Wednesday, November 6, 2013

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாகும் இந்தியர்?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்டீவ் பாலிமர் விரைவில் இன்னும் ஓராண்டில் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து புதிய சி.இ.ஓ. பதவிக்கு இந்தியர் உட்பட 5 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.அதில் இந்தியாவின் சத்யா நாதல்லே பெயரும் பரீசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐதராபாத்தைச் சேர்ந்த இவர் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கிளவுட் அண்ட் என்டர்பிரைசஸ் பிரிவின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.



                               nov 6 - vanikam microsoft


உலகின் மிகப்பெரிய சாப்டுவேர் கம்பெனியான மைக்ரோசாப்டுவேரின் தலைவராக அதன் நிறுவனர் பில் கேட்ஸ் இருந்து வருகிறார். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ.) இருந்த ஸ்டீவ் பால்மர் கடந்த வெள்ளிக்கிழமை ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து அப்பதவிக்கான நபரை தேர்வு செய்ய மைக்ரோசாப்டுவேர் நிறுவனம் ஒரு சிறப்புக்குழுவை அமைத்துள்ளது.


மிகப்பெரிய நிறுவனமான இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் வாரிசாக யாரையும் அறிவிக்கவில்லை. இதன் 38 ஆண்டு கால வரலாற்றில் பால்மர் மற்றும் நிறுவனர் பில் கேட்ஸ் என இரண்டு சி.இ.ஓ-க்களை மட்டுமே அது சந்தித்து இருக்கிறது. இப்பொழுது பால்மர் ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் பட்டியலில் இரு இந்தியர்கள் உள்பட 9 பேர் இருக்கின்றனர். இதில் முதலாவது நபராக இந்தியர் சத்யா நாதெல்லா என்பவர் வருகிறார்.


ஐதராபாத்தை சேர்ந்தவரான சத்யா மைக்ரோசாப்டின் கிளவ்டு அண்டு எண்டர்பிரைசசின் தலைவராக இருந்து வருகிறார். இவர் தனது இளங்கலை படிப்பான எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்கை மங்களூர் பல்கலைக்கழகத்தில் பயின்றார். மாஸ்டர் டிகிரியை (கம்ப்யூட்டர் சையின்ஸ்) விஸ்கான்சின் பல்கலைக்கழகத்திலும், எம்.பி.ஏ. மாஸ்டர் டிகிரியை சிகாகோ பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.


இந்நிலையில் சி.இ.ஓ பதவிக்கு போர்ட் நிறுவத்தின் தற்போதைய முதன்மை அதிகாரி ஆலன் முல்லே , நோக்கியா நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ ஸ்டீபன் எலாப் மற்றும் முன்னாள் ஸ்கைப் நிறுவனத்தின் சி.இ.ஓ. டோனி பேட்ஸ் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தெரிய வருகிறது.


Microsoft Finalizing CEO Replacement Shortlist To Include Current Ford Executive Alan Mulally

******************************************


 The company (NASDAQ:MSFT) has whittled down its list of external candidates to around five people, reports Reuters. According to sources familiar with the selection process, the list includes Ford Motor Co.’s current chief Alan Mulally and former Nokia CEO Stephen Elop. The shortlist also includes three internal candidates at the world’s biggest software maker. Former Skype CEO Tony Bates and Staya Nadella are reportedly included as well. (Skype is now a division of Microsoft.) Bates now heads Microsoft’s business development and Nadella serves as the company’s cloud and enterprise chief.

கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி - நாட்டுக்கு தலைவர் யார்? அரசியல்வாதிகளுடன் விவாதம் நடத்த தயார்!

 
 நாட்டுக்கு நான்தான் தலைவர் என அரசியல்வாதி கூறினால் அவருடன் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன் என்றார் நடிகர் கமல்ஹாசன். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: விஸ்வரூபம் 2ம் பாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் ஏற்கனவே சொன்னதுபோல் நான் நாட்டைவிட்டு வெளியேறுவேன். பொழுதுபோக்குகள் சமுதாயத்தை எப்படி வழிநடத்த உதவுகின்றன என்கிறார்கள். சமூகம்தான் பொழுதுபோக்கை வழிநடத்துகிறது. சமூகத்தில் உள்ளதைதான் பொழுதுபோக்கு அம்சங்கள் பிரதிபலிக்கின்றன.

தென்னிந்திய நடிகர்கள் பலர் அரசியலில் இருப்பதுபோல் கமல்ஹாசன் 2014ம் ஆண்டு அரசியலுக்கு வருவாரா?’ என்று கேட்கிறார்கள். கமல்ஹாசனுக்கு பார்வையாளர்கள் மட்டுமே தேவை. எப்போதுமே நான் வித்தியாசமாக செய்பவன். குறிப்பிட்ட விஷயத்தில் எதற்காக மற்றவர்கள் செய்ததைப்போல் நானும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

