Tuesday, May 14, 2013

அசெம்பள் கம்ப்பியூட்டர், பிராண்டெட் கம்ப்பியூட்டர் என்ன வித்தியாசம்? (what is different between branded computer, assembled computer)



அசெம்பள் கம்ப்பியூட்டர், பிராண்டெட் கம்ப்பியூட்டர் என்ன வித்தியாசம்? 

(what is different between branded computer, assembled computer)




              BRANDED COMPUTER                           
 
ASSEMBLED COMPUTER
 


கம்ப்யூட்டரில் இரண்டு வகை உண்டு.



1. பிரபல நிறுவனங்கள் தயாரித்து விற்கும் கம்ப்யூட்டர்கள்.. (Branded computers)


2. நாமாக கணினியின் பாகங்களை வாங்கி, அவற்றை ஒன்றிணைத்து கணினியாக மாற்றுவது. (Assemble Computer)



   முன்னது பிராண்டட் கம்ப்யூட்டர் எனவும், பின்னது அசெம்பிள் கம்ப்யூட்டர் எனவும் அழைக்கிறோம். சரி...  இவை இரண்டனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன? இரண்டும் ஒன்றா? இல்லை வெவ்வேறானவை? இந்த குழப்பங்கள் ஒரு சிலருக்கு இருக்கக்கூடும்.
 

   இரண்டும் செயல்படுவதில் ஒன்றுதான். ஆனால் கணினி தயாரிப்பு முறைகளில், அதில் இடம்பெற்றிருக்க பாகங்களின் தரங்களில் வேறுபடுகிறது



   அவற்றைப் பற்றி முழுமையாகப் பார்ப்போம்


     முதலில் பிராண்டட் கம்ப்யூட்டர்களை (Branded Computers) எடுத்துக்கொள்வோம். இது மிகப் பிரபலமான நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு, ஒரு சில சோதனைகளுக்குப் பிறகு விற்பனைக்கு விடப்படுகின்றன



பிராண்டட் நிறுவனங்கள் எவை
(What are the branded companies?)



Dell, Asus,HP, HCL, Lenovo, Sony, Toshiba, Compaq,Gatway, packard bell, acer, amd, ati, vaio, nec, ibm, apple, nvidia,  போன்ற நிறுவனங்களை கூறலாம் இதைத் தவிர்த்து இன்னும் கூடுதலாக ஒரு சில நிறுவனங்களும் இருக்கின்றன



   இத்தகை நிறுவனங்கள் உருவாக்கும் கம்ப்யூட்டர்கள் நல்ல சிறப்பானதொரு கணினி பாகங்கள் உள்ளடக்கியதாகவே வெளிவருகிறது. இன்றைய காலத்தில் போட்டி மனப்பான்மையால் வாடிக்கையாளர்களைக் கவர, இந் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு, அதிக வசதிகளையும், மேம்படுத்தல்களையும் செய்து தருகிறது



    இத்தகைய நிறுவனங்களின் கணினிகளையே பிராண்டட் கம்ப்யூட்டர் என்று அழைக்கிறோம்



பிராண்டட் கம்ப்யூட்டரில் உள்ள நன்மைகள்:
(The advantages of branded computer:) 



   பிராண்டட் கம்ப்யூட்டர்கள் வாங்குவதால் அதற்குத் தேவையான அனைத்துப் பாகங்களும் அதிலேயே உள்ளடக்கி கொடுக்கிறார்கள். எனவே வெளியில் ஏதேனும் பாகங்கள் வாங்கத் தேவையில்லை. பிராண்டட் கம்ப்யூட்டர்களுக்கென தனியாக எந்த ஒரு மென்பொருளும் வாங்கத் தேவையில்லை. குறிப்பாக OS என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற Operating System ( Windows 8, Windows 7, Windows vista Windows xp) இவற்றை பணம் கொடுத்து வாங்கத் தேவையில்லை. கணினியிலேயே அனைத்து மென்பொருள்களும் இணைந்து கிடைப்பதால் வாங்கிய உடனேயே கணினியைப் பயன்படுத்த முடியும்



