Saturday, May 24, 2014

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் திரிஷா?

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் அனைவரும் விரும்பும் நடிகர் விஜய்சேதுபதி. இந்த குதிரையை நம்பி பணம் கட்டினால் கண்டிப்பாக போட்ட பணத்தை எடுத்து விடலாம் என்று சொல்வது போல், இவர் நடித்த எல்லா படங்களும் தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கேரண்டி வசூலை தந்துவிடும்.

சூதுகவ்வும் படத்திற்கு பிறகு நலன் குமாரசாமியும், விஜய்சேதுபதியும் மீண்டும் இணைய உள்ளனர். இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க போகிறார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

சமீபத்தில் திரிஷா ஒரு பேட்டியில் “தற்போது உள்ள நடிகர்களில் எனக்கு விஜய்சேதுபதியின் நடிப்பு தான் மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எறும்பு தொல்லை தீர..?

உங்க வீட்ல எறும்பு தொல்லை இருக்கா.
அது தீர ஒரு சூப்பர் ஐடியா.

ஒரு சின்ன கிண்ணத்துல சர்க்கரையோட‌ மிளகாய் பவுடர் மிக்ஸ் பண்ணி வச்சிடுங்க...
எறும்பு சர்க்கரைன்னு நினைச்சி சாப்பிடும்....
அப்போ அதோட நாக்கு காரத்துல எரியும்...

அப்போ எந்த எறும்பு தண்ணீர் தண்ணீர் தொட்டிக்கு வரும்...

நீங்க பின்னாடி இருந்து தண்ணிக்குள்ள தள்ளி விட்டுடுங்க...

எறும்பு செத்துடும்...எப்படி என் ஐடியா!!!

இந்த கடிய விட எறும்பு கடி பரவாயில்லைன்னு தோணுதோ
   

கார்த்தியுடன் இணையும் கார்த்திக்..!

 கார்த்தியுடன் இணையும் கார்த்திக்..!

குட்டிபுலி இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு கொம்பன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் கார்த்தியின் மாமனாக நடிக்க கார்த்திக்கிடம் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் கார்த்தி தாடியுடன் கிராமத்து ஆளாக நடிக்கவிருக்கிறார்

இந்தக்கதையில் முதலில் நடிக்கவிருந்தவர் அருள்நிதி ஆனால் சிலகாரணங்களால் அருள்நிதிக்குப் பதிலாக கார்த்தி நடிக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் கிடாபூசாரி மகுடி..!

தமிழ் திரை விருட்சம் சார்பாக த.தமிழ்மணி தயாரிக்கும் முதல் படம் கிடாபூசாரி மகுடி. இப்படத்தில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம்தேவ் ஆகியோரும், நாயகியாக நட்சத்திராவும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, வெவ்வாழை ராசு, போண்டா மணி, கலைராணி, கம்பம் மீனா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக ஜெயகுமார்.ஜெ அறிமுகமாகிறார். இவர் வேலு பிரபாகரன், ராம் கிரிஷ்மிர்லானி, வியாசன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் பழகுவது மட்டும் காதல் அல்ல, திருமணத்திற்கு பிறகு உருவாகும் ரத்த பந்தத்தில்தான் உண்மையான காதல் உள்ளது என்ற கருத்தை மையமாக கொண்ட இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், அரியலூர் மாவட்டம் மருங்கூர் குவாகம், தாமரைபூண்டி கிராம பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

பொம்மையாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் தான்: ராகவா லாரன்ஸ் அறிக்கை..!

"கோச்சடையான்” படம் பார்த்து ராகவா லாரன்ஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

கோச்சடையான் படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ளார் அவர் பொம்மையாக நடிப்பது பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தனர்.

ரஜினி பொமையாக நடிப்பது ரசிகர்களை திருப்திபடுத்துமா? என்றார்கள்.

படம் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி ரசிக்கிறார்கள் பொமையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

இந்த படம் சூப்பர் ஸ்டாரின் கலையுலக பயணத்தில் காலம் கடந்து நிலைத்து நிற்கும் படங்களில் ஒன்றாக இருக்கும். யாரிடமும் உதவியாளராக இல்லாமல் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் ஹாலிவுட் தரத்துடன் ஒரு தமிழ்ப் படத்தை இயக்கி இருப்பது பாராட்டுக் குரியது.

இந்த படம் வழக்கம் போல் ரசிகர்களை மட்டுமல்லாமல் குடும்பத்தினரையும் திருப்பதிபடுத்தும் புது முயற்சி இது, இந்த முயற்சி வரும் காலத்தில் இது போன்ற படங்கள் தமிழில் தயாரிக்க முன்னுதாரணமாக இருக்கும்.

பொமையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் குரல் பதிவாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்று நிரூபித்திருக்கிறார் என்று லாரன்ஸ் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

பரபரப்பு ஏற்படுத்தாத 'கோச்சடையான்!!!

ரஜினிகாந்த் படங்கள் வெளியானலே திரையுலகத்தில் மட்டும் இன்றி, தமிழகத்திலும் பெரும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அந்த வகையில் நேற்று வெளியான கோச்சடையான் படத்தைப் பொறுத்தவரை எந்தவித பரபரப்பும் ஏற்படவில்லை.

கோச்சடையான் கிரீன் மரத்தான் ஓட்டம் ஒன்றை ரஜினியின் மனைவி லதா ஏற்பாடு செய்து, தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தினார். இது போல சில நிகழ்ச்சிகளில் கோச்சடையான் படம் தொடர்பாக நடந்தாலும், படம் வெளியீட்டான நேற்றைய தினம் எந்தவித பரபரப்பும் ஏற்படவில்லை. திரையரங்குகளிலும் கூட்டம் குறைவாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

இதற்கு காரணம் 'கோச்சடையான்' அனிமேஷன் படமாக உருவாகியிருப்பது தான் என்று கூறப்படுகிறது. கதை, திரைக்கதை இரண்டிலும் கோச்சடையான் சிறப்பாக இருந்தாலும், அதை அனிமேஷன் அல்லாமல், நிஜமாக எடுத்திருந்தால் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்திருக்கும் என்றும் திரையுலகினர் சிலர் கூறிவருகிறார்கள்...

தோல்வி, தோல்வியல்ல தம்பி!

வாழ்வில் தோல்வி என்பது சாதாரணம். மனம் தளர்ச்சி அடைவது இயல்பு. அந்தத் தளர்ச்சி அடைந்த காலங்களில் நாம் ஆற அமர யோசிக்க வேண்டும். அப்போது நமக்குப் புது வழிகள் தென்படும்.

வழக்கமாக, நாம் என்ன செய்கிறோம்? பலரும் தோல்விகளைக் கண்டு சலித்துவிடுகிறோம். "இப்படித்தான் முன்பு முயன்றேன். தோல்வி கண்டேன். அங்கே போனேன், அதிலும் தோல்விதான் கிட்டியது. என் அதிர்ஷடம் அவ்வளவுதான். நான் ஒரு தோல்வியாளன்" என்று நம்மைப்பற்றி நாமே தீர்மானம் செய்துவிடுகிறோம்.

நாம் தோல்வியாளன் என்று நம்மீது நாமே முத்திரை குத்திவிடுகிறோம். ஆனால், நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம். அவ்வளவுதான்.

அப்படி எடுத்துக்கொள்ளாமல், நம் தோல்வியை எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்தோமானால், எல்லோரிடமும் அதைச் சொல்லி அழுது கொண்டிருந்தோமானால் - எதையும் சாதிக்க முடியாது! நமது நிலைமை இன்னும் மோசமாகிவிடும்!

666 மருந்து
ஒரு மருந்துக்கு 666 என்று பெயரிட்டார்கள். காரணம் 665 முறை முயன்றும் அதை அவர்களால் தயாரிக்க முடியவில்லை. ஆனால் சளைக்கவில்லை. 666-வது முறைதான் அதைத் தயாரித்தார்கள். எனவேதான் அதற்கு பெயர் "சால்வர்சான் 666".

அதேபோல, எடிசன் மின்சார விளக்கைத் தயார் செய்து கொண்டிருந்தார். அதற்கு மின்சாரம் பாய்ந்தவுடன் ஒளி விடும் ஒரு கம்பி தேவை. அதாவது மின்சார சக்தியைத் தடுத்து, ஒளியாக மாற்றும் ஒரு சுருள் கம்பி தேவை. எடிசன் எத்தனையோ உலோகக் கம்பிகளை எடுத்து முயன்றார்.. முயன்றார்.. மனம் சளைக்காமல் முயன்றார். கடைசியில் 'டங்ஸ்டன்' என்ற உலோகக் கம்பி அந்த வேலையைச் செய்தது!

தோல்வியை சமாளிப்பது எது? சளைக்காத மனம்தான்!
தோல்வியை வெற்றி கண்டது எது? விடாமுயற்சிதான்!

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்" என்பார் வள்ளுவர். ஆம், தெய்வத்தால் முடியாதது கூட, முயற்சியால் முடியும். தம்பீ ! சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவு இல்லாமல், மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்கள், விதியைக்கூட வெற்றி கொள்வார்கள் என்றும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.