5 வருடத்துக்கு ஒருமுறை எனது அரசியல் பணியை செய்துகொண்டுதான் இருக்கிறேன். அது தொழில் ரீதியானதல்ல. ஓட்டு போடும்போது ஒவ்வொருவரும் தங்கள் குரலை உறுதியாக எதிரொலிக்க வேண்டும். அதன்பிறகு, இலவசமாக நாங்கள் சேவை செய்கிறோம் என்று சொல்லும் அரசியல் தொழில் தெரிந்தவர்களிடம் அந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு நாம் நல்ல சம்பளம் தந்துவிட்டு நாட்டை நல்லமுறையில் வழிநடத்திச் செல்ல அவர்களிடம் கேட்க வேண்டும். அவர்கள் நமது பிரதிநிதிகள்தான். தயவுசெய்து அவர்களை தலைவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள். மக்கள்தான் தலைவர்கள். எந்த அரசியல்வாதியாவது நான்தான் தலைவர் என்றால் அவர்களுடன் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு கமல் கூறினார்.

தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள்!

தோல்வி என்பது மறைமுக ஆசீர்வாதமே !

 ~ 01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. ~


02. தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது.


  ~ 03. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார்.

  * 04. இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.


* 05. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.


 * 06. தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.


* 07. உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள்.


 * 08. ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான்.

* 09. நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்.


 * 10. யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.


* 11. தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம்.


* 12. தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.


* 13. ௨வது உலகப் போரில் ஜப்பானியர் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடச் செய்து இன்றய நிலைக்கு உயர்த்தியது.

சில கண்டிபிடிப்புகள் உருவான கதைகளை அறிந்து கொள்வோம் !!


காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள ‘வல்க்ரோ’ என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா?
...
ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார்.

ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் பட்டையை உருவாக்க முடியுமா என்று மெஸ்ட்ரால் சிந்தித்தார். அதற்காகப் பல ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு துண்டுத் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில், நூற்றுக்கணக்கான சிறு கொக்கிகள் இருந்தன. மற்றொன்றில், நூற்றுக்கணக்கான சிறு வளைவுகள் இருந்தன. இரண்டையும் சேர்த்தபோது அவை அட்டகாசமாகப் பற்றிக் கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. தனது கண்டு
பிடிப்புக்கு ‘வல்க்ரோ’ என்று பெயரிட்ட டீ மெஸ்ட்ரால், 1957-ல் அதற்குக் காப்புரிமை பெற்றார்.

அதற்குப் பிறகு, ஸ்நூக்கர், ஸ்னோசூட் போன்ற சிறப்பு உடைகளிலும் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும் ‘வல்க்ரோ’வுக்கு உண்டு.

சோப்


குளியலறைகள் கட்டப்படும் முன்பே சோப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது பல ஆண்டுகாலம் கழித்துத்தான்.

ஆரம்பத்தில், எண்ணை, மணலைக் கலந்து தேய்த்துக் குளித்தனர். சிலர், வேலையாட்களை வைத்து மரக்கிளைகளால் உடலைத் தேய்த்துவிடக் கூறினர்.

சோப்புகளில் குறிப்பிடத்தக்கது, 1789-ல் ஆண்ட்ரு பியர்ஸ் கண்டுபிடித்த, கண்ணாடி போன்ற சோப். அடுத்து, மிதக்கும் சோப் போன்ற பலவித சோப்புகள் வந்துவிட்டன.

சக்கரம்

உலகை நகர வைத்த முக்கியக் கண்டுபிடிப்பு, சக்கரம். தற்போது ஈராக் நாடாக உள்ள மெசடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் கி.மு. 3000 ஆண்டுவாக்கில் சக்கரத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. சக்கரம் இல்லையேல் இன்றைய உலக இயக்கமே இல்லை.

‘டூத் பிரஷ்’

1400-ல் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது இது. முதலில் விலங்குகளின் முடியைப் பயன்படுத்தினர். பன்றியின் முடியைக் கூடப் பயன்படுத்தி உள்ளனர். 1938-ல் முதல் நைலான் டூத்பிரஷ் உருவாக்கப்பட்டது.

‘பற்பசை’ எனப்படும் ‘டூத் பேஸ்ட்’, நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே புழக்கத்தில் உள்ளது. அதை ஒரு டியூப்பில் அடைத்து விற்கலாம் என்பதை 1892-ல் வாஷிங்டன் ஷெப்பீல்டு என்ற பல் மருத்துவர் கண்டுபிடித்தார்.

எச்சரிக்கை! பெண்களுக்காக…



56 பெண்கள் இதுவரைக்கும் whisper, stayfree, etc. உபயோகித்ததால் இறந்திருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

உண்மையா ….என தெரியவில்லை….
காரணம், அதிகபட்சமான பெண்கள் இதையே உபயோக படுத்துகிறார்கள்...

எனினும் இந்த Ultra Napkin களில் chemical கள் உபயோகிக்கப் படுவதாகவும், இது வெளிவரும் திரவத்தை gel நிலைக்கு மாற்றுவதாகவும், இதனால் சிறுநீர்ப்பை மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்படுகின்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Ultra pad கள் பயன்படுத்துபாவர்கள் 5 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும் அல்லது cotton pad களை பயன்படுத்துமாறும் மருத்துவ ஆலோசனைகள் தெரிவிக்கிறது…

நேரம் நீடிக்கும் என்றால் இரத்தம் பச்சை நிறம் அடைவதுடன் பக்றீரியா தொழிற்பாடு அந்த gel ல் இடம் பெற்று உடல் மீண்டும் உள்ளே பெறுகின்றது எனவும்… செய்திகள் பரவலாக வருகிறது.

