Thursday, June 5, 2014

இல்லத்தரசிகளுக்கு எளிய டிப்ஸ்…


சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.

* அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும்.

* இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது.

* ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது.

* கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும்.

* எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது.

* குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட வேண்டும்.

* காரம், புளி, உப்பு மிகக் கெடுதல் குறைத்து கொள்வது நல்லது.

* தேங்காய் வெந்தால் கொழுப்புக் கூடும். பச்சையாக உபயோகித்தால் கூடுதலாக இருக்கிற கொழுப்பு வெளியேறி சமநிலைக்கு வந்துவிடும்.

* பொரித்த பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

* வெள்ளைச் சர்க்கரை கெடுதல் தரும். வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்ப்பது நல்லது.

* அரிசியோடு சோளம், கேழ்வரகையும் சேர்த்து இட்லி தயாரித்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.

• காய்கறிகள், கீரை வகைகளை கூடுதலாக எடுத்துக் கொண்டு உணவை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அபானாசனம்! செய்முறை!

அபானாசனம்


செய்முறை :

முதுகு தரையில் படும்படி விரிப்பில் படுக்கவும். கால்களை மடித்து சற்று உயர்த்திய நிலையில் முட்டிகளை உள்ளங்கைகளால் பிடித்துக்கொள்ளவும். இருமுட்டிகளுக்கும் இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளவும்.

பிறகு, மூச்சை வெளியே விட்டபடி முட்டிகளை மார்புப் பக்கம் கொண்டு செல்லவும். பிறகு, மூச்சை உள்ளிழுத்தபடியே பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஆறு முறை செய்யவும்.

பலன்கள்: 

வயிறு நன்றாக அமுக்கப்படுவதால் அப்பகுதி மசாஜ் செய்யப்பட்ட உணர்வு ஏற்படும். முதுகு, தோள்பட்டையில் ஆரோக்கியம் பெறும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் குறைந்து, அடிவயிற்றில் தேங்கி இருக்கும் கழிவுகள் நீங்கும். 

விஜய், விக்ரம் படங்களில் நடிக்கும் சீதா!

விஜய் மில்டன் இயக்கிய 'கோலிசோடா' படத்தில் நடித்தவர் சீதா. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்பட்டது.

'கோலிசோடா' படத்தின் மூலம் விமர்சகர்கள், திரைநட்சத்திரங்கள் எனப் பலரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது விஜய்மில்டன் - விக்ரம் இணைந்துள்ள 'பத்து எண்றதுக்குள்ள' படத்தில் சமந்தாவின் தோழியாக நடிக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி' படத்தில் அலுவலகம் செல்லும் பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறார். இதன் மூலம் விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் இடம் பிடித்துவிட்டார் சீதா.

அமுக்குவான் பேய் - உண்மையா?....


இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய்.


உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும். இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே, என்ன செய்வது? நம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு.


சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு. இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.


இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும். மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


 ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ?

அஜித்தை இயக்கும் முருகதாஸ்?

'தீனா' படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்குகிறார் முருகதாஸ் என்று சொல்லப்படுகிறது.

முருகதாஸின் முதல் படம் 'தீனா'. அஜித், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இப்படத்தில் நடித்தனர். அஜித்தை தல என்று அன்போடு அழைத்தது 'தீனா' படத்தில்தான். இன்று வரைக்கும் அஜித் தல என்று அழைக்கப்படுகிறார்.

'தீனா' படத்தைத் தொடர்ந்து 'ரமணா', 'கஜினி', 'ஏழாம் அறிவு', 'துப்பாக்கி' படங்களை இயக்கிய முருகதாஸ் இப்போது 'கத்தி' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

'கத்தி' படம் முடிந்த பிறகு மீண்டும் அஜித்தை இயக்க இருக்கிறாராம். இதுவரை சூர்யாவுக்கும், விஜய்க்கும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் முருகதாஸ்.

அந்த வகையில் அஜித்துக்கும் இரண்டாவது முறையாக படம் இயக்க உள்ளார். இன்னும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் தெரியவரும்.

பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!

கடந்த 16 ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் சூரியனும் கிரகங்களும் பூமியை சுற்றி வருகிறது என எண்ணியிருந்தனர். கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை காலரா மற்றும் பிளேக் போன்ற தொற்று நோய்கள் அழுகும் பொருட்களில் உள்ள துகள்கள் காற்றில் கலப்பதால் பரவி வருகின்றன என்று எண்ணியிருந்தார்கள். கடந்த 20 ஆம் நூற்றாண்டு வரை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக அசுத்த இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்களும் வெளியேறலாம் என்று இதை செய்து வந்தனர்.

