Wednesday, May 28, 2014

டி.வி தொகுப்பாளர்களின் அதிர வைக்கும் சம்பளங்கள்..!

வெளியே பார்க்கும் போது பிரம்மாண்டமாக தெரியும் தொகுப்பாளர்களுக்கு எல்லாம் தனியார் தொலைக்காட்சிகளில் கொடுக்கும் சம்பளம் என்னவோ குறைவு தான்,

ஆனாலும் அவர்கள் சினிமா நிகழ்ச்சிக்காக வாங்கும் சம்பளமோ விண்ணை தொடும் அளவிற்கு அதிகம். நான் கூறுவது அனைத்தும், பெண் தொகுப்பாளினிகளுக்கு மட்டுமே என்பது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.

நம் எல்லோருக்கும் தெரிந்த டிடி என்கிற திவ்யதர்ஷினியின் சம்பளம் தான் அனைத்து நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் சம்பளத்தையும் விட அதிகமானது.

டிடியின் சம்பளம் ஒரு நிகழ்ச்சிக்கு 60 ஆயிரமிலிருந்து 75 வரையாம். அவரை அடுத்து இருப்பது பாவனா அவரின் சம்பளமோ 35 ஆயிரமாம். அடுத்த இடத்தில் இருக்கும் ரம்யாவிற்கு 25 முதல் 30 ஆயிரம் வரையாம் மேலும் மற்ற தொகுப்பாளினிகளுக்கான சம்பளம் 5 ஆயிரத்தில் தொடங்கி 20 ஆயிரத்தில் முடிந்து விடுகிறதாம்.

சினிமா நிகழ்ச்சிகளுக்கு இவ்வளவு வாங்கும் இவர்களின் சம்பளம் கமர்ஷியல் நிகழ்ச்சிகளில் இன்னும் அதிகமாம் அதிலும் வெளியூர் என்றால் சொல்லவே வேண்டாம் இந்த சம்பளத்தில் இரண்டுமடங்கு சம்பளம் வாங்குகிறார்கள்.

இதை தவிர்த்து இவர்களது வந்து போகும் செலவு, தங்கும் ஒட்டல் செலவு எல்லாமே தனி கணக்கு, அதுவும் ஒரு வாரத்திற்கு முன்பே புக் செய்து பாதி சம்பளத்தை அட்வான்ஸாக கொடுக்க வேண்டும் என்று இப்படி ஏகப்பட்ட விதிமுறைகள்.

ஆனால் ஆண்களுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரைதான் சம்பளம்

அட ! ஆண்களுக்கு என்ன இப்படி சப்புனு முடிஞ்சிடுச்சு !

Tuesday, May 27, 2014

எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் புன்னகை..!

          புன்னகை சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் 'புன்னகை இருக்க, பொன் நகை எதற்கு?' என்று பழமொழியை கூறியுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே.

சிரித்த முகத்தை பார்க்கும் போது, எத்தனையோ பிரச்சினைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது. உங்கள் சிரிப்பு, 'பெர்சனாலிட்டி'யை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுங்கள்.

அழும் குழந்தையை விட, சிரிக்கும் குழந்தையை தானே நாம் அனைவரும் விரும்புகிறோம். சிடுமூஞ்சி பெண்ணை விட, சிரித்த முகம் கொண்ட பெண் தானே விளம்பரங்களுக்கு ஏற்றவள். எப்படிப்பட்ட நபரையும் 'ஹேண்டில்' செய்வதற்கும், அவசியமான ஒன்று உங்கள் புன்னகை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனவே, வீடாக இருந்தாலும் சரி, பணியாற்றும் இடமாக இருந்தாலும் சரி, புன்னகை பூத்திடுங்கள். பணியிடத்தில் புன்னகையையும், ஆதரவான பார்வையையும் தவழ விடுங்கள். இது செயற்கையான விஷயமாகத் தோன்றலாம். ஆனால், கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக, உங்கள் புன்னகை செயல்படும்.

உங்கள் முசுடு உயரதிகாரியையோ அல்லது 'மூடி'யான கணவனையோ பார்த்து உங்களுக்கு புன்னகை வரவில்லை என்றாலும், செயற்கையாக நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள். உடனடியாக இல்லாவிட்டாலும், காலப் போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் உங்களை நடத்தும் விதம் மாறலாம்.

உங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம் என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தேவையில்லாத பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள். தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் விஷால்!

இயக்குனர் சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகியிருக்கும் அரண்மனை திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. ஹன்சிகா, லக்‌ஷ்மிராய், வினய் மற்றும் பலருடன் சுந்தர்.சி யும் இணைந்து நடித்திருக்கும் இப்படம் நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அரண்மனை திரைப்படத்திற்குப் பிறகு விஷால் நடிக்கவுள்ள திரைப்படத்தினை சுந்தர்.சி இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி மற்றும் பலர் நடித்த மதகஜராஜா திரைப்படம் இன்னும் திரைக்குவரவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.

ஹரி இயக்கத்தில் பூஜை படத்தில் நடித்துவரும் விஷால் இப்படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கலாம் என்றும் பேச்சுக்கள்
அடிபட்டுவருகின்றன. பூஜை படத்தின் படப்பிடிப்புக்களை வெறும் நாற்பதே நாளில் முடிக்கவிருப்பதாக ஹரி கூறியிருப்பதால் இப்படம் தீபாவளி
வெளியீடாகவோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகலாம் என்றும், விரைவில் இதுகுறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகும் என்றும் பேசிவருகிறது கோலிவுட் வட்டாராம்.