எனவே மக்கள் நலன் கருதி இதை பகிர்கிறேன்…

இந்த செய்தியை பகிர வெட்கப்படத்தேவையில்லை ..

இதை பகிர்ந்து கொள்வதன் மூலம் நமது சகோதரிகளுக்கு உதவிடுவோம் …

வயிற்றின் நண்பன் தேன்!

இயற்கை அளித்த அருங்கொடை தேன். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் தேனை வைத்திருப்பது அவசியம். 70 வகையான வைட்டமின் சத்துகள் இதில் அடங்கியுள்ளன. தேனில் உள்ள சத்துகள் உடலில் உள்ள ஜீரண பாதையில் சுலபமாக கிரகிக்கும். தேன...் ஏழு வகைப்படும். ஆனால் ஒரு தேனீ எந்த செடியில் இருந்து தேனை சேகரிக்கிறதோ, அதன் மருத்துவ குணத்தை பெற்றுவிடுகிறது. கொம்பு தேன், மலைத்தேன், மரப்பொந்து தேன், மலைத்தேன், புற்றுத்தேன், புதிய தேன், பழைய தேன் என ஏழு வகை உள்ளன.

ஆனால், இவற்றில் மலையில் உள்ள மரம் செடிகளில் இருந்து சேரிக்கப்படும் தேனில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, கபம் சம்பந்தமான நோய்கள் வாயுத்தொல்லை, ரத்தத்தில் கலந்துள்ள விஷ அணுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு. பொதுவாக தேனுடன் மருந்துகளை கலந்து கொடுப்பதால் ஜீரண பாதையில் வெகு விரைவில் மருந்து உறிஞ்சப்பட்டு விடும். ரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல்படும்.

மருந்துகளில் வீரியம் அதிகமாக இருந்தால், தேனை கலந்து சாப்பிடும் போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுத்து நிறுத்திவிடும். தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம். இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம் பழம் இரண்டையும் ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதும் குறையும். ஒரே டம்ளர் வெந்நீர் அல்லது சூடுபடுத்தப்பட்ட பாலில் மூன்று டீஸ் பூன் தேன் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தினால் தூக்கம் நன்றாக வரும். நோய் எதிர்ப்பு தன்மை பெருகி, உடல் ஆரோக்கியம் ஏற்படும். நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருகினால், ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படும்.

தொடர்ந்து ஆறு வாரம் அருந்தினால் ரத்தத்தில் சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை முற்றிலும் நீங்கி விடும். உடல் அழகையும், குரல் இனிமையையும் ஏற்படுத்தி தரும் குணம் தேனுக்கு உண்டு. வயிற் றுக்கு சிறந்த நன்பன் என்றால் அது தேன் தான். தினமும், 3 டீஸ்பூன் தேனை 100 மில்லி லிட்டர் வெந்நீரில் காலை அல்லது இரவு நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்தினால், வயிற்றுப்புண், இரைப்பை அலர்ஜி, ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். குறிப்பாக அமிலத் தன்மையை கட்டுப்படுத்தி அல்சர் நோயை குணப்படுத்தும்.

சுத்தமான தேனை தேர்வு செய்வது எப்படி


சுத்தமான தேனில் மகரந்தம் கலந்திருக்கும். இடத்திற்கு இடம் இது மாறுபடும். இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறிவிடும். ஆறு மாதத்திற்கு தேனை வைத்திருந்து சாப்பிடலாம். தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோகச்சத்து உடலுக்கு ஏற்றது. சில சமயங்களில் தேனில் கலந்துள்ள மகரந்தம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

தேன் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய சிறிதளவு தேனில், தீக்குச்சியை சில விநாடிகள் ஊற வைத்து துடைத்து தீப்பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரை கலப்படம் இல்லை என்பதை அறியலாம். அல்லது மை உறிஞ்சும் காகிதத்தில், செய்திதாளில் சிறிதளவு தேனை ஊற்றி சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பேப்பர் தேனை உறிஞ்சாமல் இருந்தால் அது நல்ல தேன் என்பதை அறிந்து கொள்ளலாம்.

எடையைக் குறைக்க சுலபமான வழி – ஜெனரல் மோட்டார்ஸ் டயட்

                                  


மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.
                                              
7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.

                                               

அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும்.

1. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

2. இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.

3. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

4. நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
ஐந்தாம் நாள் சிறிதளவு(ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர்(மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.

5. ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.

6. ஏழாவது நாள் ஒரு கப் சாதம் – காய்கறிகளுடன், பழ ஜுஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது.

7. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.

இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான்.
எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.

முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.

3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும்.

நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.

5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது.

அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது ஜெனரல் மோட்டார்ஸ் டயட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.