சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த யாமிருக்க பயமே படமும், விரைவில் வெளிவரவிருக்கும் அரண்மனை படமும் ஒரே கதை. தயாரிப்பில் உள்ள முண்டாசுபட்டி, அப்புச்சி கிராமம் ஆகிய இரண்டு படங்களின் கதையும் ஒரே கதை என்ற தகவல் காதில் விழுகிறது. இந்நிலையில், ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் யான் படத்தின் கதையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் கதையும் ஒரே கதை என்று கிசுகிசுக்கின்றனர் திரையுலகினர்.
இத்தனைக்கும் யான் படத்தின் கதையே ஏற்கனவே வெளியான மரியான் கதையை ஒத்திருக்கிறது என்ற சொல்லப்படுகிறது. யான் படத்தின் கதைப்படி வெளிநாட்டுக்கு செல்லும் ஜீவாவை தீவிரவாதிகள் கடத்திச் சென்று பிணயக்கைதியாக அடைத்து வைக்கின்றனர். அவர்களிடமிருந்து ஜீவா எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் யான் படத்தின் திரைக்கதை.
கத்தி படத்தின் கதையிலும் இதே பிணயக்கைதிகள் சமாச்சாரம்தான். சுமார் 90 பேரை தீவிரவாதிகள் கடத்தின் சென்று ஒரு இடத்தில் பிணயக்கைதியாக அடைத்து வைக்கின்றனர். அவர்களை விஜய் மீட்பதுதான் கத்தி படத்தின் கதை.
திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் யான் மற்றும் கத்தி படங்களுக்கு இடையில் சின்னசின்ன வித்தியாசங்கள் இருந்தாலும் ப்ளாட் என்னவோ ஒன்றுதான் என்கிறார்கள்.

0 comments:
Post a Comment