2009ல் மலையாளத்தில் வெளியான 'நீலத்தாமரா' படம் மூலம் அறிமுகமானவர் அமலாபால். தமிழில் 'வீரசேகரன்', 'சிந்துசமவெளி' படங்களில் நடித்திருந்தாலும், பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்த 'மைனா' படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
அதன் பின்பு 'தெய்வத்திருமகள்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'வேட்டை', 'தலைவா', 'நிமிர்ந்து நில்' ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் விஜய்யுடன் இருந்த நட்பு காதலாக மாறியதால், இருவரும் ஜூன் 12ல்திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள்.
தற்போது தன் தாய் மொழியான மலையாளத்தில் நிவின் பவுலியுடன் இணைந்து நடித்திருக்கும் 'மிலி' படமே இவரின் கடைசிப் படம் என கூறப்படுகிறது. இப்படத்தை 'ட்ராஃபிக்' படத்தை இயக்கிய ராஜேஷ் பிள்ளை இயக்குகிறார்.
திருமணத்திற்குப் பிறகு பிரமாதமான கதைகள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லியிருக்கிறார் அமலாபால். ஆனால், கண்டிப்பாக நடிப்பேன் என்று உறுதியாக சொல்லவில்லை.
அமலா பாலின் கடைசிப் படம் 'மிலி' தானா? அல்லது தொடர்ந்து அமலாபால் நடிப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

0 comments:
Post a Comment