Tuesday, June 3, 2014

முதுமையின் வலிகள்...


முதுமை பருவம் குழந்தை பருவத்துக்கு சமம் என்பார்கள். உடல், மன வேதனைகளை குழந்தைகளுக்கு எப்படி சொல்ல தெரியாதோ அதே மாதிரி  தான் முதியவர்களுக்கும். 2020ல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள். அதில் இந்தியாவில் மட்டுமே 142 மில்லியன் பேர்  என்கிறது உலக சுகாதார நிறுவனம். வயதானவர்கள் அதிகமாக, ஆக அவர்களின் உடல் நலப்பிரச்சனைகளும் அதிகரிக்கவே செய்யும்.

65 வயசுக்குப்பிறகு ஆண்களும், பெண்களும் அதிக வலிகளால அவதிப்படறாங்க. அவங்களோட வலிகள், மத்தவங்களோடவலிகள் லேர்ந்து முற்றிலும்  மாறுபட்டது. அதுக்கான அணுகுமுறை, சிகிச்சைனு எல்லாமே வேறு என்கிற வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார் வயோகத்தால வரக்கூடிய வலி  திசுக்களோட தேய்மானம், பலவீனத்தால வரக்கூடியது.

ரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு மூட்டுப்பிரச்சனைனு, வேற நோய்களோட விளைவால் வரக்கூடியது, தனிமை, வாழ்க்கையைப்பத்தின பயம்,  வருமானம், இல்லாததுனு வேற காரணங்களால உணரப்படற வலி புற்றுநோயால வரக்கூடிய வலி... இதெல்லாம் வயசானவங்களோட வலிக்கான  காரணங்கள். 65 வயசுக்குப் பிறகு புற்றுநோய் தாக்கற ஆபத்து அவங்களுக்கு அதிகம்.

இவங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அத்தனை சுலபம் இல்லை.. சிகிச்சைக்கு ஓத்துழைக்க மாட்டாங்க. காது கேட்காதது, கவனமின்மை, மறதி,  மனரீதியான பிரச்சனைகள்னு பல காரணங்களால சிகிச்சைகளை பத்திப் புரிஞ்சிக்கிற சக்தி அவங்களுக்கு இருக்காது. உடற்பயிற்சி, பிசியோதெரபி  மாதிரியான விஷயங்களுக்கும் ஒத்துழைக்க மாட்டாங்க. ரொம்ப பொறுமையோடத்தான் அவங்களை அணுகணும் என்கிற டாக்டர் குமார், மூட்டு வலி,  தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, காலட எரிச்சல், புற்றுநோய் வலி ஆகியவையே முதியவர்களிடம் காணப்படுகிற வலிகள் என்கிறார்..

ஏற்கனவே அவங்களுக்கு ஏதாவது நோய் இருந்தா, வலிகளுக்கான மருந்துகளை கொடுக்கிறப்ப, அதிக பட்ச கவனம் தேவை.. எல்லா மருந்துகளும்  அவங்களுக்கு ஒத்துக்காது. நோயோட தன்மை, அவங்களோட உடல் மற்றும் மனநிலையை தெரிஞ்சிக்கிட்டு தான் மருந்துகள் தரணும். 60 வயசுக்கு  மேலானவங்க எக்காரணம் கொண்டும், எந்த வலிக்கும் சுய மருத்துவம் செய்யவே கூடாது.

மருந்து கொடுத்து சரி செய்ய முடியாதுங்கிற வலிகளுக்கு கவுன்சிலிங்கும், உளவியல் ரீதியான தெரபிகளும் தேவைப்படலாம். பிசியோதெரபி  செய்யறது மூலமா வலியோட தீவிரம் அதிகமாகிறதைத் தவிர்க்கலாம்.  சிலவலிகளுக்கு அறுவைசிகிச்சை தான் தீர்வா இருக்கும். ஆனா வயோதிகம்  காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது, மருந்துகளும் தர முடியாதுங்கிற நிலைமையில உள்ளவங்களுக்கு, வலி நிர்வாக கிளினிக்கை  அணுகி, சிறப்பு வலி நிவாரண சிகிச்சைகள் கொடுக்கிறது பலன் தரும் என்கிறார். 

கருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்த நாளைக் கொண்டாடிய இசைஞானி!

உண்மையில் இளையராஜா பிறந்தது ஜூன் 3-ம் தேதிதான். இதே தேதியில்தான் கருணாநிதியின் பிறந்த நாளும் வருகிறது. முன்பெல்லாம் இளையராஜா தன் பிறந்த நாளை பொதுவில் கொண்டாடாமல் இருந்தார்.

 அந்த நாளில் அவர் திருவண்ணாமலையிலோ அல்லது மூகாம்பிகைக் கோயிலிலோ இருப்பார். ஆனால் திரையுலகினரும் அவரது நண்பர்களும் அவர் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியபோது அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனையுடன். அப்போது கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த நேரம். அவருக்கும் ஜூன் 3-ம் தேதிதான் பிறந்த நாள். அவரது பிறந்த நாளுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட வேண்டாம் என்ற நோக்கில் தன் பிறந்த நாளை முன்கூட்டியே கொண்டாடிவிடலாம் என்ற யோசனை சொன்னார் இளையராஜா.

அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஒரு நாள் முன்பே தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இளையராஜா. கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த வழக்கத்தை அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை. கடந்த ஆண்டு பிறந்த நாளன்று இதுபற்றி இளையராஜா கூறியதை இங்கே தருகிறோம்: "உண்மையில் இன்று எனக்குப் பிறந்த நாள் கிடையாது.

 ஒரு நாள் முன்கூட்டியே கொண்டாடுகிறேன். ஜூன் 3-ம் தேதிதான் எனக்குப் பிறந்த நாள். ஆனால் அன்று முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் வருகிறது. அந்த தினத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாமே என்பதற்காகத்தான் நான் ஒரு நாள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவேன். இந்த முறை உங்கள் அன்பு இங்கே இருக்கும்படி ஆகிவிட்டது!"


இன்னும் எத்தனைவாட்டிதான் பூஜாவுக்கு கல்யாணம் பண்ணிப் பார்ப்பாங்களோ!

நடிகை பூஜாவுக்கு திருமணமாகிவிட்டது என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுபுதுப்புது விதமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு அழகு சாதனை கடைத் திறப்புக்கு வந்து நின்றார் பூஜா. கேட்டால், திருமணமா.. எனக்கா... நான் பாட்டுக்கு பெங்களூரில் என் பெற்றோர் விருப்பப்படி அவர்களுடன் இருந்தேன் என்றார்.

 அடுத்த ஒரு ஆண்டில், பாலா இயக்கிய பரதேசியில் நடிக்க வந்த வாய்ப்பைக் கூடத் துறந்துவிட்டு, விடியும் முன் என்ற படத்தில் நடித்தார். நல்ல பலன். படம் ஹிட். பூஜாவுக்கு நல்ல பெயர். தொடர்ந்து நல்ல கதைகள் வந்தால் நடிப்பைத் தொடர்வதாகக் கூறி வந்தார்.

 இந்த நேரத்தில்தான் திடீரென அவருக்குத் திருமணம் நடந்ததாக செய்திகள் பரவின கடந்த இரு தினங்களாக. அவருடன் யாரோ ஒரு இளைஞர் நிற்க, கைகளில் மாலையுடன் பூஜா. ஆனால் இதனை அடியோடு மறுத்துள்ளார் பூஜா. தான் நடிக்கும் ஒரு படத்தின் காட்சி இது என்றும், அந்த இளைஞர் தன் நண்பர் மட்டும்தான் என்றும் பூஜா தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

 இப்படித்தான் சில தினங்களுக்கு முன் இன்னொரு நடிகை, இதே போல மாலையும் கையுமாக நிற்க, உடனே அவருக்கு திருமணம் என்று செய்தியைக் கிளப்பிவிட்டார்கள் சிலர். அப்புறம்தான் தெரிந்தது, அதுவும் ஒரு படத்தின் காட்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று!


