Friday, May 23, 2014

எக்ஸ் மேன் - கடந்த காலத்தின் எதிர்காலம் - திரைவிமர்சனம்!

எக்ஸ் மேன் பட வரிசையில் வந்திருக்கும் 7-வது படம் எக்ஸ் மேன் - கடந்த காலத்தின் எதிர்காலம்.

மியூட்டன்ஸ்களை அழிக்கவேண்டும் என்று அமெரிக்கா அரசு அதிக சக்திவாய்ந்த சென்டினட்ஸ்களை உருவாக்குகிறது. சென்டினட்ஸ் மனிதர்களோடு ஒன்றியிருக்கும் மியூட்டன்ஸ்களை கண்டறிந்து அழிக்கிறது.

மியூட்டன்ஸ்களும் சென்டினட்ஸ்களை எதிர்த்து போராடுகின்றனர். ஆனால், அவர்களால் சென்டினட்ஸ்களை வீழ்த்த முடிவதில்லை. எனவே, அவற்றை அழிக்க அனைத்து மியூட்டன்ஸ்களும் ஒன்று கூடி எக்ஸ் மேன் குழுவுடன் இணைந்து அதை அழிப்பதற்கு திட்டம் தீட்டுகிறார்கள்.

எதற்காக அந்த சென்டினட்ஸ்களை உருவாக்கினார்கள் என்பதை அவர்கள் ஆராய்கின்றனர். அப்போது 50 வருடங்களுக்கு முன்னால் மிஸ்டிக் என்னும் மியூட்டன்ஸ், ஆராய்ச்சி என்ற பெயரில் மியூட்டன்ஸ்களை கொடுமைப்படுத்திய டாக்டர் ஒருவரை கொன்று, அமெரிக்க அரசிடம் மாட்டிக் கொள்கிறாள்.

அபார சக்தி படைத்த அவளது செல்களை வைத்துத்தான் இந்த சென்டினட்ஸ்களை உருவாக்கியுள்ளார்கள் என்பதை கண்டறிகின்றனர். அதனால், இதை தடுப்பதற்கு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று அந்த டாக்டரை மிஸ்டிக் கொலை செய்யாமலும், அவள் அமெரிக்க அரசிடம் சிக்கிக் கொள்ளாமலும் காக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர்.

அதற்காக நாயகன் ஹியூ ஜெக்மேன் 50 வருடங்கள் பின்னோக்கி செல்கிறார். அங்கே பேராசிரியர் சார்லஸ் சேவியரை சந்திக்கிறார். அவர்தான் தன்னை 50 வருடங்கள் பின்னோக்கி வரவழைத்தவர் என்பதையும், என்ன காரணத்திற்காக வந்துள்ளேன் என்பதையும் அவரிடம் புரிய வைக்கிறார். அதேபோல், வில்லனான மெக்னிட்டோவையும் நேரில் சந்தித்து இதைப்பற்றி விளக்கி காரணத்தை அறிய செல்கின்றனர்.

இதற்கிடையில் வில்லன் மெக்னிட்டோ அந்த காலத்தில் மியூட்டன்ஸ்களை அழிக்க தயாரிக்கப்பட்ட ரோபோக்களை தன் வசமாக்கிக் கொண்டு, உலகத்தில் உள்ள மனிதர்களையெல்லாம் அழித்து மியூட்டன்ஸ்களே இந்த நாட்டை ஆளவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்.

இறுதியில், வில்லனின் திட்டத்தை ஜெக்மேனும், சார்லஸ் சேவியரும் முறியடித்தார்களா? மிஸ்டிக் அந்த டாக்டரை கொல்லாமல் தடுத்து, சென்டினட்ஸ்கள் உருவாவதை தடுத்தார்களா? என்பதே மீதிக்கதை.

வால்வரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹியூ ஜெக்மேன், முந்தைய எக்ஸ் மென் படங்களில் நடித்திருப்பதுபோல் இதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய கம்பீரமான தோற்றம் மிரட்டலாக இருக்கிறது. இவருக்கு இந்த படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இல்லாதது ஒரு குறையாக இருக்கிறது.