    பிராண்டட் கணினிகளில் original mother board பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இவை சிறப்பாக செயல்படவென அவற்றிற்கான சிறப்பு இயக்க முறைமைகளை சிறப்பு மென்பொருளைப் பயன்படித்தி உருவாக்கப் பட்டிருக்கும். BIOS UPDATION, DRIVER UPDATION போன்ற பல அப்டேசன்களைச் செய்து mohter board சிறப்பாக செயல்படும்படி அமைக்கப்பட்டிருக்கும்



      SMPS என்று சொல்லக்கூடிய Switched Mode Power Supplyயானது பிராண்டட் கம்ப்யூட்டரில் இருக்கும் Hardware-களுக்கென சிறப்பாக தயாரிக்கப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும். இந்த SMPS ஆனது கணினியில் உள்ள Mother board, Prossor, hard disk, DVD Player என ஒவ்வொரு பாகத்திற்கும் மின்சாரத்தை மிகச் சரியாக பிரித்து கொடுக்கும் பணியைச் செய்கிறது. இதனால் பிராண்டட் கம்ப்யூட்டரில் உள்ள உள் பாகங்கள் சரியாக இயங்குவதோடு, எளிதில் பாகங்கள் செயலிழக்காமலும் பாதுகாக்கப்படுகிறது
  


   பிராண்டட் கம்ப்யூட்டரில் இருக்கும் ஹார்ட்வேர் பகுதிகள் பல சோதனைகளுக்குப் பிறகு இணைக்கப்படுவதால் மிகவும் தரமானதாக இருக்கும். எனவே கணினியைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட துணிந்து பிராண்டட் கம்ப்யூட்டர்களை வாங்கலாம்



    பிராண்டட் கம்ப்யூட்டர்களை வாங்குவதால் இன்னும் கூடுதல் வசதிகளைப் பெற முடியும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கென பிரத்யேகமாக இணையதளங்களைக் கொண்டிருக்கிறது. அந்த இணையதளங்களின் மூலம் ந்த கணினிகளுக்குரிய (Computer Model) hard Drive களுக்கேற்ற Update களைப் பெற முடியும். இது ஒரு கூடுதலான பயனுள்ள வசதியாகும்



   Dell கணினிகளை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த நிறுவனத்திற்குரிய இணையதளமான www.dell.com சென்று உங்கள் கணினிக்குத் தேவையான மேம்படுத்தல்களை செய்ய முடியும் (Driver Updates). 



   பிராண்டட் கணினிகள் வாங்குவதால் இத்தகைய நன்மைகள் நமக்கு இருக்கின்றன



   மேலும் பல பிராண்டட் கம்ப்யூட்டர்களின் விலைப்பட்டியல்களைத் தெரிந்துகொள்ள இந்த இணைப்பின் வழியே சென்று பார்த்துக்கொள்ளுங்கள்








அசெம்பிள் கம்ப்யூட்டரில் உள்ள நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?
(What are the advantages of assembly of the computer? What is evil?)




   நான் வைத்திருப்பது அசெம்பிள் கம்ப்யூட்டர் தான்.. Hardware Engineer ஆன எனது நண்பர்கள் எனக்கு பல்வேறு பாகங்களை வாங்கி, ஒரு அருமையான கணினியை உருவாக்கித் தந்தார். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் Mother Board நிறுவனத்தின் பெயர் ASUS.







Assemble Computer

    
      ஒவ்வொரு பாகமாக நன்கு கேட்டறிந்து, தனது அனுபவத்தில் அதிக வாழ்நாளைக் கொடுக்கக்கூடிய பாகங்களை வாங்கி எனக்கு அசெம்பிள் கம்ப்யூட்டர் செய்து கொடுத்தார். சுமார் 3 வருடங்களுக்கு மேலாக எந்த பிரச்னையுமின்றி கணினியானது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது



    சரி.. கணினி அசெம்பிள் செய்ய முக்கியமாக என்னென்ன பாகங்கள் வேண்டும்?
(What should be important to the assembly of computer parts?)




