Tuesday, June 3, 2014

கோச்சடையான் வசூலில் தோல்வியை சந்திக்குமா.?

 'கோச்சடையான்' படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு வசூலில் வெற்றி வாகை சூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில், மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படம் 'கோச்சடையான்'. கே.எஸ்.ரவிகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுத செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தினை மீடியா ஒன் நிறுவனம் தயாரித்தது. ஈராஸ் நிறுவனம் வெளியிட்டது.

இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் 3 நாட்களில் 42 கோடி வசூல் செய்ததாக படத்தினை வெளியிட்ட ஈராஸ் நிறுவனம் தெரிவித்தது. 'கோச்சடையான்' படத்தின் இறுதிக் காட்சியில் அடுத்த பாகத்திற்கான அறிகுறிகள் தெரிந்தன. தற்போது படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் அதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்

"கிடைத்த நேரத்திலும், பட்ஜெட்டிலும் 'கோச்சடையான்' படத்தினை பண்ணினோம். இன்னும் நன்றாக பண்ணி இருக்கலாம். 'கோச்சடையான்' அடுத்த பாகத்தில் அதிக சிரத்தை எடுத்து பணியாற்றுவோம்.

மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் என்பது இந்திய ரசிகர்களுக்கு புதிது. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் படத்தினை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், இந்தி ரசிகர்கள் இந்த தொழில்நுட்பத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. வட இந்தியாவில் 'கோச்சடையான்' படத்திற்கு வரவேற்பு இல்லை என்பது உண்மை தான்.

தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திக்கு போட்ட முதலீட்டை எடுக்க எதிர்பார்த்த நாட்களை விட அதிகம் தேவைப்படுகிறது. ஆனால், நாங்கள் முதலீடு செய்த பணத்தினை எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்" என்று முரளி மனோகர் தெரிவித்து இருக்கிறார்.

தயாரிப்பாளரின் இந்த பேச்சால் 'கோச்சடையான்' படத்தின் வசூல் வெற்றியா, தோல்வியா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

''கத்தி'' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லையாம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும், ''கத்தி'' படத்தில் தற்போது இரண்டு வேடங்களில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். ஒரு வேடம் என்றாலே அவரை பரபரப்பு தொற்றிக்கொள்ளும், ஆனால் இந்த படத்தில் ஹீரோவும் அவரே, வில்லனும் அவரே என்பதால் ஏகப்பட்ட பிசியில் விஜய் வட்டாரம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அடுத்தபடியாக சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் பட வேலைகளும் இன்னொரு பக்கம் சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார் சிம்புதேவன். ஆனால், அவர்கள் கேட்ட சம்பளம் தலைசுற்ற வைத்து விட்டது. அதனால், இப்போது ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோரிடம் பேசியிருக்கிறார்கள்.

அதேப்போல், முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்கும் முடிவில்தான் இருந்தார்கள். ஆனால், வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படத்துக்கு பல மாதங்களாக பாடல்களை கொடுக்காமல் அவர் இழுத்தடிப்பதைப்பார்த்தவர்கள, இப்போது தேவிஸ்ரீ பிரசாத்தை ஒப்பந்தம் செய்து விட்டனர்.

தமிழில், சிங்கம், சிங்கம்-2, மன்மதன் அம்பு உள்பட பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த அவர், விஜய் நடித்த சச்சின் படத்துக்கும் இசையமைத்திருந்தார். ஆக, இப்போது இரண்டாவதாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.

போலி மின்னஞ்சலை கண்டுபிடிப்பது எப்படி ?


நம்மை எளிதாக ஏமாற்ற இணையத் திருடர்கள் பயன்படுத்துவது மின் அஞ்சல்களே. "நைஜீரியாவில் கணவர் விட்டுச் சென்ற பல கோடி டாலர்களை மீட்க உதவி செய்தால், உங்களுக்கு பத்து சதவீத டாலர் பணம், மரணத்தின் இறுதியில் உள்ளதால், என்னிடம் உள்ள பணத்தை ஏழைகளுக்கு வழங்க உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன், முகவரி, வங்கிக் கணக்கு தந்தால், பணத்தை அனுப்புவேன்' என்றெல்லாம் நம்மை ஏமாற்றும் அஞ்சல்களை நாம் அடிக்கடி பெறலாம்.


இப்போதெல்லாம், இது போன்ற ஸ்கேம் மெயில்களை வடிகட்டி, ஸ்கேம் மெயில் போல்டருக்கு அனுப்பும் தொழில் நுட்பத்தை கூகுள் போன்ற மின் அஞ்சல் தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும், சில அஞ்சல்கள், இவற்றின் பிடியில் சிக்காமல், நம்மை வீழ்த்தப் பார்க்கின்றன. அப்படிப்பட்ட ஓர் அஞ்சலைப் பெற்றால், சந்தேகம் ஏற்பட்டால், என்ன செய்வது?


இந்த வகையில் நமக்கு உதவ ஓர் இணைய தளம் இயங்குகிறது. வந்திருக்கும் அஞ்சலில் உள்ள சில சொற்களை, இந்த தளத்திற்கு அனுப்பினால், அது சோதனை செய்யப்பட்டு, நமக்கு அது ஸ்கேம் வகை அஞ்சலா அல்லது வழக்கமான அஞ்சலா என்று தெரிவிக்கிறது. இந்த தளத்தின் இணைய முகவரி  jasonmorrison.net


இந்த தளமானது கூகுளின் தேடல் இஞ்சின் ஒன்றைப் பயன்படுத்துகிறது. இந்த தேடல் இஞ்சின், ஏற்கனவே ஸ்கேம் மற்றும் திருட்டு முயற்சிகளுக்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் தளங்கள் மற்றும் சில குழு தகவல் தளங்களின் உதவியுடன், வந்திருப்பது ஸ்கேம் மெயிலா எனக் கண்டறிகிறது. இந்த தளத்தை அடைந்தவுடன், தேடல் கட்டத்தின் கீழாக உள்ள LEARN MORE என்ற லிங்க்கில் கிளிக் செய்து, கிடைக்கும் தகவல்களைப் பாருங்கள். இந்த தளம் ஏற்பட்டதன் நோக்கம் என்ன, என்ன வகையில் உங்களுக்கு உதவுகிறது என்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.


