Wednesday, October 16, 2013

Smartphoneகளை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை!

பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன.

அப்படிப்பட்ட Smartphoneகளை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவல்கள் என்ன என்பதை பார்ப்போம்.

ஏன் Smartphone ?

உங்களுடைய செயல்கள் அனைத்தையும் ஸ்மார்ட் ஆக செய்ய உதவுகிறது இது. எந்த ஒரு செயலுக்கும் தனித் தனியாக Application என்று கணனி போல இருப்பதால் மிக எளிதாக உங்கள் வேலை முடிந்து விடும்.

Smartphoneல் பெரும்பாலான பயன்பாடுகள் இணையம் சார்ந்தே இருக்கும். உங்கள் தினசரி வேலையில் இருந்து, உங்கள் தொழில் வரை அனைத்துக்கும் உதவும் வகையில் செயல்படுகின்றன. எங்கே இருந்து வேண்டுமானாலும், நீங்கள் நினைத்த வேலையை செய்து முடித்திடலாம்.

விலை (Price) :

எல்லோருக்கும் முதலில் இதை சொல்லி விடுவது உத்தமமாய் இருக்கும். முதலில் நீங்கள் எவ்வளவிற்கு வாங்க போகிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதன் பின் கீழே உள்ளவற்றை பொறுத்து உங்கள் பணத்திற்கு ஏற்ப ஒரு அலைபேசி வாங்கி விடலாம்.

இயங்கு தளம் (Operating System) :

எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஒரு இயங்கு தளத்தில் (OS) தான் இயங்கும். இதில் பிரபலமானவை iOS, Android, Windows, Blackberry, Symbian.

இதில் iOS என்பது அப்பிள் நிறுவன அலைபேசிகளில் மட்டும், Blackberry என்பது Blackberry நிறுவன அலைபேசிகளில் மட்டும், Symbian என்பது நோக்கியா அலைபேசிகளில் மட்டுமே.

இதில் அப்பிள் விலை பற்றி சொல்லவே வேண்டாம், கொஞ்சம் அதிகம் பணம் உள்ளவர்கள் தான் வாங்க முடியும் என்ற போதும் இதன் மிகப் பெரிய பலன் Upgrade வசதி. நீங்கள் எப்போது வாங்கி இருந்தாலும், புதிய Version OS வெளியாகும் போது அதற்கு Upgrade வசதி தரப்படுகிறது. இதனால் புதிய வசதிகளை எளிதாக பெற முடியும்.

அதே போல தான் Blackberry, அப்பிளை விட விலை குறைவு என்ற போதிலும், இதன் கட்டமைப்பு, பயனர் இடைமுகப்பு (User Interface) போன்றவை எல்லாரும் பயன்படுத்த உகந்ததாக இல்லை என்பது ஒரு குறை. இது Business சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப் பொருத்தமான அலைபேசி. இதிலும் Upgrade வசதி வழங்கப்படுகின்றன.

2010ம் ஆண்டு வரை Smartphone உலகின் ராஜாவாக இருந்த Symbian, அதன் பின்னர் Android வளர்ச்சியால் அடிவாங்க ஆரம்பித்து, இன்று அடியோடு நின்றுவிட்டது. இதை வாங்குவதை தவிர்ப்பது நலம்.

அடுத்த நிறைய பேரின் வேட்கையான ஆன்ட்ராய்ட் (Android), இந்தியர்களின் ஸ்மார்ட்போன் கனவை நனவாக்கியது இது தான். விலை குறைவு, அதிக வசதிகள், பெரும்பாலும் இலவசம் என்ற அதிரடிகளுடன் மிகப் பெரிய மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து வருவதால் கூகுளின் இந்த பிள்ளை நன்றாகவே வளர்கிறது.

இதில் ஒரு பிரச்சினை குறிப்பிட்ட மொடல் அலைபேசி ஒன்றை நீங்கள் வாங்கும் போது Upgrade என்பது எல்லா முறையும் கிடைக்காது. உதாரணமாக 2.3 OS வந்த போது வாங்கியவர்கள் பெரும்பாலும் 4.1 OS வரை Upgrade செய்ய வாய்ப்பு பெற்றார்கள்.

ஆனால் அதற்கு பின்பு கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. இந்த கேள்விக்குறி கூட இல்லாமல் 2.3 OS யில் நின்று விட்டவர்கள் பலர். ஆனால் Upgrade எல்லாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2.3 OS இருந்தால் ஒரு ஆன்ட்ராய்ட் போனை கண்டிப்பாக வாங்கலாம். அதற்கு கீழ் போக வேண்டாம்.

அடுத்து Windows OS. நம் கணனியில் இயங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான இது கைபேசி மாடல்களினால் தடுமாறி வருகிறது. இயங்கு தளத்தில் பிரச்சினை இல்லை என்ற போதும் Phone Specification இதை வாங்க வேண்டுமா என்று உங்களை யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். ஆனால் மிக எளிதான Interface, செயல்பாடை விரும்புபவர்கள் இதை வாங்கலாம். குறைந்தபட்சம் 7.5 தெரிவு செய்யவும்.