மொத்தத்தில் கல்பனா ஹவுஸ் திகில் வீடு - திரைவிமர்சனம்!

படத்தின் நாயகனான வேணுவுக்கு போலீஸ் வேலை. அவரது மனைவியாக நாயகி மதுஷாலினி. நாயகன் தனது குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் சதா போலீஸ் வேலையே கதி என்று கிடக்கிறார். ஒரு நாள்  நாயகி எங்காவது பிக்னிக் செல்லலாம் என்று நாயகனிடம் கூறுகிறார். அப்போது புதிதாக வாங்கிய பண்ணை வீட்டுக்கு செல்லலாம் என முடிவெடுத்து அனைவரும் அங்கு செல்கின்றனர். அந்த பண்ணை வீட்டுக்கு அருகே ஒரு கல்லறை இருக்கிறது. அனைவரும் அந்த வீட்டில் தங்கியுள்ளபோது நாயகிக்கு மட்டும் பேய் நடமாடுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதற்கேற்றவாறு பொருட்கள் கீழே விழுவது போன்ற நிகழ்வுகள் நடப்பதும், நாயகியின் பின்னால் பேய் நடப்பது போல் உருவம் காணப்படுகிறது.

வீட்டுக்குள் ஆவி நடமாடுவதாக நாயகி தெரிவிக்க அதை அனைவரும் நம்ப மறுக்கின்றனர். இந்த நிலையில் வேலைக்கு வருமாறு நாயகனுக்கு அவரச அழைப்பு வருகிறது. இதனால் அந்த வீட்டை விட்டு நாயகன் வெளியே கிளம்புகிறார். நாயகன் வீட்டை விட்டு சென்றவுடன் தனது தோழியிடம் வீட்டில் ஆவி நடமாட்டம் இருப்பதாக நாயகி கூறுகிறார். உடனே தோழியின் உதவியுடன் நாயகி சாமியார் ஒருவரை அணுகுகிறார். அவர் வீட்டில் பரிகாரம் செய்து பேயை விரட்டலாம் என்கிறார்.

அதன்படி சாமியார் வீட்டில் பூஜை செய்து கொண்டிருக்கும் போதே வீட்டின் காவலாளி இறந்து விடுகிறார். உடனே சாமியார் வீட்டில் ஆவி நடமாட்டம் இருப்பது உண்மை தான் என்று கூறுவதுடன் வரும் அமாவாசை அன்று பூஜை செய்து பேயை விரட்டிவிடுகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.

இந்த நிலையில் வேலை நிமித்தமாக வெளியே சென்ற நாயகன் மீண்டும் பண்ணை வீட்டுக்கு திரும்புகிறார். அவர் வீட்டில் என்ன நடந்தது என கேட்கிறார். நாயகி நடந்த சம்பவம் அனைத்தையும் கூறுகிறார். இதை கேட்ட நாயகன் உடனே அங்கிருந்து கிளம்பி விடலாம் என்று கூறுகிறார். அப்போது நாயகியின் உடலுக்குள் புகுந்துவிடும் ஆவி நாயகனை நோக்கி உன்னை விடமாட்டேன் என்கிறது.

ஆவி நாயகனை பழிவாங்கியதா? அந்த ஆவி யார்? எதற்காக அது நாயகனை பழி வாங்க நினைக்கிறது என்பதே மீதிக்கதை. இப்படத்தில் நாயகனாக நடிக்கும் வேணு போலீஸ் வேடத்தில் மிடுக்காக வந்து கலக்குகிறார். ஆனால் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. நாயகி மது ஷாலினி அழகாகவும், பேயை கண்டு மிரளும் காட்சியில் பயந்தவராகவும் அருமையாக நடித்திருக்கிறார். படத்திலுள்ள மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை கச்சிதமாக செய்துள்ளனர்.