இத்தகைய தகவல்களை உண்மை என்று நம்மை எண்ண வைத்த முன்னோர்கள் இப்போதும் உலகம் உருண்டையாக உள்ளதென்றும், ஐஸ் கிரீம்கள் நம்மை பருமனாக்கும் என்ற தவறான கருத்துக்களை நம்ப வைக்கின்றனர்.

பெருமளவில் வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இந்த காலத்தில் இத்தகைய தவறான நம்பிக்கைகளையும் நாம் கைவிட மறுக்கிறோம். இத்தகைய தவறான கணிப்புகளையும், எண்ணங்களையும் இக்கட்டுரையில் காண்போம். அதிலும் இந்த குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் முதலில் சரி என்று எண்ணிய பின் மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியால் இது தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அப்படி உண்மை என்று நினைக்கும் சில பொய்யான விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.
    
குளிர்காலத்தில் ஈரமான தலையுடன் வெளியே சென்றால் சளி பிடிக்கும்


தலையில் தொப்பி போடு அல்லது உனக்கு மிகுந்த சளி பிடிக்கும்' இப்படி எல்லா அம்மாகளும் குளிர்காலம் வந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இது சகஜம் தான். இது சம்மந்தமான பல கணிப்புக்களும் ஆராய்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. இந்த அடிப்படையில் குளிர்காலத்தில் வெளியே செல்பவர்களை விட குளிர்காலத்தை அனுபவிக்காதவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது நிருபணமான உண்மை. இதில் ஈரமான தலை அல்லது ஈரமில்லாத தலை என்றெல்லாம் எந்தவித வித்தியாசமும் கிடையாது.

   
சர்க்கரை குழந்தைகளை சுட்டியாக்கும்



அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசனின் பத்திரிக்கை குழந்தைகளையும் சர்க்கரையையும் வைத்து 23 ஆராய்ச்சி பாடங்களை வெளியிட்டது. அதன் முடிவு சர்க்கரை குழந்தையின் நடத்தையை பாதிப்பதில்லை. ஆனால் இது உண்மையானதாக நம்மில் திணிக்கப்பட்டுள்ளது.

 
உடம்பில் உள்ள சூடு தலை வழியாக இறங்கும்


98 சதவிகித உடம்பில் உள்ள சூடு தலை வழியாக இறங்குகின்றது எனவும், ஆதலால் தான் குளிர்காலத்தில தொப்பி அணிய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிற இடங்களிலும் கூறுவது உங்கள் உடம்பில் இருந்து வெளியேரும் சூட்டின் அளவு பெரும்பாலும் பரப்பளவை பொறுத்ததே - தொப்பி அணியாத தலையை விட குளிர் நாளில் விரிவடைந்த கால்கள் மூலமோ அல்லது கைகள் மூலமோ தான் அதிக சூடு வெளியேறுகிறது.
       
சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படும்


இது நியாயமானதாக தோன்றினாலும் உண்மையல்ல. சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படாது. மேலும் எந்த சான்றும் இதை நிரூபிக்கவும் இல்லை மற்றும் சிறிய ஆராய்ச்சிகள் இவற்றில் நடத்தப்படும் போது, சுடக்கு உடைக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் சுடக்கு உடைக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூட்டு வீக்கம் ஏற்படுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளிவந்தது. மருத்துவத்துறையில் சுடக்கு உடைப்பதால் எழும்பை சுற்றியுள்ள தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும் அல்லது தசை நார்கள் இடப்பெயர்வுக்கும் தான் இணைப்பு இருப்பதே தவிர சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படுவதற்கான இணைப்பு இல்லை.
   
நெப்போலியன் குள்ளமானவர்



நெப்போலியின் பிரெஞ்ச் நாட்டு அரசர். அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் பல வரலாற்று வல்லுனர்கள் தற்போது அவரது கூடுதல் உயரத்தை தந்துள்ளனர். அவர் பிரெஞ்ச் யூனிட்ஸ் பயன்படுத்தி அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று கணக்கிடபட்டுள்ளது. இந்த பிரஞ்ச் யூனிட்ஸ்சை இம்பீரியல் யூனிட்ஸ்சாக மாற்றப்பட்டால் அவரது உயரம் 5 அடி 7 அங்குலம் என்று மாறுகிறது. இந்த உயர அளவு பொதுவான பிரெஞ்ச் நாட்டு மனிதரின் சராசரி உயரத்தை விட அதிகமாவே உள்ளது.
   
உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும்

வாம் அப்' அல்லது உடற்பயிற்சிக்கு முன் கால், கைகள் மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் ஸ்ட்ரெட்ச் செய்த பின் பயிற்சியை ஆரம்பித்தால் உங்களது செயல் திறன் அதிகரிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதை மறுக்கின்றனர். ஸ்ட்ரெட்ச் செய்து பின்னர் ஓடினால் அது 5 சதவிகிதம் குறைச்சலான இயக்கு திறன் காணப்படும். அதே சமயத்தில் இத்தாலிய வல்லுனர்களின் கருத்துப்படி ஸ்ட்ரெட்ச் செய்வதால் செயல் திறன் குறைகிறது. மேலும் இந்த கூற்று சான்றுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.
     
முட்டையில் உள்ள கொழுப்பு இதயத்திற்கு கேடு விளைவிக்கும்


உணவில் சேர்க்கப்படும் கொழுப்பு வகைகளும் அது ஏற்படுத்தும் பாதிப்புக்களும் மற்றும் அதற்கான உணவு கட்டுப்பாட்டு முறைகளும், இரத்த குழாய் சார்ந்த நோயை உண்டாக்குபவை பற்றிய ஆராய்ச்சியில் 1960-ல் சிறிதளவு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உருவாகியுள்ளது. ஆனால் இதை தவறு என்று உணர்த்த மிருகங்களிடையே தேவையை விட அதிக அளவு கொழுப்பு சத்தை சேர்த்த போதும், அது உடலில் கொழுப்பை அதிகப்படுத்தவில்லை. ஆனால் சாச்சுரேட்டட் கொழுப்பை (இறைச்சிகளில் உள்ள கொழுப்புக்கள்) உட்கொள்ளும் போது தான் அதிகரிக்கிறது. ஆகையால் முட்டையில் உள்ள கொழுப்பு இதயத்தை பாதிக்காது.

நாயின் ஏழு வயது ஒரு மனித ஆண்டு


மூன்று வயது நிரம்பிய நாய்க்கு மனிதர்களின் வாழ்நாளில் 21 ஆண்டுகள் என்பது சரியா? வல்லுநர்கள் இதை தவறு என்கிறார்கள். ஒருமித்த கருத்து என்னவென்றால் மனிதர்களை விட நாய்களின் முதிர்ச்சி வேகமாக இருக்கும். 21 ஆண்டு முதிர்ச்சியை இரண்டு ஆண்டுகளில் அடைந்து பின்னர் மெதுவாக குறைந்து ஒரு வருடத்திற்கு நான்கு மனித ஆண்டாக மாறும். டாக் விஸ்பரர் சீசர் மில்லன் நாயின் மனித ஆண்டை பின் வருமாறு கணக்கிட வேண்டும் என்கிறார்: நாயின் வயதில் இரண்டை கழித்து அதை நான்கால் பெருக்கி அதோடு 21-ஐ கூட்ட வேண்டும். என்ன கணக்கு புரிந்ததா? 

ஜார்ஜ் வாஷிங்டனுக்கு மரத்தாலான பற்கள் இருந்தது


20 வயதிலிருந்தே பற்களை இழக்க நேர்ந்த முதல் அமெரிக்க ஜனாதிபதிக்கு மரத்தால் ஆன பற்கள் இருந்தது என்பது தவறான கூற்று. அவருக்கு பற்கள் விழுந்தது உண்மை தான். அவரிடம் நான்கு பொய்யான பற்கள் இருந்தது அவை தங்கம், நீர்யானை தந்தம், ஈயம், மனித மற்றும் மிருகங்களின் பற்களால் ஆனவை. அக்காலத்தில் கழுதை மற்றும் குதிரையின் பற்கள் உபயோகப்படுத்தப்பட்டன. இந்த பற்களை ஒன்றாக பிடித்துக் கொள்ள பற்களுக்கிடையே போல்ட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் திறப்பதற்கு உதவியாக ஸ்பிரிங்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை முயற்சி அவருக்கு பிடித்த உணவான மேரி வாஷிங்டனின் சுவையான ஜிஞ்சர் பிரட் ஆகியவற்றை உண்ண முடிந்தது.

அற்புதமான இணையதளங்கள்! உங்களுக்கு இதோ!

தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.

இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விடயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஒன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது.

ஒன்லைன் மூலம் பல தரப்பட்ட விடயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விடயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

ஒரு சில விடயங்களை நீங்கள் ஒன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை.

* நீங்கள் போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களா அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள ஆசை படுகிறீர்களா www.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள www.deepreview.com மற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம்.

* நீங்கள் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.

* எதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்புவர்கள் www.opencultre.com இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.

* சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் www.simplyrecipes.com மூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.

* ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.com மற்றும் www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.

* உங்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கலையையும் நீங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்க்கு நீங்கள் www.lifehacker.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.

* நீங்கள் நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்றால் www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.