    முதலில் Computer Case என்று சொல்லக்கூடிய நல்ல கேபின் வாங்க வேண்டும்


    அதற்கடுத்து அதில் பொருத்துவதற்கு உண்டான அனைத்து ஹார்ட்வேர்களையும் வாங்க வேண்டும்



குறிப்பாக நல்ல நிறுவனத்தினுடைய

 

1. Mother Board.





மதர் போர்டு

2. Processor




Processor


3. RAM (Random Access Memory)





RAM - RANDOM ACCESS MEMORY


4. Hard Disk (இது ரொம்ப முக்கியம்)







5. DVD Drive







6. IDE-SATA Cables








7. Monitor



(இதில் சில வகைகள் இருக்கிறது. அவை: CRT Monitor, LCD monitor, Plasma monitor, SED monitor போன்றவை. தற்போது LCD, Plasma வகை மானிட்டர்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.)





8. VGA Cable

இந்த கேபிள்தான் Monitor, CPU ஆகியவற்றை இணைக்கும்






9. Power Cable


இரண்டு. CPU , Monitor ஆகியவற்றிற்கு மின்சார இணைப்புக்கொடுக்க






10. Mouse - Keyboard







Mouse-keyboard


11. Speaker 






12. OS CD Original 



(windows 7, windows 8, windows xp, windows vista) இவற்றில் ஏதாவது ஒரு Operation System மென்பொருள்.(os cd ரொம்ப முக்கியம்)






13. Head Set (தேவைப்படின்)




Head Set



       இவற்றை அனைத்தையும் வாங்கி முறையாக ஒன்றிணைத்து ஒரு மணி நேரத்திலேயே கணினியை இயங்க வைக்கலாம். OS போடுவதற்கு சிறிது நேரம் எடுக்கும். எப்படியிருந்தும் இரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் உங்கள் கணினியை உருவாக்கி அதில் நீங்கள் வேலை செய்ய முடியும்



இவற்றிலுள்ள நன்மைகள்:
(Benefits of Assembled Computer)




1. செலவு குறைவு.. பகுதிப் பொருட்களை நாமே வாங்குவதால் பார்த்து நல்லதாக தேர்ந்தெடுக்க முடியும்



2. குறைந்த நேரத்தில் கணினியை இயக்கிப் பார்க்கும் வசதி.. கணினியில் ஏதேனும் பழுது என்றால் முடிந்த வரை நாமே அதைத் தீர்க்க முயற்சிக்கலாம்

 .

3. Ram, மற்றும் Fan ஆகியவற்றை தூய்மைப்படுத்துவது எளிதாக இருக்கும்



4. ஏதேனும் பிரச்னை என்றால் துணிந்து அதில் கை வைக்கலாம். நம்மால் முடியாத சூழ்நிலை கணினி சரிசெய்பவரை அழைத்துக்கொள்ளலாம். பிராண்டட் கம்பெனி கம்ப்யூட்டர்களில் இவ்வாறு செய்ய முடியாது. காரணம் சர்வீஸ் சென்டர்களில் கொண்டுபோனால் இலவச சர்வீஸ் செய்யமாட்டார்கள். கணினியை திறக்காம் சீல் வைத்தப்படி அப்படியே இருந்தால் தான் இலவச சர்வீஸ் கிடைக்கும்



5. ஏதாவது பழுது என்றால் உடனே மாற்றுப் பொருள் வாங்கி பொருத்தி செயல்படுத்தலாம். ஒரு கணினியிலுள்ள பொருளை எடுத்து இயங்காத கணினிக்குப் பொருத்தி சரிபார்த்துக்கொள்ளும் வசதி. உதாரணமாக SMPS போய்விட்டது என்றால் அதை கழற்றிவிட்டு வேறொரு SMPS - மாற்றி சோதனை செய்து பார்க்கலாம்



6. மின்விசிறி இல்லாத இடத்தில் கூட வைத்து பயன்படுத்தலாம். கேபின் உள்ளே நல்ல காற்றோட்டமான இடைவெளி இருப்பதால் சூடேறுவது குறையும். இதனால் கணினியின் பாகங்கள் கெட்டுப்போக வாய்ப்புகள் குறைவு..

சராசரி பொருளாதார சூழ்நிலைகள் கொண்டவர்களுக்கு இந்த அசெம்பிள் கம்ப்யூட்டரே பொருத்தமானது


0 comments:

Post a Comment