Friday, September 13, 2013

மோடிக்கு பிரதம வேட்பாளராக மகுடம்! பா.ஜ., பார்லி., கூட்டத்தில் முடிவு!



வரவிருக்கும் தேர்தலில் பா.ஜ., தரப்பில் நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர் என பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் இன்று மா‌லை அறிவித்தார். வரவிருக்கும் பார்லி., தேர்தலில் பா.ஜ., தரப்பில் நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர் என ‌தெரிவித்த பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் மோடி பிரதமர் வேட்பாளராவதற்கு பல தரப்பினரும் ஆதரவு அளித்துள்ளனர் என்றும் கூறினார். வரும் 17ம் தேதி நரேந்திர மோடி பிறந்த நாள் கொண்டாட விருப்பதால் அவருக்கு பிரதமர் வேட்பாளராக மகுடம் சூட்ட பா.ஜ., முடிவு செய்தது. எதிர்ப்பு தெரிவித்து வரும் அத்வானியை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், கட்காரி, பால்பீர் சிங் உள்ளிட்டோர் இறங்கினர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. அவர் இந்த பங்கேற்கவில்லை.


மோடி அறிவிப்பின்போது பத்திரிகையாளர் கூட்டத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் சுஷ்மா, முரளிமனோகர் ஜோஷி, ‌வெங்கையா நாயுடு, நிதின்கட்காரி, அருண்ஜெட்லி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். இந்த மகுடத்திற்கு அத்வானி ஆசீர்வாதித்துள்ளார் என சுஷ்மா நிருபர்களிடம் கூறினார்.

இன்று காலையிலும் அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து சமரசம் செய்யும் முயற்சி தொடர்ந்து நடந்தது. இதற்கிடையில் மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்க அத்வானி சம்மதம் தெரிவித்ததாகவும், கூறப்படுகிறது. மோடிக்கு முழுஆதரவு அளிப்பதாகவும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ்தாக்ரே மோடியை போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.மோடிதான் பெஸ்ட் என சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த சுப்ரமணியசாமி கருத்து தெரிவித்துள்ளார்.


சுஷ்மா- அத்வானி சந்திப்பு : 


இன்று காலை பா.ஜ., எதிர்கட்சி தலைவர்சுஷ்மாசுவராஜ் எல்.கே. அத்வானியை சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு இன்று முடிவு என்னவாக இருக்கும் என கேட்டபோது , மோடி குறித்து எதுவும் பேச மறுத்து விட்டார். மோடியை பா.ஜ., பிரதம வேட்பாளராக்கிட ராஜ்நாத்சிங் எடுக்கும் முயற்சிக்கு அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு, ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இது போல் ஆர். எஸ். எஸ்., தலைவர் மோகன்பகவத், பிரவீண் தொக்காடியா, ராம்விலாஸ்தாஸ் ஆகியோர் மோடியை பிரதம வேட்பாளராக விரைவில் அறிவிக்க வேண்டும் என விரும்பினர். ஆனால் அத்வானி ஆரம்ப கட்டம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இவரைசமாதானப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்தது. மோடியை பிரதமர் வேட்பாளராக்குவதில் ராஜ்நாத்சிங் தொடர்ந்து முயற்சித்து வந்தார். இன்று மாலை 5 .30 மணிக்கு துவங்கிய பா.ஜ., பார்லி., குழு கூட்டத்தில் மோடி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பெரும்பான்மை ஆதரவுடன் மோடி பிரதமர் வேட்பாளரானார். மோடி அத்வானியை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.



மேள- தாளம் முழங்கிட வரவேற்பு : 



பார்லி., குழு கூட்டம் நடக்கும் கட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் பா.ஜ., மற்றும் ஆர் .எஸ்.எஸ்., தொண்டர்கள் கூட்டம், கூட்டமாக கூடி நின்றனர். மோடி அறிவிப்பு வெளியாவதை முன்னிட்டு என மேள, தாளங்கள் இசைத்தவாறு இருந்தனர். கூட்டத்தில் பங்கேற்க வந்த மோடிக்கு தொண்டர்கள் கர கோஷங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் வந்ததும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. 



நாட்டை மீட்டெடுப்பேன்: மோடி : 


பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி, நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: என்னை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க பா.ஜ., தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சாதாரண தொண்டரான எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடினமான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. வரும் 2014ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். மக்களிடமும், தொண்டர்களிடமும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்த பாடுபடப்போகிறேன். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அகற்ற கன்னியகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பிரசாரத்தை துவக்குவோம் என்றார்.

0 comments:

Post a Comment