பெரும் தொகைக்கு விற்கப்பட்டிருக்கும் யான்!

பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் இயக்குனராகக் களம் கண்டுள்ள திரைப்படம் யான். ஜீவா, துளசி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின்
சேட்டிலைட் உரிமம் ஒரு பெரிய தொகைக்கு விற்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் சிற்சில தாமதங்களால் இவ்வாண்டுதான் நிறைவடைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில்
இப்படத்தின் அனைத்துப் படப்பிடிப்புக்களும் நிறைவடைந்து பின்னர் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் துவங்கின. வருகிற ஜூன் மாதத்தில் இப்படம்
வெளியாகவுள்ளது.

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் சில காட்சிகள் ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ படம் கைமாறுமா?

சியான் விக்ரம் - எமி ஜேக்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஐ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கள் நடைபெற்றுவருகின்றன.
இன்னும் ஒரே ஒரு பாடல்காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கும் சூழலில் அப்பாடல் காட்சி இன்னும் படமாக்கப்படாமல் இருந்துவருவதாகத் தெரிகிறது.

எமிஜேக்சன் நடனமாடும் அப்பாடல்காட்சிக்கான பிரம்மாண்ட செட் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ள சூழலில் படத்தின் ஹீரோயின் எமி ஜேக்சன் சம்பளப் பிரச்னை காரணமாக இப்பாடல் காட்சியில் நடிக்காமல் காலம் தாமதித்துவருவதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தனக்கு வரவேண்டிய சம்பளம் இன்னும் கிடைக்காதபடியால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லையாம்.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக படப்பிடிப்புக்கள் நடைபெற்று இறுதியில் இவ்வாறு நின்றுகொண்டிருப்பதால் இயக்குனர் ஷங்கர்
தயாரிப்பாளரிடம் இப்படத்தினை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்குமாறு கோரிவருவதாகத் தெரிகிறது. இதனால் விரைவில் இப்படம் மற்றொரு தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் வெளியாகலாம் என்று கிசுகிசுக்கப்பட்டுவருகிறது.

Monday, May 26, 2014

பாலிவுட் - கோச்சடையானை பின்னுக்குத் தள்ளிய எக்ஸ்மென்

பாலிவுட்டில் 23ம் தேதியன்று 'கோச்சடையான், எக்ஸ்மென், ஹீரோபான்டி' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஹீரோபான்டி மட்டுமே ஒரிஜனலான ஹிந்தித் திரைப்படம்.
இந்த படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராப் மகன் டைகர் ஷெராப் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார்.

மேற் சொன்ன மூன்று படங்களில் வசூல் ரீதியாக மிகப் பெரிய ஓபனிங்கை ஏற்படுத்தியது எக்ஸ்மென் படம்தானாம். கோச்சடையான படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு ஓபனிங் இல்லையாம். காரணம் படம் சொன்ன தேதியில் வெளிவராமல் இருவாரங்கள் கழித்து வெளிவந்ததே என்கிறார்கள்.

அதே சமயம் 'ஹீரோபான்டி' படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது என்கிறார்கள். முதல் நாளிலேயே சுமார் 7 கோடி ரூபாயை வசூல் செய்துள்ள இப்படத்தின் வசூல் போகப் போக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பாலிவுட் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

எக்ஸ்மென் படத்திற்கு 70 சதவீதத்திற்கு மேலும், ஹீரோபான்டி படத்திற்கு 60 சதவீதத்திற்கு மேலும், கோச்சடையான் படத்திற்கு 30 சதவீதததிற்கு மேலும்தான் திரையரங்குகளில் கூட்டம் கூடியதாம்.

ஹிந்தியில் மிகப் பெரிய செலவு செய்து கோச்சடையான் படத்திற்கு விளம்பரம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி ரசிகர்கள் கோச்சடையான் படத்தில் உருவாக்கப்பட்டுள்ள அனிமேஷனை அவ்வளவா ரசிக்கவில்லையாம். ஆனாலும், படத்தின் கதையம்சம் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் போகப் போக கூட்டம் கூடும் என்கிறார்கள்.

ரசிகர்கள் ரிலீசான மறுநாளே கோச்சடையான் திருட்டு விசிடி: பொறி வைத்து பிடித்தனர் ரஜினி

 சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் படம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 23) ரிலீசானது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்திற்கு திருட்டி விசிடி வெளியாகும் வாய்ப்பு அதிகம் என்பதால் ரஜினி ரசிகர்கள் அதனை தடுக்க மாட்டம் வாரியாக கண்காணிப்பு படையை உருவாக்கி உள்ளனர்.

சேலம் கண்காணிப்பு படையினர் நேற்று (மே 24) பொறிவைத்து திருட்சி விசிடியை பிடித்தனர். சேலம் பகுதியில் கோச்சடையான் திருட்டு விசிடி விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் பழனிவேல் தலைமையில் ரசிகர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். சேலம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சிடி கடையில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுவதை கண்டு அதை கண்காணித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பெரிய பார்சல் ஒன்றை கொண்டு வந்த ஒருவர் கடைக்குள் நுழைந்தார். அவரை பின் தொடர்ந்து சென்ற ரசிகர்கள் அந்த பார்சலை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 500 கோச்சடையான் திருட்டு விசிடிக்கள் இருந்தன.

உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சிடிக்களை கைப்பற்றி கடை உரிமையாளரையும், ஊழியர்களையும் கைது செய்தனர். தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள்.