படத்தின் பின்னணி இசை அசத்தலாக இருக்கிறது. படத்தின் இயக்குநர் பேயை பற்றிய படம் என்பதால் பெரும்பாலான காட்சிகளை இருட்டிலேயே எடுத்துள்ளார். திகில் காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். பேயை காண்பிக்காமலேயே வெவ்வேறு காட்சிகளின் மூலம் பேய் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் தேவையில்லாத ஒரு சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சியும் மிக நீளமாக அமைந்து ரசிகர்களை நெளிய வைக்கிறது. படத்தில் பண்ணை வீடும், கல்லறை சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பற்றுள்ள போது திடீரென்று பாழடைந்த வீடு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.

சூர்யா தரப்பினரால் எனது உயிருக்கு ஆபத்து - இயக்குனரின் பரபரப்பு புகார்

சரவணன் என்கிற சூர்யா படத்தை எந்த நேரத்தில் ஆரம்பித்தாரோ ராஜ சுப்பையா.பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை.கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் ஆதரவு வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார்.அதனை நாம் வெளியிட்டிருந்தோ. தற்போது சூர்யா குடும்பத்தாரால் எனது உயிருக்கு ஆபத்து என்று பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:

சரவணன் என்கிற சூர்யா, என்ற பெயரில் நான் சினிமா படம் தயாரித்து, இயக்கி, நானே கதாநாயகனாகவும் நடித்துள்ளேன். இந்த படத்தின் தலைப்பை முறையாகவும் பதிவு செய்துள்ளேன். இந்த சூழ்நிலையில் படத்தின் தலைப்பை மாற்றச்சொல்லி, நடிகர் சூர்யா தரப்பில் இருந்து எனக்கு வற்புறுத்தல் வந்தது.

நான் படத்தின் தலைப்பை மாற்ற மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அடியாட்கள் மூலம் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. படத்தையும் வெளியிட விடாமல் தடுத்துவிட்டனர். நடிகர் சூர்யா தரப்பினரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு முருகராஜா புகார் தெரிவித்துள்ளார்.

இட்லி, தோசை மாவில் பயங்கர கலப்படம்..!


தென்னிந்தியர்களின் உணவில் இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளில் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரைண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவாகி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.

சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அரை கிலோ பாக்கெட் மாவு ரூ.30. பாக்கெட்டுகளில் விற்கப்படும் மாவுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம்.

தயாரிக்கப்பட்ட இடம், தரம், சேர்க்கப்பட்டுள்ள அரிசி, உளுந்து விகிதம் என அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவு தரமான உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை. ஆனால், இந்த நிபந்தனைகளை பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியே. இம்மாவில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம், பிளீச்சிங் பவுடர், ஒயிட் கெமிக்கல்ஸ் போன்றவை கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இவ்வாறு கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குடிசை தொழில் போல் பெருகி வரும் மாவு விற்பனை தொழிலை முறைப்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரமான முறையில் தரமான மாவு பொது மக்களுக்கு கிடைக்க அதிகாரிகள் முயற்சிக்கவேண்டும்.

மதுரை மருத்துவக்கல்லூரி ஓய்வு பெற்ற நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில் ‘இட்லி, தோசை மாவு தரமான அரிசி, உளுந்து கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விற்கப்படும் போது யாருக்கும், எவ்வித பாதிப்பும் கிடையாது. மாவு தயாரிக்க நல்ல தண்ணீர் அல்லது மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுவது அவசியம்.

மாவு தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்கள் வரை தான் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியும். அதற்கு மேல் கெட்டுப் போய் விடும். இம்மாதிரியான சூழலில் மாவு தயாரிக்கும் அனைவரும் தரமான அரிசி, உளுந்துகளை பயன்படுத்துகிறார்கள் என சொல்ல முடியாது. கடைகளில் மக்கி போன, பூஞ்சை படர்ந்த அரிசி, உளுந்து போன்றவை மாவு தயாரிப்பவர்களுக்காக மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு கிலோ இட்லி அரிசி ரூ.35 என்றால் காலாவதியான அரிசி கிலோ ரூ.5 முதல் ரூ.10க்கு கிடைக்கிறது. அதே போல் உளுந்து கிலோ ரூ.70 என்றால் இந்த உளுந்து அதிகபட்சம் கிலோ ரூ.20 தான். தற்போது கிடைக்கும் விலையில்லா அரிசியைக் கொண்டு குறைவான செலவில் அதிக லாபம் ஈட்டலாம். மாவு வெண்மையாக, பஞ்சு போல் இருப்பதற்காக சிறிதளவு சுண்ணாம்பு, பிளீச்சிங் லிக்குவிட் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அரைத்தவுடன் புளிப்பதற்கு ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.

