம் வெளியாகிறது. இவற்றில் நூற்றுக்கும் அதிகமான அரங்குகளில் இன்றே கோச்சடையான் சிறப்புக்காட்சி திரையிடப்படுகிறது. பிரிட்டனில் 40 அரங்குகளில் கோச்சடையான் தமிழும், 15 அரங்குகளில் இந்திப் பதிப்பும் வெளியாகிறது.
பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளில், இதுவரை எந்த தமிழ்ப் படமும் வெளியாகாத அளவுக்கு அதிக அரங்குகளில் கோச்சடையான் வெளியாகிறது. இந்த நாடுகளிலும் கோச்சடையான் சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது.
இலங்கையில் 10 அரங்குகளில் கோச்சடையான் வெளியாகிறது. இங்கு மட்டும் அனைத்து அரங்குகளுக்கும் பிரிண்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் 20-க்கும் அதிகமான அரங்குகளில் படம் வெளியாகிறது. டிஜிட்டலில் திரையிடப்படும் அனைத்து நாடுகளுக்கும் கேடிஎம் எனும் 'சாவி' அனுப்பப்பட்டுவிட்டது. பெரும்பாலான நாடுகளில் ஒரு நாள் முன்பாகவே படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்படுவதால், கோச்சடையான் ரிசல்ட் இன்றே வெளியாகிவிடும்.
இதுவரை வந்துள்ள கருத்துக்கள்படி கோச்சடையான் யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு சிறப்பாக வந்திருப்பதாகவும், விஎப்எக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பத் தரம் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
0 comments:
Post a Comment