Wednesday, June 4, 2014

குட்டீஸ்களுக்கு உணவு ஊட்டும் போது பொறுமை முக்கியம்!

 
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

ருசியான உணவு

குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி உள்ளிட்ட உணவுகளும், இருமுறை சிநாக்ஸ்வகையாகவும், பின்னர் ஜூஸ், பால் போன்றவகையாகவும் இருப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான உணவுகளை தயாரித்து அளிப்பது அவர்களின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்கவேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவைகளைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்கவேண்டும். பிரட், ஆப்பிள், சூப், போன்றவைகளை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள்.

சரியான அளவு

குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவிற்கு உணவு பிடிக்குமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்கவேண்டும். அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

ஊட்டச்சத்து உணவுகள்

புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா? என்பதை கவனித்து பின்னர் உணவை அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

ஜங்க் ஃபுட் வகைகளைகளை அதிகம் தருவதற்கு பதிலாக மாலை நேரங்களில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உணவுகளை பழக்கப்படுத்துவது அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழி ஏற்படும்.

பொறுமை அவசியம்

குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்டவேண்டும். குழந்தையில் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப உணவை ருசியாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள்.

ஸ்பூன் எச்சரிக்கை

இன்னும் சில குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்பூன்கள் கொண்டு உணவு ஊட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.

அதனால், எக்காரணம் கொண்டும் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.

முன் உதாரணம்

நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும். எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நம்முடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நலம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

சிம்பு-செல்வராகவன் படம் டிராப் ஆனதற்கு இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் இணையமாட்டார்கள் என்று சொன்னவர்கள் ஒரு படத்தில் இணைந்தார்கள். செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஒரு படம் நடிப்பதாக கூறிவந்த நிலையில் ’அட இதெல்லாம் நடக்காதுபா’ என்று அனைவரும் சொன்னது போல் சேர்வதற்கு முன்னாடியே இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த படத்தை தயாரிக்க முன்வந்தவர் வாயை மூடி பேசவும் படத்தினை எடுத்தவர்தான். இருவரின் நடவடிக்கைகள் தெரிந்தும் மகராசன் எப்படிதான் அந்த படத்தை தயாரிக்க முன்வந்தாரோ என எல்லோருமே ஆச்சரியப்பட்டனர்.

படபூஜையும் இனிதே ஆரம்பிக்க முதல் நாள் படப்பிடிப்பிற்கு செல்வராகவன் காலையிலேயே ஆஜரானாராம்.ஆனால் சிம்பு மாலை வரை வரவேயில்லையாம். இதனால் முதல் நாள் படப்பிடிப்பு கேன்சல். அடுத்த் நாளில் சிம்பு காலையில் வந்தாராம். ஆனால் செல்வராகவன் எஸ்கேப். முன்றாவது நாள் இருவரும் வந்தார்களாம். நம் பணத்தில் இவர்கள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறார்களே என்று நினைத்த தயாரிப்பாளர் இதற்கு மேலும் இது தொடர்ந்தால் நாம காலியாகிவிடுவோம் என நினைத்தாரோ என்னவோ இருவரையும் அழைத்து, ஐயா உங்க ரெண்டு பேரையும் பத்தி நிறைய கேள்விபட்டிருக்கிறேன்.. இப்பதான் நேருலையே பார்த்தேன். இதற்கு மேல் படப்பிடிப்பை தொடர்ந்தால் என் நிலைமையை ந்யாஆலும் காப்பாற்ற முடியாது.எனவே கிளம்புங்க என்றாராம்.

வாயை மூடி பேசவும்னு சொன்னவரையே இப்படி வாய் பேசவச்சிட்டாங்களே!!

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு…!!


திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.

இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற "துர்கானா ஏரி" கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.

மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.

இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று "என்வைட்டினெட்". இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் "திரும்ப வராது" என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.

முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்.

கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர்.

ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.

இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்' என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.

பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.

இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை

'கங்கா'(முனி-3) - சன் பிக்சர்ஸ் கையில்!!

முனி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட 'காஞ்சனாவும்' லாரன்ஸ்க்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தது.

இப்போது முனி படத்தின் மூன்றாம் பகுதியை 'கங்கா' என்னும் பெயரில் இயக்கி வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக டாப்ஸீ நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முடியும் தருவாயில் உள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்படத்தை தமிழிலும், தெலுங்கீலும் ஒரே பெயரில் வெளியிட உள்ளனர்.

தமன் இசையமைப்பில் விரைவில் பாடல்கள் மிரட்ட வரும் என எதிர்பார்க்கலாம்.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும்.

ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்….

கமலுக்கு அடுத்த பிரச்சனை ஆரம்பம்!

உலக நாயகன் படம் வருகிறது என்றால் கூடவே பிரச்சனைகளும் வந்து விடுகிறது. இவர் நடிக்கும் எல்லா படத்திற்கும் ஏதோ ஒரு வகையில் சில இடையூருக்கள் வந்து கொண்டே தான் இருக்கும். இதில் விஸ்வரூபம் சற்று உச்சத்தை தொட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

தற்போது விஸ்வரூபம் 2 முடிவடையும் தருவாயில் இருக்க, இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் உத்தம வில்லனுக்கும் பிரச்சனை ஆரம்பித்து விட்டது, 'விஸ்வரூபம்' படத்தை கமல்ஹாசன் திரையிட்ட போது அவருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்சனை உருவாகியுள்ளது. அட்வான்ஸ் கொடுத்தவர்களை விட்டுவிட்டு வேறு சிலருக்கு அவர் படத்தை திரையிட அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இப்போதே பிரச்சனைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.

உத்தம வில்லன் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே இவர்கள் வெளியிட்ட இனம் படத்திற்கே பல எதிர்ப்புகள் கிளம்பியது , தற்போது உத்தம வில்லனுக்கும் ஏதோ ஒரு வகையில் நெருக்கடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாயகனுக்கு மட்டும் எங்க இருந்து தான் கிளம்புரானுங்களோ...’

நடிகராகிறார் தோட்டா தரணி!

இந்திய சினிமாவின் பிரபலமான கலை இயக்குனர் தோட்டா தரணி. இவர் சிவாஜி, தசவதாரம், வரலாறு, சச்சின் போன்ற பல படத்திற்கு கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

தற்போது இவர் நடிகர் அவதாரமும் எடுக்கவுள்ளார். பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்த கல்யாண சமையல் சாதம் படத்தை இயக்கியவர் ஆர்.எஸ்.பிரசன்னா, இவர் சுவாமி சின்மயானந்தாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கி வருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே. ஆங்கிலத்தில் தாயரிக்கப்படும் இப்படத்திற்கு QUEST என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

இதில் சுவாமி சின்மயானந்தாவாக நடிக்க போவது தோட்டா தரணி தானாம், இப்படம் சுமார் 90 நிமிடம் ஓடக்கூடியவையாம்.