Wednesday, June 4, 2014

இடை மெலிய எளிய உடற்பயிற்சி!

இடை மெலிய எளிய உடற்பயிற்சி
இருபது வயதிலேயே இடை பெருத்து நடை தளர்ந்து போகின்றனர் இன்றைய இளம் பெண்கள். ஃபிட்டான தோற்றம் என்பது பெண்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. அதிலும் திருமணம், குழந்தைப்பேறுக்கு பிறகு, தங்களின் உடல் உருமாற்றத்தை பார்த்து பல  பெண்கள் பதட்டத்துக்கு ஆளாகின்றனர்.

மெல்லி இடைக்கான சிறப்பு பயிற்சி இதோ... முதலில் தரையில் குப்புறப்படுக்கவும். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிய நிலையில் கால்களை லேசாக அகட்டவும். பிறகு மெதுவாக மூச்சை உள் இழுத்தபடி உடம்பை மேலே உயர்த்தவும். 


முகத்தை இடது பக்கம் திருப்பி, வலது கால் பாதத்தை பார்க்கவும். பத்து எண்ணும் வரையில் அதே நிலையில் இருக்கவும். மூச்சை வெளியே விட்டபடி திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல் மூசசை உள் இழுத்தபடி வலது பக்கம் திரும்பி இடது கால் பாதத்தை பார்க்கவும். 


பத்து எண்ணியவுடன் மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதுபோல் தொடர்ந்து 10 முறை செய்யவும்.

பலன்கள்:

முதுகு வலி நீங்கும். முதுகுதண்டு வலுப்பெறும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். மலச்சிக்கல் குணமாகும். வயிற்று பகுதியில் சதை நீங்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும். தைராய்டு பிரச்சனைகளுக்கு இந்த பயிற்சி ஏற்றது.

விஜய் பிறந்த நாள் பரிசு!

விஜய் ரசிகர்களுக்கு இந்த வருடம் திருவிழா தான். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி நடிக்கும் கத்தி திரைப்படம் தீபாவளிக்கு வரும் என தயாரிப்புக்குழு தெரிவித்திருந்தது.

தற்போது முருகதாஸ் துப்பாக்கி ஹிந்தி ரீமேக்கான ஹாலிடே படத்தில் பிஸியாக உள்ளதால் கத்தி படத்தின் படப்பிடிப்பு 10 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விஜய் பிறந்தநாள் அன்று படத்தின் டீசர் வரும் என் படக்குழு அறிவித்துள்ளது, இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் அன்றைய நாளுக்காக தான் வெயிட்டிங்.

வசூலை வாரிக் குவித்த 'யாமிருக்க பயமே'

 'யாமிருக்க பயமே' U சான்றிதழோடு வெளியாகி இருந்தால் இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்திருக்கும் என்று கூறுகிறார்கள் தமிழ் திரையுலகில்.

கிருஷ்ணா, கருணாகரன், ஒவியா, ரூபா மஞ்சரி உள்ளிட்ட பலர் நடிக்க, டி.கே இயக்கத்தில் வெளியான படம் 'யாமிருக்க பயமே'. எல்ரெட் குமார் தயாரிப்பில் மே 9ம் தேதி இப்படம் வெளியானது.

படத்திற்கு U/A சான்றிதழ் அளித்தார்கள் தணிக்கை அதிகாரிகள். ஒரு வேளை படத்திற்கு U சான்றிதழ் அளித்திருந்தால் இந்தாண்டின் மாபெரும் வசூலை வாரிக் குவித்த படமாக 'யாமிருக்க பயமே' அமைந்திருக்கும் என்றார்கள்.

எப்படி என்று விசாரித்ததில், "'யாமிருக்க பயமே' படத்தினை 3 கோடியில் தயாரித்து, 2 கோடி ரூபாயை விளம்பரத்திற்கு செலவு செய்து வெளியிட்டு இருக்கிறார் எல்ரெட் குமார். முதலில் இப்படத்தினை வாங்குவதற்கு எந்த ஒரு விநியோகஸ்தரும் முன்வரவில்லை.

அதனால், எல்ரெட் குமார் சொந்தமாக வெளியிட முடிவு செய்து, தனக்கு தெரிந்த விநியோகஸ்தர்கள் மூலமாக கமிஷன் அடிப்படையில் வெளியிட்டார். படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பலர் படத்தினை இரண்டாவது முறை, மூன்றாவது முறை திரையரங்கு சென்று குடும்பத்தோடு கண்டு களித்திருக்கிறார்கள். வாரத்திற்கும் வாரம் திரையரங்கம் அதிமாகியிருக்கிறதே தவிர யாருமே திரையரங்கில் இருந்து படத்தினை தூக்கவில்லை.

திரையரங்கில் இருந்து மட்டும் தயாரிப்பாளருக்கு 8 கோடிக்கும் அதிகமாக மொத்த வசூலில் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அரசாங்கத்திற்கு வரி செலுத்திய பின்னும் 8 கோடி கிடைக்க இருக்கிறது. இப்படத்தினை Zee தமிழ் நிறுவனம் 3 கோடிக்கு வாங்கியிருக்கிறது. வெளிநாட்டு உரிமை, இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ரீமேக் உரிமைகள் என தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமன்றி திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே லாபம் கொடுத்திருக்கிறது. "இப்படம் மட்டும் U சான்றிதழோடு வெளியாகி இருக்குமேயானால் கண்டிப்பாக இன்னும் மிக அதிக லாபம் கிடைத்திருக்கும்." என்றார்கள்.

