கத்தி திரைப்படத்திற்குப் பிறகு இளையதளபதி விஜய், இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடிக்கவுள்ளார்.
கன்னட நடிகரான சுதீப் சமீபமாக இயக்கி, நடித்திருக்கும் மானிக்யா திரைப்படம் கர்னாடகாவில் மாபெரும் வெற்றி கண்டதுடன், பலரது
பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது. மிர்ச்சி தெலுங்குப் படத்தின் ரீமேக்கான இப்படம் கன்னடத் திரையுலகினைக் கலக்கிவருகிறது. இப்படத்தில்
வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபமாக இப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளித்த விஜய், இப்படத்தினால் மிகவும் ஈர்க்கப்பட்டதுடன், சுதீப்பின் நடிப்பினையும்
வெகுவாகப் பாராட்டியுள்ளாராம். இதனால் சுதீப் மகிழ்ச்சியில் திளைத்துவருவதாகக் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment