Saturday, May 31, 2014

விஜய்யிடம் உதவி கேட்கவில்லை - மேஜர் முகுந்தின் குடும்பம் விளக்கம்..!

 காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் உயிர் இழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தை சமீபத்தில் நோரில் சென்று சந்தித்தார் விஜய். அதுபற்றிய செய்தியை வெளியிட்ட சில ஊடகங்கள் முகுந்தின் மகள் அர்ஷியாவின் கல்வி செலவை விஜய் ஏற்றுக் கொண்டதாக எழுதியிருந்தனர். அதனை முகுந்தின் குடும்பம் சமூக வலைத்தளத்தில் மறுத்துள்ளது.

மேஜர் முகுந்தின் மகள் அர்ஷியா விஜய்யின் தீவிர ரசிகை. அதனை அறிந்த விஜய் முகுந்தின் குடும்பத்தை சந்தித்ததோடு அர்ஷிதாவுடன் சிது நேரத்தை செலவிட்டார். விஜய்யின் இந்த செயலுக்கு முகுந்தின் குடும்பம் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளது. அதேநேரம் முகுந்தின் பெயரைச் சொல்லி யாரிடமும் பண உதவி இதுவரை கேட்டதில்லை என்றும், அர்ஷிதாவின் கல்விச் செலவை ஏற்கும்படி யாரிடமும் கேட்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

மேஜரின் குடும்பத்தின் கௌரவத்தை பாதிக்கும் இதுபோன்ற செய்திகளில் அனைவரும் விழிப்புடன் இருப்பது அவசியம்.

0 comments:

Post a Comment