Thursday, August 22, 2013

ஆங்கில மாதங்கள் பிறந்தது எப்படி?

ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் ஒரு காரண பெயர் சுட்டும் விளக்கம் உள்ளது. அதைப்பற்றி இங்கு கீழே காண்போம். 

ஜனவரி: லத்தீன் மொழியில் `ஜனஸ்’ என்றால் கடவுள் என்று அர்த்தம். இதிலிருந்து உருவாகியதுதான் ஜனவரி. கடவுளுக்குரிய மாதம் என்பது இதன் பொருள்.

பிப்ரவரி: லத்தீன் சொல்லான பெப்ருவேரியஸ் என்ற சொல்லில் இருந்து பிப்ரவரி தோன்றியது. பெப்ருவர் என்றால் `பரிவுத்தன்மை’ என்று அர்த்தம்.

மார்ச்: மார்ஸ் என்ற ரோமானிய போர்க் கடவுளின் பெயரைக் கொண்டு மார்ச் மாதம் தோன்றியது.

ஏப்ரல்: ஏப்ரலிஸ் என்ற லத்தீன் சொல்லில் இருந்து ஏப்ரல் தோன்றியது. ஏப்ரலிஸ் என்பதற்கு `புதிய ஆரம்பம்’ என்று பொருள்.

மே: ரோமானிய கடவுளான மெர்குரியின் தாயாரான மேயா (விணீவீணீ) என்ற பெயரில் இருந்து மே வந்தது. மேயா என்றால் செழிப்பிற்கான தேவதை என்று பொருள் சொல்லலாம்.

ஜுன்: ஜுனோ என்ற ரோமானிய இளமைக் கடவுளின் பெயரில் இருந்து ஜுன் வந்தது.

ஜுலை: ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தில் பிறந்ததால் இந்த பெயர் வந்தது.

ஆகஸ்டு: ரோமானிய சக்கரவர்த்தி அகஸ்டஸ் சீசர் என்பவரை பெருமைப்படுத்த இந்த பெயர் சூட்டப்பட்டது.

செப்டம்பர்: ரோமானிய காலண்டர்படி மார்ச் மாதத்தில்தான் ஆண்டு ஆரம்பமானது. அந்த கணக்குப்படி பார்த்தால் `செப்ட்’ என்றால் ஏழு என்று அர்த்தம். 7-வது மாதமாக இது உள்ளதால் செப்டம்பர் என்று ஆனது.

அக்டோபர்: ரோமானிய கால்ண்டர்படி இது 8-வது மாதம். அக்டோ என்றால் லத்தீனில் 8 என்று அர்த்தம் ஆவதால் அக்டோபர் என்று பெயர் வந்தது.

நவம்பர்: லத்தீன் மொழியில் நவம் என்றால் 9 என்று பொருள். இதனால் இப்பெயர் வந்தது.

டிசம்பர்: ரோமானிய காலண்டர்படி இது 10-வது மாதம். டிசெட் என்றால் லத்தீன் மொழியில் 10 என்று அர்த்தம் ஆகும்.

Related Posts:

  • தலைமுறைகள் – விமர்சனம்!சலசலத்து ஓடும் ஆறு. பசுமை போர்த்திய மரங்கள், பரபரப்பின்றி நடமாடும் ஆவினங்கள், புள்ளினங்களின் சங்கீதம், பேரனின் கையைப் பிடித்தபடி நடந்து செல்லும் கிழவர்... இயற்கையின் அழகு, மண் வாசனை, பரபரப்பற்ற வாழ்க்கை ஆகியவற்றின் கவித்துவமா… Read More
  • இரண்டாவது குழந்தையால் அப்செட்டாகும் முதல் குழந்தை!முதல் குழந்தை பிறந்ததும், தாய், தந்தை இருவருக்குமே முதன் முதலில் பெற்றோரான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனால், இருவருமே அன்பு முழுவதையும் பொழிந்து முதல் குழந்தையை வளர்க்கின்றனர்.இதற்கிடையில் இரண்டாம் முறை கருவுற்றால் நீங்கள் சீக்க… Read More
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகும் இந்தியர் பாபி ஜிண்டா!?அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 2016ம் ஆண்டு நடக்க உள்ளது இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு அமெரிக்க இந்தியர் பாபிஜிண்டால் போட்டியிட உள்ளார்.இந்த ஜிண்டாலின் பெற்றோரான அமர் மற்றும் ராஜ் ஜிண்டால், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இரு… Read More
  • பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.… Read More
  • பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்?1.டச்சு கயானா --- சுரினாம்.2.அப்பர் வோல்டா --- புர்க்கினா ஃபாஸோ3.அபிசீனியா --- எத்தியோப்பியா4.கோல்டு கோஸ்ட் --- கானா5.பசுட்டோலாந்து --- லெசதொ6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா7.வட ரொடீஷியா --- ஜாம்பியா8.தென் ரொடீஷியா --- ஜி… Read More

0 comments:

Post a Comment