Saturday, January 4, 2014

ebay மூலம் மனித மூளையை விற்றவன் அமெரிக்காவில் கைது..!



அமெரிக்காவிலுள்ள இண்டியானா போலிஸ் மாகாணத்தை சேர்ந்த டேவிட் சார்லஸ் என்ற 21 வயது நபரை போலீசார் ஆன் லைனில் "ஈ பே" மூலம் மனித மூளையை விற்றதாக கூறி கைது செய்தனர். அங்குள்ள இந்திய மருத்துவ வரலாற்று அருங்காட்சியகத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட மூளைகளை அவன் திருடியுள்ளதாக தெரிகிறது.

கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அவன் அந்த அருங்காட்சியகத்தில் அத்துமீறி நுழைந்து மூளை திசுக்களை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் 2000 நோயாளிகளின் உடல் உறுப்புகள் உள்ளதாகவும், அவை அனைத்தும் 1890 முதல் 1940 வரையான காலத்திற்கு உட்பட்டவை என்றும் கூறப்படுகிறது. ஜார்களில் வைக்கப்பட்டிருந்த இம்மூளைத் திசுக்களை "ஈ பே" இணையதளம் மூலம் மத்தியஸ்தர் ஒருவரை கொண்டு அவன் விற்றுள்ளான்.

அது ''ஈ பே''யின் "மனிதன், மனித உடல் மற்றும் மனித உடல்களின் பாகங்களை" தங்களது இணையதளத்தில் விற்கக்கூடாது என்ற கொள்கைக்கு எதிரானது என்றும் கூறப்படுகிறது. சார்லஸிடம் 6 மூளைகளை வாங்கிய நபர் ஒருவர் அருங்காட்சியகத்தின் நிர்வாக இயக்குனரான மேரி ஹெலன் ஹென்னஸ்சியுடன் தொடர்பு கொண்டு தான் வாங்கியுள்ள மூளைகளில் அருங்காட்சியகத்தின் முத்திரைகள் ஒட்டப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அவரது இந்தக்குறிப்பை கொண்டு இண்டியானா போலிஸ் காவல்துறையிடம் மேரி புகார் அளித்தார்.

உடனடியாக தங்கள் "கொடுக்கு நடவடிக்கை"யை துவக்கிய போலீசார் அவனை பொறி வைத்து பிடித்தனர். அதாவது மத்தியஸ்தர் ஒருவரை கொண்டு மூளைகள் தேவைப்படுவதாகவும், அது குறித்து விவாதிக்க ஓரிடத்திற்கு வருமாறும் கூறி அவனை அங்கு வரச்செய்து மடக்கி பிடித்து கைது செய்தனர். கிட்டத்தட்ட 4800 டாலர் மதிப்புள்ள மனித மூளைகளை திருடியதாக அவன் மீது வழக்கு பதிவு செய்யபட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டான்

0 comments:

Post a Comment