வடிவமைப்பு, டிஸ்ப்ளே (Body, Display):

ஒரு கைபேசி வாங்கும் அது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை Body என்பதன் கீழ் வரும். இதில் நீங்கள் குறிப்பாக கவனிக்க வேண்டியது. எடை. பெரும்பாலும் எடை குறைவாக இருக்கும்படி பார்க்கவும்.

அடுத்து Display, இது மிக முக்கியமான ஒன்று. எப்படியும் Touch Screen கைபேசி தான் வாங்க போகிறீர்கள். அப்படி என்றால் அது என்ன வகை என்று நீங்கள் பார்க்க வேண்டும்.

Resistive, Capacitive என்ற இரண்டு வகை உள்ளன. இதில் நீங்கள் சமரசமே இல்லாமல் தெரிவு செய்ய வேண்டியது Capacitive Touch Screen. தப்பித் தவறி Resistive வாங்கி விட்டால், இங்க் ரப்பர் பயன்படுத்துவது போலத்தான், போனை போட்டு தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மற்றபடி Capacitive தெரிவு செய்யும் நீங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ப TFT, AMOLED மற்றும் பல Features கிடைக்கும். அதோடு நீங்கள் வாங்கும் போன் MultiTouch Support செய்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள், குறைந்த பட்சம் இரண்டு விரல்கள் கட்டாயம் தேவை. விளையாட்டு ரசிகர்களுக்கு இது அவசியம்.

Display Size என்பது உங்கள் விருப்பம். ஆண் என்றால் 4 இஞ்ச்க்கு மேல் வாங்கினால் எங்கே வைக்க போகிறீர்கள் என்று யோசித்து வாங்க வேண்டும்.

ஏன் என்றால் சில நேரங்களில் பெரிதாக வாங்கி விட்டால் பின்பு உங்கள் போனுக்கு தனியாக அளவெடுத்து பாக்கெட் தைக்க வேண்டி வரலாம். பெண்களுக்கு பிரச்சினை இல்லை. iPad போல 10 இஞ்ச் என்றாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

நினைவகம் (Memory) :

அடுத்து மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் இது. Smartphoneகள் கணனி போலவே RAM, Internal Memory போன்றவற்றோடு வருகின்றன. எனவே உங்கள் விலைக்கு எது சிறந்தது என்று பார்த்து வாங்க வேண்டும். RAM 512MB குறைந்த பட்சம் இருந்தால் நலம், அதே போல Internal Memory குறைந்த பட்சம் 150 – 200 MB அவசியம்.

External Memory பெரும்பாலும் MicroSD Card Support செய்வதாக வந்து விட்டது. அது 32GB வரை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

கமெரா (Camera):

பெரும்பாலும் எந்த Phone வாங்கும் போதும் கவனிக்க வேண்டிய விடயம் இது. எத்தனை மெகா பிக்ஸல் கமெரா என்று முடிவு செய்து கொண்டு வாங்க வேண்டும். அதோடு உங்களுக்கு Flash முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இரவில் படம் எடுக்கும் போது உங்களுக்கு சிரமம்.

Video Recording என்பதையும் இதில் கவனிக்க வேண்டும். 5MP Camera என்றாலே 720p(தரமான வீடியோ) அளவுக்கு Video Recording வசதி வந்துவிட்டது. 5MP வாங்கி விட்டு VGA Recording(தரம் குறைவான வீடியோ) செய்து கொண்டிருந்தால் வீண்தான்.

வீடியோ Calling வசதி வேண்டும் என்பவர்கள் சிரமப்படாமல் இருக்க Front Camera இருக்கும் போன் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள்.

ப்ராசஸர் (Processor):

மிக மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் இது. உங்கள் கைபேசிக்கு இதயம் போன்ற பகுதி இது தான். இதில் நான் Chip-set, GPU என்றெல்லாம் குழப்ப விரும்பவில்லை. குறைந்த பட்சம் 800Mhz இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

பேட்டரி (Battery) :

எல்லாமே சரி, பேட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பது தான் ஒரு கைபேசிக்கு மிகவும் முக்கியமான விடயம். இதில் Smartphoneகளுக்கு 1100 போல பத்து நாள் சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

நீங்கள் வாங்கும் பேட்டரி லித்தியம் அயான்(Li-Ion) ஆக இருக்க வேண்டும், அதுவும் குறைந்த பட்சம் 1500 mAh தெரிவு செய்தால் தான் ஒரு நாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும் (உங்கள் பயன்பாடுகளை பொறுத்து).

இணையம் & இணைப்புத்தன்மை (Internet & Connectivity):

நீங்கள் வாங்கும் மொபைல் 3G enabled Phone தானா என்று உறுதி செய்து கொள்வது அவசியம். அதே போல Bluetooth, Wi-Fi, GPS, USB வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். Bluetooth Version குறைந்த பட்சம் 2.1+ EDR ஆக இருத்தல் நலம்.

ப்ரௌசெர் HTML வசதியுடன் வரும், அதே சமயம் Flash இருந்தால் இன்னும் சிறப்பு.

இவையே ஒரு Smartphone வாங்கும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள்.

0 comments:

Post a Comment