Sunday, August 25, 2013

புதைத்து 2 வாரங்களுக்குப் பின் உயிருடன் திரும்பிய பெண்!




 Returning girl buried alive after 2 weeks



அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜாக்சன் (50), என்ற பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி போலீசில் புகார் அளித்தார். புகார் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் பிலடெல்பியா பகுதியின் சாலையோரம் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த பெண்ணின் உடலை அருகில் உள்ள ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைத்திருந்த போலீசார் இதுபற்றி ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டனர். விளம்பரத்தைப் பார்த்த கேர்ரி மின்னி அந்த பிணம் தனது மகள் ஷரோலின் ஜாக்சன்தான் என்று கூறி பிணத்தை பெற்றுக் கொண்டார்.


உரிய மரியாதைகளுடன் பிணமும் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஒருவாரத்திற்கு முன்னர் ஷரோலின் ஜாக்சன், திடீரென வீட்டு வாசலில் வந்து நின்றார். மகளின் கால்கள் தரையில் பதிந்திருக்கிறதா ? என்று உற்றுப் பார்த்த கேர்ரி மின்னி தனது கையையும் கிள்ளிப் பார்த்துக் கொண்டார். உங்கொப்பரான்னே… சத்தியமா வந்திருப்பது ஷரோலின் ஜாக்சன்தான் என்பதை உறுதி செய்து கொண்ட அவர், நாம் அழுது புலம்பி அடக்கம் செய்தது யாருடைய பிணத்தை ? என்று சிந்திக்கத் தொடங்கினார். இவ்விவகாரம் மீண்டும் போலீசாரின் காதுகளுக்கு எட்டியது. உயிருடன் வந்த பெண்ணின் கை ரேகையை ஷரோலினின் பழைய கை ரேகை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த போலீசார், இது ஷரோலின்தான் என்பதை உறுதி செய்தனர். புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து அது யாருடைய பிரேதம் ? என்பதை கண்டறியும் முயற்சியில் தற்போது பிலடெல்பியா போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.



0 comments:

Post a Comment