மிஸ்டிக் கதாபாத்திரத்தில் வரும் ஜெனீபர் லாரன்ஸ் ஊதா நிறத்திலான தோற்றத்துடன் பயமுறுத்துகிறார். சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். இவரை மையப்படுத்தியே கதை நகர்வதால் இவருக்கு நடிப்பதற்குண்டான வாய்ப்பு அதிகம். அதை அவர் கவனமாகவும், திறமையாகவும் செய்திருக்கிறார்.

50 வருடங்களுக்கு முந்தைய பேராசியரியராக வரும் ஜேம்ஸ் மெக்கோவாய், வில்லனாக வரும் மைக்கேல் ஃபாஸ்பென்டரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இயக்குனர் பிரயான் சிங்கர் எக்ஸ் மேன் வரிசையில் ஏற்கெனவே வெளிவந்த எக்ஸ் மேன்-பர்ஸ்ட் கிளாஸ் என்ற படத்தை இயக்கியவர். தற்போது மீண்டும் இந்த படத்தை இயக்கியுள்ளார். மிரட்டலான காட்சிகளை வைத்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார். சண்டை காட்சிகள் பிரம்மாண்டத்தை ஏற்படுத்துகிறது. வில்லன் ஒரு ஸ்டேடியத்தையே பெயர்த்தெடுத்து செல்லும் காட்சி மயிர்க்கூச்செரிய வைக்கிறது.

மொத்தத்தில் ‘எக்ஸ் மேன்’ பலம் மிக்கவன்.

இப்படியும் சில..!

                                                        இப்படியும் சில..!

1. சிலபேர் கல்யாணத்துக்கு பண்ற செலவுல பாதியகூட,
பலபேர் ஆயுள் முழுக்க சம்பாதிப்பது இல்லை.

2.பணக்கார பங்களாக்களின் பாத்ரூம் பரப்பளவைவிட,
பலகோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது.

3.சில ஆடம்பர பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவுகூட, பல பெண்களிடம் சேலை இருப்பதில்லை.

4.ராணுவ பட்ஜெட்டின் அளவைவிட, இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.

5. சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு, பலகோடி மக்களின் 1 வருட சம்பளம்..

6. சிலர் வயிறு குறையவேண்டும் என்று கஷ்டப்படுகின்றனர், பலர் வயிறு நிறைய வேண்டும் என கஷ்டப்படுகிறார்கள்.

7. சட்டப்புத்தகத்தில் இருக்கும் நீதிப்பதிவுகளைவிட, இங்கு இருக்கும் ஜாதி பிரிவுகள் அதிகம்.

8. சிலர் கிரெடிட் கார்டுகளையும், பலர் ரேஷன் கார்டுகளையும் நம்பி இருக்கிறார்கள்..

9. பகலில்கூட ஏசி ஓடும் வீடுகளும், இரவில்கூட விளக்கு எரியாத வீடுகளும் இங்கு உள்ளது.

( கனவு போன்ற வாழ்கை வாழ்பவர்களும்
கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும் தேசம் இது)

மின்சாரம் பற்றி அகத்தியர் கண்டுபிடிப்பு...!

                                   மின்சாரம் பற்றி அகத்தியர் கண்டுபிடிப்பு

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

சிறந்த 25 பொன்மொழிகள்..! உங்களுக்காக..!

                                                 சிறந்த 25 பொன்மொழிகள் :-

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

மைனா பாணியில் தொப்பி..!

பிரபு சாலமன் இயக்கிய படம் மைனா. கம்பம் மலை உச்சியில் உள்ள குரங்கிணி பகுதியில் இப்படம் படமாக்கப்பட்டது. அதே பகுதியில் உருவாகி இருக்கிறது தொப்பி என்ற படம். மைனாவுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார்தான் இதற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

புதுமுகங்கள் நடித்துள்ளனர். மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கிய யுரேகா இயக்கி உள்ளார். ராம்பிரசாத் சுந்தர் என்பவர் இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். மிககுறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடித்துவிட்டனர்.