மாவு தயாரிக்கும் அனைவரும் இம்மாதிரியான முறைகளையே பின்பற்றுகின்றனர் என்று சொல்ல இயலாது. பெரும்பாலானவர்கள் குறிப்பாக வீடுகளில் மாவு தயாரிப்பவர்கள் சுகாதாரமான முறைகளை பின்பற்றுவது கடினம்.  மினரல் வாட்டரை மாவு தயாரிக்கும் அனைவருமே பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவு. தயாரிக்கப்படும் கிரைண்டர், இடம் சுகாதாரமான முறையில் இருக்கிறதா? என்பதும் கேள்விக்குறியே. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவுகளை உண்ணும் போது  உடனடியாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும். கொஞ்சம், கொஞ்சமாக எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும்.

சரியான முறையில் அரிசி, உளுந்து கழுவப்படாமல் இருந்தால் நீரில் பரவும் நோய்களான டைப்பாய்டு, காலரா, போன்றவை வர வாய்ப்புள்ளது. இதனையே தொடர்ந்து பயன்படுத்தும் போது தோல் சம்மந்தமான வியாதிகள், குடல் பாதிப்புகள், உணவு விஷமாதல்(புட் பாய்சன்) ஏற்படும். செறிமான கோளாறு, அடிக்கடி வயிறு வலி, வயிறு எரிச்சல் வரும். பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். வெளியில் மாவு வாங்குவதை தவிர்ப்பதன் மூலமே இம்மாதிரியான நோய்களை தடுக்க இயலும்‘ என்றார்.

மாவு விற்பனை மூலம் அதிக லாபம்

வீடுகளில் மாவு விற்பனை செய்யும் சாந்தி கூறியதாவது: ‘ஒரு படி ரேஷன் அரிசிக்கு, கால் கிலோ ரேஷன் உளுந்து பயன்படுத்துவோம். ஒரு டீஸ்பூன் வெந்தயம் போடுவோம். ரேஷன் அரிசி இலவசமாக கிடைக்கிறது. ரேஷன் உளுந்து ஒரு கிலோ ரூ.30 தான். அப்போது கால் கிலோ உளுந்து ரூ.7.50. இதனை அரைக்க ஒரு யூனிட் கரன்ட் தான் செலவாகும். ஆக மொத்தம் ஒரு படி மாவு அரைக்க தயாரிப்பு செலவு ரூ.10 தான். மாவு பஞ்சு போல் சாப்ட்டாக வருவதற்கு கொஞ்சம் ஆப்ப சோடா சேர்த்துக்கலாம். ரேசன் பச்சரிசி பாதி, ரேஷன் புழுங்கல் அரிசி பாதி சேர்த்தால் மாவு வெள்ளையா தான் இருக்கும். நல்லா கழுவிட்டா வாடையே இருக்காது. இந்த மாவை ஒரு கப் ரூ.20க்கு 5 பேருக்கு விற்கலாம். ஒரு நாளைக்கு எப்படியும் 5 படி அரைச்சு விற்போம். இதனால் குறைந்தது ரூ.400 லாபமாக கிடைக்கும்‘ என்றார்.