எனக்கு வந்த மெயில் ஒன்றில், ரொஸட்டா என்ற பெயரில் விலை உயர்ந்த மரகதக் கல் ஒன்று குறைந்த விலைக்குக் கிடைப்பதாக தகவல் இருந்தது. அப்படியே அதன் முக்கிய சொற்களைக் காப்பி செய்து, இந்த தளத்தில் போட்டு கிளிக் செய்த போது, சில விநாடிகளில் தகவகள் கிடைத்தன. இது போன்ற ஸ்கேம் மெயில்கள் எங்கெல்லாம் அனுப்பப் பட்டுள்ளன என்ற தகவலும் கிடைத்தது. இனி, எந்த சந்தேகம் தரும் மெயில் வந்தாலும், அதனை இந்த தளத்தின் உதவியுடன் சோதனை செய்து, அதன் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளுங்கள்.

‘உத்தம வில்லன்’ படத்தில் 21 முடிந்தது.. இனி 8 தான் பாக்கி!!

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘உத்தம வில்லன்’ படத்தில் ‘உத்தமன்’ என்ற 8ஆம் நூற்றாண்டு கூத்துக் கலைஞனாகவும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா கலைஞனாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார் கமல்.

தற்போது 21ஆம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இனிமேல் தான் 8ஆம் நூற்றாண்டுக்குள் அடியெடுத்து வைக்கப்போகும் இயக்குனர் ரமேஷ் அரவிந்த், நட்புக்காக ஒரு முக்கியமான ஹெஸ்ட் ரோலில் நடித்தாலும் நடிப்பேன் என்று கூறியுள்ளாராம்.

ஜெயராம், நாசர், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேன்ன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.

நம்முடைய நான்கு மனைவிகள்! குட்டிக்கதைகள்!

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.

அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தன...க்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டாள்.

ஒருநாள்...

அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.

தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.

அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போதுதான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள்.

ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
 4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

அஞ்சான் சுதந்திர தினத்தில் ரிலீஸ்..!

லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யா சாப்ட்வேர் என்ஜினீயராகவும், மும்பை தாதாவாகவும் நடிக்கிறார். மும்பையில் முதல் ஷெட்யூலும், புனேயில் இரண்டாவது ஷெட்யூலுமாக படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. அடுத்த ஷெட்யூல் கோவாவில் நடக்க இருக்கிறது. இதற்கிடையில் படம் ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திரதினத்தன்று வெளிவருவது உறுதியாகி இருக்கிறது.

இதுகுறித்து லிங்குசாமி கூறியிருப்பதாவது: பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. சுதந்திரத்தன்று வெளியிடுவதற்கு ஏற்ற மாதிரி பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு பாடல் காட்சியும் ஒரு சில வசன காட்களும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. வருகிற 8ந் தேதி முதல் கோவாவில் பாடல் படமாகிறது என்றார்.

படத்திற்கான டிரைலரை புதுமுமையான முறையில் வெளியிட இருக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் டிரைலர் வெளியிடப்பட்டுவிடும். ஜூலையில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் வெளியிடப்படும். கோவாவில் எடுக்கப்படும் பாடல் காட்சியில் சூர்யாவும், சமந்தாவும் ஆட இருக்கிறார்கள். இது ஒரு குத்துப்பாட்டு. அவர்களுடன் 200 நடன கலைஞர்களும் ஆடுகிறார்கள். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வருகிற 15ந் தேதிக்குள் படப்பிடிப்பு தொடர்பான அத்தனை பணிகளும் முடிந்து விடும்" என யூனிட் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

எங்களுக்கு அன்பளிப்பே வேண்டாம் - விஜய், அமலாபால் அறிவிப்பு!!

இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தார்கள். இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். வருகிற 7ந் தேதி கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி திருமண நிச்
சயதார்த்தமும். வருகிற 12ந் தேதி சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் இந்து முறைப்படி திருமணமும் நடக்கிறது. அன்று மாலை அதே ஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருமண நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள் எங்களுக்கு அன்பளிப்பு தரவேண்டாம் என்று இருவரும் திருமண பத்திரிக்கையுடன் ஒரு வேண்டுகோள் கடிதத்தையும் வைத்திருக்கிறார்கள்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: எங்கள் திருமணத்துக்கு மலர் கொத்துகளோ, பரிசு பொருட்களோ, அன்பளிப்புகளோ யாரும் வழங்க வேண்டாம். உங்களின் அன்பான வாழ்த்துக்களே போதும். அப்படி நீங்கள் எங்களை கவுரவப்படுத்த விரும்பினால் உங்கள் அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, வரைவோலையாகவோ "எபிலிட்டி பவுண்டேஷன்" என்ற அமைப்புக்கு வழங்குங்கள்.

 இந்த அமைப்பு 1995ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாற்றுத் திறன் குழந்தைகளையும், ஆதரவற்ற குழந்தைகளும் பராமரித்து படிக்க வைத்து வாழ்கைக்கு வழிகாட்டும் அமைப்பாகும். உங்கள் பரிசு அவர்களுக்கு சென்றால் அவர்கள் வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். 80சி விதியின்படி உங்கள் பரிசு தொகைக்கு வருமான வரிவிலக்கும் கிடைக்கும்.