"அதிக வெளி உலக தொடர்பில்லாத மலைக்கிராமத்தில் பிறந்த இளைஞனுக்கு போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது லட்சியம். ஆனால் அதற்கு அவனது பிறப்பும், குற்ற பின்னணியும் தடையாக இருக்கிறது. அதனை சமாளித்து தன் லட்சியத்தை அடைந்தானா என்பதுதான் படத்தின் கதை. மலைப்பகுதியில் போலீசை தொப்பிக்காரர் என்றும் தொப்பி என்றும் அழைக்கிறார்கள். அதையே படத்துக்கு டைட்டிலா வைத்திருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் யுரேகா.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்: டைட்டில் ஏன்? இயக்குனர் விளக்கம்


எங்கேயும் எப்போதும் சரவணனின் உதவியாளர் ராம் பிரகாஷ். தனிக்கடைபோட்டு இயக்கி வரும் படத்தின் பெயர் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்'. செல்போன் கஸ்டமர் கேருக்கு போன் செய்தால் ஒலிக்கும் பெண்ணின் குரலையே படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள். அதற்கான காரணத்தை விளக்குகிறார் ராம் பிரகாஷ்.

"தலைப்பே மக்களை திரும்பி பார்க்க வைக்கிற மாதிரி இருக்கணும்னு முடிவு பண்ணினோம். அதே நேரத்துல கதைக்கும் தொடர்புடையதாக இருக்கணும். அதுக்குத்தான் இந்த தலைப்பு. இது டெலிபோன் தொடர்புடைய கதையல்ல. ஆனாலும் தலைப்பின் குரலால் படத்தில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழும்.

இயற்கை பேரழிவுகள் நம் கண்முன்னால் நடக்கிறது. கண்ணுக்கு தெரியாமல் நடக்கிற பேரழிவைப் பற்றிய கதை. அது என்ன என்பது சஸ்பென்ஸ். அட்டகத்தி தினேசும், நகுலும் ஹீரோக்கள், பிந்து மாதவியும் புதுமுகம் ஐஸ்வர்யாவும் ஹீரோயின்கள். காதல், ஆக்ஷன், த்ரில்லர் நிறைந்த கமர்ஷியல் கதை" என்கிறார் ராம் பிரகாஷ்.

பூலோகம் படத்தில் 35 நிமிடங்களுக்கு குத்துச்சண்டை காட்சிகள்!

ஜெயம் ரவிக்கு நேரமே சரியில்லை போலிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே அவர் நடித்த படங்கள் எல்லாம் அநியாயத்துக்கு தாமதமாக வெளிவருகின்றன. அல்லது வெளிவரும்போது பிரச்னையில் சிக்கிக் கொள்கின்றன. ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் வருடக்கணக்கில் கிடப்பில் கிடந்தது. அதன் பிறகு ஒரு வழியாக வெளியாகி தோல்வியடைந்தது. சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படம் வெளியானபோது பணப்பிரச்சனையில் சிக்கியதால் சில நாட்கள் கழித்தே வெளியானது.

தற்போது ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் பூலோகம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ஜெயம் ரவி. வட சென்னை பகுதியில் குத்துச்சண்டை வீரனாக உள்ள இளைஞன் பற்றிய கதை இது. பூலோகம் படத்தின் முன்பாதியை படு கமர்ஷியலாக இயக்கி உள்ள இயக்குநர், இரண்டாம் பாதியில் சுமார் 35 நிமிடங்களுக்கு குத்துச்சண்டை காட்சிகளை வைத்திருக்கிறாராம். படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், 35 நிமிடங்களுக்கு குத்துச்சண்டையை மக்கள் பார்க்க மாட்டார்கள். தியேட்டரிலிருந்து எழுந்துபோய்விடுவார்கள். எனவே ரீஷூட் பண்ணியாவது காட்சிகளை மாற்றுங்கள் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். இயக்குநர் கல்யாண கிருஷ்ணனுக்கு தயாரிப்பாளரின் கருத்தில் உடன்பாடில்லை.

கதைப்படிதான் நான் அந்த குத்துச்சண்டைகாட்சிகளை வைத்திருக்கிறேன். அதனால் ரீஷூட் பண்ண வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பிரச்சனை காரணமாகவே பூலோகம் படத்தை கிடப்பில் போட்டுவிட்டாராம் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

கோச்சடையான் - தி லெஜன்ட் விமர்சனம்!

நடிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், நாசர், சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஷோபனா, நாகேஷ், ருக்மணி, ஆதி

 இசை: ஏ ஆர் ரஹ்மான்

 பாடல்கள்: கவிஞர் வாலி, வைரமுத்து

 பிஆர்ஓ: ரியாஸ் அகமது

தயாரிப்பு: ஈராஸ் - மீடியா ஒன்

 கதை, திரைக்கதை, வசனம்: கேஎஸ் ரவிக்குமார்

இயக்கம்: சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் 


         இந்திய சினிமாவுக்கு புதிய வாசலைத் திறக்கப் போகும் படம் என்ற கட்டியங்கூறி வந்துள்ள, சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தை விமர்சிப்பதற்கு முன்...

 இத்தனை அழுத்தமான சரித்திரக் கதையை, எடுத்த எடுப்பில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் முழு நீள திரைப்படமாகவே தர முடியும் என்று நம்பி களமிறங்கிய சவுந்தர்யா ரஜினியை பாராட்டிவிடுவோம். ஆங்காங்கே கொஞ்சம் அமெச்சூர்த்தனம் இருந்தாலும் நல்ல முயற்சி.

இந்த தொழில்நுட்பத்தில் தான் நடித்தால் என்ன மாதிரி விமர்சனங்கள் எல்லாம் எழும் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தும், ஒரு முன்னோடியாக நின்று நடித்த ரஜினி நிச்சயம் திரையுலகின் பெருமைதான்!

சரி, கோச்சடையான் கதைக்கு வருவோம்.

ராணா ஒரு பெரும் வீரன். கலிங்காபுரி நாட்டின் படைத் தலைவன். அவன் படையுடன் போன இடமெல்லாம் வெற்றிதான்.

 கலிங்காபுரியின் பரம விரோதி நாடு கோட்டைப்பட்டினம். இந்த நாட்டை ஜெயித்தால்தான் வெற்றி பூரணமாகும் என மன்னன் ராஜ மகேந்திரனிடம் (ஜாக்கி ஷெராப்) கூறுகிறான் ராணா.

அதை ஒப்புக் கொண்டு பெரும் படையோடு கோட்டைப்பட்டினம் நோக்கி கிளம்புகிறான் ராணா. செய்தி அறிந்து கோட்டைப்பட்டின படைகளும் இளவரசன் செங்கோடகன் (சரத்குமார்) மோதலுக்குத் தயாராகின்றன.

இரு நாட்டுப் படைகளும் பெரும் சமவெளியில் மோதத் தயாராகின்றன. அதற்கு முன் ராணாவும் செங்கோடகனும் சந்திக்கிறார்கள். திடீரென நண்பா என கட்டித் தழுவுகிறார்கள்... ராணாவுடன் வந்த சேனையில் முக்கால்வாசி கோட்டைப்பட்டினப் படையுடன் சேர்ந்து கொள்ள, மீதிப் படை கலிங்காபுரிக்கு திரும்பி ஓடுகிறது.

இதுதான் கதையின் ஆரம்பம்... ஏன் இப்படி நடந்தது... தான் விசுவாசமாக இருந்த, தன்னை நம்பிய மன்னனை மாவீரன் ராணா ஏன் இப்படி ஏமாற்றினான் என்பதெல்லாம் மீதி ஒருமணி நேரக் கதை. அதைத் திரையில் பாருங்கள்!

படத்தின் கதை ரொம்ப எளிமையானது. ஒரு ஊர்ல ஒரு ராஜா..அவனுக்கும் அடுத்த நாட்டுக்கும் சண்டை வகைதான். ஆனால் அதில் பகைக்கும் பழிவாங்குதலுக்கும் காரணம் வைத்த விதம் நம்மை எளிதில் கவர்கிறது. 'நம்மை விட திறமையானவனை அருகில் வைத்துக் கொள்ளக்கூடாது' என்ற ஒரு மன்னனின் ஈகோ, அவன் ராஜ்யத்தை எந்த எல்லைக்குக் கொண்டுபோகிறது என்பதை அடுத்த பாதியில் கோச்சடையான் மூலம் சொல்லியிருக்கிற விதம் அருமை.

ரஜினியின் தோற்றம், அவரது உடல் மொழி, சின்னச் சின்ன உணர்வுகளைக் கூட சட்டென்று முகத்தில் காட்டியுள்ள விதம் எல்லாமே பிரமிக்க வைக்கிறது. அந்த அட்டகாசமான அறிமுகக் காட்சியில் தொடங்கி, கடைசி காட்சி வரை ரஜினிதான் படத்தில் பிரதானமாய் நிற்கிறார்.