கோச்சடையானுக்குப் பின்: குவியும் படங்கள்..!



'கோச்சடையான்' வெளியான பிறகு வெளியிடலாம் என்று இருந்த படங்கள், தற்போது தொடர்ச்சியாக ஜுன் மாதத்தில் வெளியாக இருக்கின்றன.

மே 9ம் தேதி வெளியாக இருந்த 'கோச்சடையான்' திரைப்படம், 23ம் தேதி வெளியிடப்படும் என்று இறுதி நேரத்தில் அறிவித்தார்கள். அந்த நேரத்தில் 'யாமிருக்க பயமே', 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' ஆகிய படங்கள் வெளியாகி வசூலை அள்ளின.

மே 23ம் தேதி 'கோச்சடையான்' வெளியானதைத் தொடர்ந்து, தற்போது பல்வேறு படங்கள் வெளியாக தியேட்டர்கள் கிடைக்காமல் இருக்கின்றன. அந்தளவிற்கு படங்களின் வரிசை இருக்கிறது.

ஜுன் 6ம் தேதி விமல் நடிக்கும் 'மஞ்சப்பை', பிரகாஷ்ராஜ் நடித்து, தயாரித்து, இயக்கி இருக்கும் 'உன் சமையலறையில்' ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து பல படங்கள் 13ம் தேதியும், 20ம் தேதியும் வெளியாகும் என்று கூறி வந்தாலும், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியிலும், விநியோகஸ்தர்கள் மத்தியிலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

விவேக் நடிப்பில் 'நான் தான் பாலா', விஜய் சேதுபதி நடிக்கும் 'மெல்லிசை', விஷ்ணு நடிக்கும் 'முண்டாசுப்பட்டி', விக்ரம் பிரபு நடிக்கும் 'அரிமா நம்பி', ஜெயம் ரவி நடிக்கும் 'பூலோகம்', சித்தார்த் நடிக்கும் 'ஜிகர்தண்டா', விஜய் இயக்கத்தில் 'சைவம்', ஜெய் நடிக்கும் 'திருமணம் என்கிற நிக்காஹ்' உள்ளிட்ட பல படங்கள் போட்டியில் இருக்கின்றன.

மொத்தத்தில் ஜுன் மாதம் விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியிலும் கடுமையான போட்டி இருக்க போகிறது என்பது மட்டும் உண்மை.

கலப்பட உணவை கண்டறிவது எப்படி?

   கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள்  சேர்க்கப்படுகிறது.. இது தெரியாமல் அதை  காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். தவறான வழியில் காசு சம்பாதிக்க  மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது? 
                                                     இதோ பட்டியல்

         பெருங்காயத்தில்  பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற  பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.


        சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.


        ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள்  இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.


        மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில்  மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.


       மிளகாய் தூளில் மரப்பொடி ,செங்கல் பொடி,Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும்.செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml  acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.

 
      காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள்.குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.


      கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்.


       கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்.


      சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.


      நெய்யில் மசித்த உருளக்கிழங்கு,  வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.


       வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.


       ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்.


       பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்.


       பாலில்,நெய்யில்  மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும்.         பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதி செய்யலாம்        பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான  செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும்  கலப்பட பால்  எந்த அடையாளமும் ஏற்படுத்தாது  உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.


       தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள்.இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்.


       சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக  ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.


      குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.


      ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.


      நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.


      தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்.


     "கம்பு "வில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.


       இலவங்கப்பட்டையுடன் (தால்சினி)  தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.


      சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.


       தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்.


        கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய்  கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ்  நிறமுண்டாகும்.

.
      ஐஸ் கிரீமில்  வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.


    முட்டை யில்  டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டியாக விற்கிறார்கள்.


   மாத்திரைகள் மருந்து பொருட்களில் போலி மருந்துகள் நிறைய புழக்கத்தில் உள்ளது நீங்கள் வாங்கும் மருத்தினை http://verifymymedicine.com/
என்ற தளத்தில் சென்று ஒரிஜினல் தானா ,காலாவதியானதா என சோதிக்கலாம்.


      விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.

அடுத்த பேரழகன் தயார்..!

சூர்யா - ஜோதிகா இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் பேரழகன். பெரும்பாலானவர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட இப்படம், வசூலிலும்
ஜமாய்த்தது. இப்படத்தில் இடம்பெற்ற அம்புலி மாமா அம்புலி மாமா பாடல் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பேரழகன் திரைப்படத்தினை இயக்குனர் சசிசங்கர் இயக்கியிருந்தார். இவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் அடுத்த திரைப்படம்தன பகடை பகடை. திலீப்குமார் ஹீரோவாகவும், திவ்யா சிங் ஹீரோயினாகவும் நடித்துவரும் இத்திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவையினை மையமாகக் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

வி.ஆர்.டி.டி ஆர்ட்ஸ் மற்றும் விஷ்டம் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் இப்படத்திற்கு ராம்ஜி - ஏ.சி.ஜான்பீட்டர் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்காட்சிகள் மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளதாம். சிங்கமுத்து, கோவைசரளா உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புக்கள் வெளியாகலாம்.

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை.!


சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை


 காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.


எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,


முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,


எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.


எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.


எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.