Thursday, November 7, 2013

மணப்பெண் கை வண்ணத்தில் திகிலூட்டிய திருமண கேக்!

பலகாலமாகவே பிறந்த நாள் முதல் திருமண விழா வரை தனி மனித வாழ்வின் அனைத்து முக்கிய வைபவங்களிலும் கேக் இடம் பிடித்து விடுகிறது.இது 15-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சிற்றுண்டி உணவாம். இங்கிலாந்தில் அப்போது நிலவிய தட்பவெப்ப நிலைக்கேற்ப இத்தகைய கேக் தயாரிக்கப்பட்டு வந்தது. அதை அடிப்படையாக வைத்தே தற்போதும் கேக்கில் மதுபானங்கள் மற்றும் உலர் பழங்கள் கொண்டு சிறப்பு கலவையாக உருவாக்கப்படுகிறது.


அத்துடன் ஆங்கிலேயர் தொடக்க காலத்தில் கேக் தயாரித்தபோது அதில் மாமிச வகைகளையும் பயன்படுத்துவார்களாம். மதுபானங்களில் உள்ள ஆல்கஹாலில் அந்த மாமிசங்கள் கரைந்து புதியதொரு சுவையை ஏற்படுத்தித் தந்துள்ளதாம்.


பேக்கிங் முறையில் தயாரித்தால் அதற்கு பெயர் கேக். அதையே ஆவியில் வேக வைத்தால் புட்டிங். இது ஆங்கிலேயர்களின் கலாசாரம். நமது ஊரிலும் புட்டிங் உண்டு, ரைஸ் கேக் என்ற பெயரில். அது என்ன என்கிறீர்களா, நம்ம ஊர் இட்லிதான்.


nov 7 - cake shock



இப்படி உற்றார், உறவினர், நண்பர்களை மகிழ்விக்கும் விதமாக ‘கேக்’ வெட்டி திருமண நிகழ்ச்சியை கொண்டாடுவது தெரிந்த விஷயம்தான்::இந்நிலையில் அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் வசிக்கும் டேவிட் சைடுசெர்ப்–நதாலே என்ற இளம் தம்பதியர் தங்களது திருமண ‘கேக்’கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருந்தார்கள்.


அப்படி என்ன? என்றால் ஆண்–பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேஜையில் வைத்திருப்பது போன்று இவர்களது முக சாயலில் கேக்கை தயாரித்து வைத்ததே காரணமாகும். அத்துடன் அதன் அருகில், ‘மரணம் வரையில் எங்களுக்குள் பிரிவு இல்லை’ என்ற வாசகத்தையும் எழுதி வைத்தனர்.இந்த கொடூர காட்சியை பார்த்து முதலில் திருமண விழாவில் பங்கேற்ற உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அதற்கான விளக்கத்தை கூறியதை அடுத்து சமாதானம் அடைந்தனர்.


அதிலும் மணப்பெண் நதாலேயே இந்த ‘கேக்’கை தன்னுடைய கைப்பட தயாரித்தவர் ஆவார். அக்கலையில் வல்லுனரான அவர் சுமார் 40 மணிநேரம் செலவிட்டு அதை வெண்ணிலா, சாக்லெட் சுவையில் பட்டர்கிரீம் கொண்டு தயாரித்தார். மணமக்கள் மற்றும் விருந்தினர்களை இந்த கேக் கவர்ந்தாலும் அவருடைய பாட்டிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம்.


இந்த வித்தியாச கேக் தயாரிக்கும் யோசனை ஏற்பட்டது குறித்து நதாலே கூறும்போது, ‘கணவர் டேவிட் திகில் சினிமாப்பட பார்ப்பதில் தீவிர ரசிகர். அவரை மகிழ்விக்கவே இதை தயாரித்தோம். இது அனைவரையும் வியக்க வைத்ததேன்னவோ உண்மை’ என்று கூறினார்.


Couple, Natalie and David Sideserf, put heads together for Austin, Texas wedding

********************************************


 Natalie Sideserf, 28, is a cake artist. She says her husband David, 30, is a big fan of horror movies.”We were watching a horror movie, and I was always interested in sculpting lifelike cakes, especially in the face, so I thought, “How neat would it be if I did our severed heads?’” Mrs Sideserf said.

0 comments:

Post a Comment