புகார் வந்தால் நடவடிக்கை உறுதி

மதுரை மாவட்ட உணவு மற்றும் மருந்தியல் பாதுகாப்பு நிர்வாக அலுவலர் டாக்டர் சுகுணா கூறியதாவது: ‘மதுரை மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் உணவு பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 8 ஆயிரம் பேர் இட்லி, தோசை மாவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடைகளில் பாக்கெட் செய்து இட்லி தோசை மாவு விற்பனை செய்பவர்கள் எங்களிடம் பதிவு செய்துள்ளனர். அவர்களின் தயாரிப்பு இடம், தயாரிப்பு முறை, பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தையும் ஆய்வு செய்து உரிமம் வழங்கியிருக்கிறோம். வீடுகளில் மாவு தயாரிப்பவர்களையும் எங்களிடம் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் யாரும் முன்வருவது இல்லை. மேலும், சுகாதாரமான முறையில் எவ்வாறு மாவு தயாரிக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.  புகார் பெறப்பட்டால் மாவு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு, கலப்படம், சுகாதாரமின்மை கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

3 வருடம் சிறை தண்டனை உண்டு

நுகர்வோர் கண்காணிப்பகத்தின் தலைவர் வக்கீல் பிறவிப்பெருமாள் கூறுகையில், கலப்பட தடைச் சட்டம் மற்றும் உணவுப்பொருள் தர நிர்ணயம் சட்டப்படி புகாருக்குள்ளான உணவுப்பொருளின் மாதிரி எடுக்க வேண்டும். 14 நாட்களுக்கு பகுப்பாய்வு செய்து அதன் முடிவை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கொடுக்க வேண்டும். ஆய்வு முடிவின் அடிப்படையில் இருவிதமான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தால் மாஜிஸ்திரேட் கோர்ட் மூலம் வழக்கு நடைபெறும். இதில் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். அடுத்த நிலையில் டிஆர்ஓ கோர்ட் மூலம் வழக்கு நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலப்பட தடுப்பு பிரிவிற்கு என தனியாக நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

நான் டப்பிங் கொடுப்பதை நாகேஷ் ரசித்துப் பார்ப்பார்: ‘நாகேஷ்’ கிருஷ்ணமூர்த்தி

 இந்தியாவின் முதல் சலனப் பதிவாக்க தொழில்நுட்பத்தில் (மோஷன் கேப்சர்) உருவாக்கப்பட்டுள்ள ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் சம்புமித்ரர் கதாபாத்திரத்தில் நடிகர் நாகேஷை வடிவமைத் திருக்கிறார்கள். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த கதாபாத்திரத்துக்கு நாகேஷின் 30 ஆண்டுகால நண்பர் கிருஷ்ணமூர்த்தி தன் குரலால் உயிரூட்டியிருக்கிறார். தங்களது ‘நட்புக்காலம்’ பற்றி உற்சாகமாக பேசுகிறார், ‘நாகேஷ்’ கிருஷ்ணமூர்த்தி.

நான் இன்ஜின்ல ஏறிட்டேன்

நாகேஷ் நடித்த ‘மின்னலே’, ‘ரிதம்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘காதல் கொண்டேன்’, ‘தசாவதாரம்’ படங்களில் நான்தான் அவருக்கு டப்பிங் கொடுத்திருப் பேன். பெரும்பாலும் என்கூடவே இருந்து நான் டப்பிங் கொடுப்பதை ரசித்து பார்த்துக்கொண்டிருப்பார். அவர் நடித்த தெலுங்கு படங்களின் தமிழ் டப்பிங் முழுக்க நான்தான். நாங்கள் இருவரும் நெருக்கமானது மேடை நாடங்களில்தான். என் அம்மா கையால் சாப்பிடுவதை நாகேஷ் ரொம்பவே விரும்புவார். ‘என் நண்பன் கிருஷ்ணமூர்த்தியின் திறமையை பாராட்டுவது நானே என் முதுகை தட்டிக்கொள்வதுபோல’ என்று என் அம்மாவிடம் அடிக்கடி சொல்வார் நாகேஷ். நாடகம், சினிமா என்று நாகேஷ் பிஸியாகத் தொடங்கியபோது “ரயிலில் ஏறும்போது நான் இன்ஜின்ல ஏறிட்டேன். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட என் நண்பர்கள் எல்லாம் 4 பெட்டி பின்னாடி ஏறிட்டாங்க’’ என்று நண்பர்கள் கூடி அரட்டை அடிக்கும்போது சொல்லி சிரிப்பார். எதார்த்தம், அன்பு இதெல்லாம் நாகேஷிடம் கொட்டிக்கிடக்கும்.