பல காட்சிகளில் மோஷன் கேப்சரிங் காட்சிகள் கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், ராணா ரஜினியின் முகம், நடனம், சண்டை என அனைத்திலும் நிஜ ரஜினியைப் பார்க்க முடிகிறது. செங்கோடன் அரசவையில் ரஜினி முதல் முதலாக நுழையும் போது அவர் காட்டும் எக்ஸ்பிரசன்கள் இது நிஜ ரஜினியா அவது நடிப்பு பதிவாக்கமா என யோசிக்க வைக்கிறது.

 ரஜினி உருவத்தை வடிவமைத்ததில் தெரியும் சின்னச்சின்ன குறைகளைக் கூட சரிகட்டிவிடுகிறது அவரது காந்தக் குரல்.

ஜாக்கி ஷெராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி, ஆதி ஆகியோரில், ஆதிக்கு மட்டும் மோஷன் கேப்சரிங் பக்காவாக செட் ஆகிறது.

அடுத்தவர் நாசர். படம் முழுக்கவே வருகிறார், இவருக்கும் உடை, உருவ வடிவைப்பு பிரமாதமாகப் பொருந்துகிறது.

 ராணாவின் நண்பராக வரும் சரத்குமாருக்கு இத்தனை முக்கியத்துவம் தேவையே இல்லை. அதிலும் அவருக்கும் ருக்மணிக்கும் ஒரு பாட்டு வேறு.


படத்தின் இன்னொரு ஆச்சர்யம் நாகேஷ். அவரது உருவம், குரல், நகைச்சுவை அனைத்துமே அச்சு அசலாக உள்ளன. அருமை.

இந்தப் படத்தின் இரு பெரிய தூண்கள் ஏ ஆர் ரஹ்மானின் பாடல்கள் - பின்னணி இசை மற்றும் கேஎஸ் ரவிக்குமாரின் திரைக்கதை - வசனம்.

கதையின் அடிப்படையே அரசியல் என்பதால், அரசியல் சாணக்கியத்தனம், அரசியல் முத்திரை வசனங்கள் எல்லாம் ஆங்காங்க சர்வ சாதாரணமாக வந்து விழுகின்றன. பார்வையாளர்கள் முறுக்கேறி கைத்தட்டுகிறார்கள். கோச்சடையான் காட்சிகளில் வரும் முடிச்சுகள் சுவாரஸ்யமானவை.

சேனாவின் பாத்திரம் வரும்போது படம் முடிந்துவிடுகிறது. இரண்டாம் பாகம் பண்ணுவார்கள் போலிருக்கிறது.

படத்தின் ஆகப் பெரிய குறை, படத்துக்கான மோஷன் கேப்சரிங் வேலைதான். அதை மறுப்பதற்கில்லை. ரஜினியின் கண்களில் இருக்க வேண்டிய உயிர்ப்பு இல்லை.

பாத்திரங்களின் நடையில் இயல்பான வேகம் குறைந்து காணப்படுவது இன்னொரு குறை. ரஜினிக்கு அழகே அந்த வேக நடைதானே... அனைத்துப் பாத்திரங்களின் கால்களும் சற்று வளைந்த மாதிரியே இருப்பதை மோஷன் கேப்சரிங் குழு கவனிக்க மறந்தது ஏனோ? ரசிகர்களை விட தன் அப்பாவை அதிகம் பார்த்து ரசித்த சவுந்தர்யா எப்படி இதைக் கவனிக்காமல் விட்டார்?

இந்தப் படத்தை அவதார் மாதிரி நிஜ ரஜினி பாதி, மோஷன் கேப்சரிங் பாதி என்று எடுத்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு.

ஆனாலும், ஒரு முழுப் படத்தை இந்தத் தொழில்நுட்பத்தில் எடுத்திருப்பது அசாதரணமானதுதான். அந்த வகையில் இந்திய சினிமா தனது பாரம்பரிய எல்லையைவிட்டு, புதிய தொழில்நுட்ப எல்லைக்குள் முதல் சில அடிகள் எடுத்து வைத்துள்ளது கோச்சடையான் மூலம்!

ரசிகர்கள் பார்வையில் - கோச்சடையான் !

             கோச்சடையான் படம் பல்வேறு தடைகளைக் கடந்து வெளியாகிவிட்டது.

சில நாடுகளில் நேற்றே வெளியானதைக் கூறியிருந்தோம். அங்கெல்லாம் சிறப்புக் காட்சி பார்த்த அனைவருமே, விமர்சகர்களாக மாறி சமூக வலைத் தளங்களில் பாராட்டுகளையும் குறைகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.

ஒட்டு மொத்தமாக சினிமாக்காரர்கள் பாஷையில் சொன்னால், 'படம் தப்பிச்சிடுச்சி..' என்பதுதான் பொதுவான டாக்!

இனி இந்தப் படத்தைப் பார்த்தவர்களின் சில கருத்துகளைப் பார்ப்போம்...

ஐஎம்டிபி எனும் புகழ்பெற்ற சினிமா புள்ளிவிவர இணைய தளத்தில் இந்தப் படத்துக்கு 10-க்கு 8.3 ரேட்டிங் தந்துள்ளது. அதாவது இது பயனாளர்கள் தந்திருக்கும் ரேட்டிங்.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் இந்தியன் சினிமா மேகஸின் என்ற பத்திரிகை இந்தப் படத்துக்கு 5/5 என ரேட்டிங் கொடுத்ததுடன், படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் பிரமிக்க வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

"ரிலீசுக்கு முன் இந்தப் படம் அளவுக்கு வேறு எந்தப் படமும் கிண்டல் - கேலிகளைச் சந்தித்திருக்காது. ஆனால் படம் சிறப்பாகவே வந்திருக்கிறது. சில காட்சிகளில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை இன்னும் சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம். குறிப்பாக தீபிகா படுகோனுக்கு. மற்றபடி ரஜினி, நாகேஷை இந்தத் தொழில்நுட்பத்தில் சிறப்பாகக் கொண்டுவந்துள்ளனர்", என்று ஒரு விமர்சகர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு விமர்சகர், "இந்தப் படத்தின் முதுகெலும்பு என்றால் ரஜினிகாந்த், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் ஏஆர் ரஹ்மான்தான். இந்த மூவரும் படத்தின் கிராபிக்ஸ் கொஞ்சம் அமெச்சூர்த்தனமாக இருப்பதை மறக்கடிக்க வைத்துவிடுகிறார்கள். குறிப்பாக இடைவேளைக்குப் பிந்தைய படம் அத்தனை வேகமும் விறுவிறுப்பும் கொண்டதாக உள்ளது. முதல் படம் என்ற வகையில் சவுந்தர்யாவுக்கு இது பெரிய வெற்றி, என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இந்தத் தொழில் நுட்பம் இனி பரவலான பயன்பாட்டு வரும், கோச்சடையான் வெற்றி மூலம். கோச்சடையான் மாதிரி முழுப் படத்தையும் மோஷன் கேப்சரிங்கில் எடுக்காமல், கடினமான காட்சிகளை மட்டும் இந்த மாதிரி தொழில்நுட்பத்தில் இனி தாராளமாகச் செய்வார்கள். அதற்கு பெரும் வாசலைத் திறந்து வைத்துள்ளது கோச்சடையான் என ஒரு ஆங்கில தளம் குறிப்பிட்டுள்ளது. ரஜினியின் குரல், ரஹ்மானின் இசை இரண்டும் படத்தின் அனிமேஷன் குறைகளை மறக்கடித்துவிடுகின்றன என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு பிரபல இணையதளம் படத்தை கொஞ்சம் கடுமையாகவே விமர்சித்துள்ளது. "இது ரஜினியின் ரசிகர்களுக்கானது. இந்தப் படத்தின் மோஷன் கேப்சரிங் பணிகள், நிஜ ரஜினியைப் பார்க்கும் அளவுக்கு திருப்தியாக இல்லை. அடிக்கடி பாடல்கள் வருவது சலிப்பைத் தருகிறது. தீபிகா படுகோனை இன்னும் அழகாகக் காட்ட முயற்சித்திருக்கலாம்," என்று குறிப்பிட்டுள்ள அந்த தளம், இரண்டாவது பகுதி மிக விறுவிறுப்பாகச் செல்வதாகப் பாராட்டியுள்ளது.

