Saturday, January 4, 2014

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் உறவுகள் வேண்டுமே!





வெளிநாட்டில் வாழ்ந்தாலும் உறவுகள் வேண்டுமே!



1.வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்களது உறவுப் பாலத்தை எப்படி காப்பாற்றி வைக்கலாம் ?நாம் நமது பிறப்பிடத்தை விட்டு வெளிநாடு சென்று வாழ்ந்தாலும் நமது வாழ்க்கை என்னவோ நமது சொந்த ஊரில் உறவுகளை தொடர்ச்சியாக வைத்திருப்பதில் தான் சந்தோசம் இருக்கின்றது.
                                                                        
                    
2.பொதுவாக நாம் பிறந்த ஊரில் நாம் ஒரு சில வருடங்கள் இல்லையென்றால் அந்த சமூகம் நம்மை மறக்க ஆரம்பித்துவிடும் .நம்மால் ஏதாவது நண்மை ஏற்படும் என்றால் நம்மை தொடரும் ,இல்லையென்றால் நாம் அந்த ஊரில் இருந்திருந்ததையே மறந்து விடும்.ஒரு சொற்ப எண்ணிக்கையில் தான் நமது தொடர்பு இருக்கும்,ஒரு சில உறவுகள் ஒரு சில நண்பர்கள் என்று அந்த வட்டம் குறுகி விடும்.
                             
    
 3. இவர்களையெல்லாம் நாம் முழுவதுமாக ஒதுக்கி விட்டு வாழ முடியாது ,பிறப்பு,இறப்பு,திருமணம் போன்ற தருணங்களில் உறவுகளும் ,நண்பர்களும் இல்லாவிட்டால் நமது வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும்.
                    
                         
4. முதலில் நமது வாழ்க்கையில் அப்படிப்பட்ட முக்கியமான உறவுகள் ,நண்பர்கள் எவரையும் கால ஓட்டத்தில் நாம் இழந்து விடாது,அவர்களது வாழ்க்கை நிலையை நாம் தொடர்ச்சியாக அறிந்து கொள்ள வேண்டும் முடிந்த அளவிற்கு தொலை பேசி மூலமாக அவர்களது வாழ்க்கை நிலைகளை ,நல்லது ,கெட்டதுகளை தெரிந்து கொண்டே வரவேண்டும் .


5.அவர்களது வாழ்க்கையில் ,கல்வியில்,தொழிலிள் ,வேறு ஏதேனும் ஒன்றில் அவர்களுக்கு நம்மால் முடிந்த ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கலாம்,உதவிகள் செய்யலாம்.இந்த குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள நபர்கள் தான் நமது வாழ்க்கை என்பதை உணர வேண்டும் .நாம் எங்கு சென்று எவ்வளவு சம்பாதித்து பேரும் புகழும் அடைந்தாலும் சொந்த ஊரில் தான்  நமது வாழ்க்கை நீண்டகாலம் பேசப்படும் .மற்றைய ஊர்களில் நாம் பெறும் பேரும் செல்வமும் நீண்ட காலங்கள் பேசப்படாது.


6. ஆகவே இன்று முதல் முதலில் நமது வாழ்க்கையில் அப்படிப்பட்ட முக்கிய உறவுகளும்,நண்பர்களும் மறந்து விடாமல் இருக்க அவர்களது தொடர்பை பாதுகாத்திடுவோம்.வெளிநாட்டிலும் சொந்த ஊரிலும் புகழடைவோம்.

0 comments:

Post a Comment