நாகேஷிடம் சண்டை பிடிப்பேன்

நான் சுங்கதுறையில் பணியாற்றியவன். சினிமாவை நம்பி வேலையை விட மனமில்லாமலேயே முழுக்க சினிமாவுக்குள் குதிக்காமல் இருந்து விட்டேன். நானும் நாகேஷும் மௌலியோட நாடகங்களில்தான் அதிகம் சந்திக்கும் சூழல் உண்டாகும். அப்படி யான சூழலில் தான் எங்கள் முதல் சந்திப் பும் நடந்தது. படத்தில் ஒப்பந்தமாகும்போதே அந்த படக்கம்பெனிக்கு போன் செய்து என்னை வைத்து டப்பிங்கை முடித்துவிட சொல்லிவிடுவார், நாகேஷ்.

‘காதல்கொண்டேன்’ படத்துக் காக டப்பிங் கூப்பிட்டபோது, ‘போப்பா நடிக்குறதுக்கு லட்ச லட்சமா பணம் கொடுக்குறாங்க. டப்பிங் பேசும் எனக்கு என்ன பெரிதாக பணம் கொடுக்குறாங்க’ என்று நாகேஷிடம் சண்டை போட்டேன். அதைக்கூட நாகேஷ் ரசிக்கத்தான் செய்தார். ‘மின்னலே’ படம் எடுத்தபோது புகைப்பழக்கத்தால் தொடர்ச்சியாக இருமல் தொந்தரவுக்கு ஆளாகி ‘என்னால ஒரு இடத்தில் கூட டப்பிங் கொடுக்க முடியாது. கிருஷ்ணமூர்த்தி எங்க இருக்கான்னு புடிங்க’ என்று அக்கறை

யோட சொன்ன அவரும், நானும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகால நண்பர்கள். ரெண்டு பேருமே ‘போடா, வாடா’ என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நண்பர்கள். இயற்கையே எங்க ரெண்டு பேரோட குரலையும் ஒரே மாதிரி அமைத்துக் கொடுத்து நண்பர்களாகவும் ஆக்கியது நான் செய்த பாக்கியம்.

‘பிரமாதம்டா’ கிருஷ்ணா

‘தசாவதாரம்’ படத்தில் நாகேஷ் நடித்தபோது அவரது உடல் அவ்வளவாக ஒத்துழைக்கவில்லை. அந்தப் படத்துக்காக டப்பிங் கொடுத்த அனுபவம் ரொம்பவே சுவாரஸ்யம்.

நாகேஷ் படத்தைப் பார்த்துவிட்டு ‘பிரமாதம்டா கிருஷ்ணா’ என்று பாராட்டி னார். இன்று என்னைப் பாராட்ட அவர் இல்லாமல் போனது பெரும் சோகம்.

மேடை நாடகங்களில் நடித்து வந்த நான் ‘பாபு’ படத்தில்தான் முதன் முதலாக சினிமாவுக்கு வந்தேன். கமல் நடித்த ‘மீண்டும் கோகிலா’ படத்தில் ஸ்ரீதேவிக்கு அண்ணனாக நடித்திருப்பேன். அந்த நேரத்தில் இருந்தே கமல் என் நண்பர்.

ரஜினியின் பாராட்டு

‘கோச்சடையான்’ படத்திற்கு டப்பிங் கொடுத்தது ரொம்பவே திரில்லான அனுபவம். காட்சி பின்னணி இல்லாமல். இந்த இடத்துக்கு நாகேஷ் இப்படித்தான் வெளிப்படுத்தி இருப்பார் என்று ஒவ்வொரு தடவையும் பேசிப் பேசி கே.எஸ்.ரவிக்குமாரிடம் காட்டுவேன். இந்த படத்துக்கு டப்பிங் கொடுப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஒவ்வொன்றையும் வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டுபோய் சௌந் தர்யா அவங்க அப்பா ரஜினியிடம் போட்டு காமிப்பாங்க. அவர் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்ததாக வந்து சௌந்தர்யாவும் ரவிக்குமாரும் சொல்லியிருக்காங்க.