Tuesday, November 12, 2013

மாரடைப்பு ஏற்படுவதை முன்னரே கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன் தொழில்நுட்பம்!

நாம் நெஞ்சு வலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று நினைக்கும் அளவுக்கே மருந்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கெற்ப உரிய மருந்துக்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.

nov 12 - tec heart

அதை விடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்பு தான் ஏற்பட்டு விட்டாதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.உடல் வலி, அழுத்தம், இறுக்கம், போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான நெஞ்சு வலி இருக்கும். ஆனால், நோய் தீவரம் அதிகம் இருக்க கூடும்.இந்த நிலையில் மாரடைப்பு வரக்கூடிய நிலையில் ஒருவர் இருக்கிறாரா என்று கண்டுபிடித்து சொல்லக்கூடிய ஒரு வழியை ஏற்கனவே புற்றுநோயைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு ஸ்கேனிங் முறையின் மூலம் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக எடின்பரோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கதிரியக்கத்தை வைத்துக் கண்டறியும் இந்த தொழில்நுட்பம், இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஆபத்தான பொருட்கள் அடைந்து கிடந்தால் அவற்றை ஒளிர வைத்து அதிகக் கூர்மையுள்ள ஸ்கான்களின் மூலம் அவைகளை மருத்துவர்கள் பார்க்க உதவுகிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.மாரடைப்பு ஏற்பட்ட 40 பேர்கள் மீது நடத்தப்பட்ட பரிசோதனைகளில் , இந்த ஸ்கேன், 37 நோயாளிகளின் இதயத்தில் சேதம் ஏற்பட்டிருந்ததைக் காட்டியது குறிப்பிடத்தக்கது .

Heart disease health centre

**********************************************


1th November 2013 – University of Edinburgh researchers have developed a new scanning technique that could help identify people who are at a high risk of having a heart attack.A PET- CT scan is used along with a radioactive tracer called 18F- sodium fluoride or 18F-NaF. This is already in use for bone scans, but is now showing promising results for heart patients after a small study.

0 comments:

Post a Comment