Monday, December 16, 2013

கணிப்பொறி தமிழா...




கணிப்பொறி தமிழா உன் கண்களை கணணி திரை விட்டு கழட்டு!
ஏ.சி  அறையில் இருந்து எழுந்து வா !

கிளைகளைப் பரப்பும் அவசரத்தில் வேர்களை மண்ணிலிருந்து  வெட்டி விடாதே!

நீ படித்த பழைய பள்ளிக் கூடத்தைப் போய்ப் பார்!
அதன் மேற்கூரையில் உன் பிஞ்சு சிரிப்பு ஒட்டி இருக்கும்!

நீ பிறந்த ஆஸ்பத்திரி எதுவென்று தேடு அதன் வாயிலில் நின்றொரு புகைப் படம் எடுத்து ரசி!

நீ ஓட்டிய முதல் நடைவண்டி இன்சாட் 5 ஐவிட முக்கியமானது அதை பாதுகாத்து வை!

நீ ஆடிய ஊஞ்சல் மரத்தின் தோள்களில் கொஞ்சம் தோழனாய் சாய்ந்து நில்!

நீ ஆனா ஆவன்னா எழுதிய சிலேட்டுப் பலகை கிடைத்ததால் ஆஸ்கார் விருதாய் கருதி
வரவேர்ப்பறையில் மாட்டி வை!

நீ குரங்கு பெடல் போட்ட சைக்கிளை கண்டெடுத்து உன் காருக்கருகில் நிறுத்திக்கொள்!

நீ வாங்கிய முதல் சாக்கு ஓட்டப் பந்தய பரிசை மேருகேற்றிப்பர்!
அது உன் முதல் வெற்றியல்லவா?

நீ படித்த பழைய பள்ளிப் புத்தகங்களை அள்ளி ஆசையோடு தடவு!
அது உன் தாய்ப்பால் மேஜை !

நீ பெற்ற முதல் சம்பளம் இருந்த உறையை பெட்டிக்குள் தேடி எடுத்து வாசம் பார்!
நீ அணிந்த சிறுவயசு ஆடைகளை துப்பறிந்து எடு!
அது உன் பால்ய வயசின் நினைவுச் சின்னம்!

நீ பெற்றோருக்கு எழுதிய கசங்கிய கடிதங்களை எடுத்து அதில் வழியும் பாசத்தில் கண்ணீர் மல்கு!

நீ நெஞ்சுக்குள் புதைத்த சருகு மண்டிய நண்பர்களின் முகவரிகளுக்கு நேரில் போ!
நீ எப்போதும் மறக்க முடியாதென்று நினைத்து மறந்து போன காதலை யோசி!

நீ பழைய நினைவுகளில் மூழ்க மூழ்க புதிய கதவுகள் திறக்கும்!

நீ உணர்ச்சி குவியலுக்குள் ஊற ஊற எந்திர தன்மை பறக்கும்

இரைப்பைக்காக மட்டும் வாழ ஆரம்பித்து விட்டால் இதயம் தேவை இல்லை!
இதயத்திற்காக மட்டும் வாழ்ந்து போகவும் இரைப்பை விடுவதில்லை!

இரண்டையும் சமமாக்கு !
இடைவிடாமல் சந்தோசமாக்கு!

பா.விஜய்

0 comments:

Post a Comment