பெருமளவு ரசிகர்களும், விமர்சகர்களும் படத்துக்கு சராசரியாக 5-க்கு 3.75 - 4 என ரேட்டிங் தந்துள்ளனர். ஒரே ஒரு இணையதளம் மட்டும் 2.5 என மதிப்பிட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு அடுத்த பாகம் வரவிருப்பதைக் குறிக்கும் வகையில் 'தொடரும்' போட்டு படத்தை முடித்திருக்கிறார்களாம். அந்த இரண்டாவது பாகம்தான் ராணா என்றால், அதை ரஜினியை வைத்து லைவ் ஆக்ஷனாக எடுக்க வேண்டும்... அனிமேஷனில் வேண்டாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடிக்கத் தவறவில்லை. இவையெல்லாம் ரசிகர்கள், விமர்சகர்கள் கருத்துதான்.

கண்ணாடி அணிந்த பெண்களும் அழகாக தெரியலாம்!

கம்ப்யூட்டரில் அதிக நேரமாக வேலை செய்பவர்கள் கண் கண்ணாடியை பலர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வில் கண்  கண்ணாடி அன்றாட வாழ்க்கையில் அவசியமான பொருளாக மாறிவிட்டது. தற்போது பல விதமான மாடல்களில் கண்ணாடியின் பிரேம் சின்னதாக,  சிக்கென கவர்ச்சியாக வந்துவிட்டது. அதனால், கண்ணாடி அணியும் பெண்கள், மேக்கப் போடுவது முக்கியமானதாக மாறிவிட்டது. முகத்தின் அழகைப்  மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள்.

கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-அப் போட வேண்டும் என்று சில டிப்ஸ்:

நீங்கள் முதலில் ஆரம்பிக்க வேண்டியது உங்கள் புருவத்தில் இருந்துதான். உங்கள் புருவம் சீர்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள். உங்கள்  கண்ணாடி உங்கள் புருவத்துடன் போட்டி போட வேண்டிய அவசியமில்லை. உங்கள் புருவங்களை சரியான அளவில் வைத்திட தொழில் ரீதியான  வல்லுனரை சீரான முறையில் சந்தியுங்கள். இந்த வகையில் உங்கள் கண்களுக்கான மேக்கப் அலங்கரிக்கப்படும். நல்ல முறையில் ப்ரைமரை  பயன்படுத்த வேண்டும்.

இதனால், கண்ணாடி அணிந்திருக்கும் உங்களின் கண்கள் கறை இல்லாமல் சரியாக இருக்கும். கண்இமை, ரோமங்களை சுருட்டிவிடுங்கள். உங்கள்  பணியை திறம்பட செய்து முடித்திட அடிப்படை கர்லர் ஒன்றே போதும். இதனால், கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களுக்கு மேக்கப் சிறப்பாக  அமையும். பெண்கள் ஐ-ஷேடோவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உங்கள் கண்ணாடி பின்புறத்தை நசநசவென ஆக்கிவிடும்.  நல்ல ஐ-லைனரை பயன்படுத்துங்கள். பூனை கண் வடிவம் அல்லது இறக்கை வடிவம் போன்ற பல விதமான வடிவங்களை முயற்சித்து பாருங்கள்.

கண்ணாடி அணிந்திருக்கும் உங்களுக்கு, இதில் ஏதாவது ஒன்று ஒத்துப்போய், உங்கள் கண்ணுக்கு அழகு சேர்க்கும். நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி  வகை உங்கள் கண்களை சிறியதாக காட்டுமா அல்லது பெரிதாக காட்டுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கண்ணாடி அணிந்திருக்கும் நீங்கள்  கண்களுக்கு மேக்அப் செய்யும்போது, உங்கள் கண்கள் சிறியதாக தெரிந்தால் கண்களை சுற்றி ஐ-லைனரை பயன்படுத்துங்கள். ஒருவேளை, கண்கள்  பெரியதாக தெரிந்தால் அளவுக்கு அதிகமாக ஐ-லைனரை பயன்படுத்தாதீர்கள். அதனை லேசாக போட்டு கண்களை சின்னதாகவும்,  மென்மையானதாகவும் காட்டுங்கள்.

உடனடி அழகு மற்றும் அடர்த்தியான தோற்றத்தை பெற சிவப்பு, பிங்க் போன்ற அடர்த்தியான நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள்.  கண்ணாடி அணிந்தவர்களுக்கு உங்கள் முக தோற்றத்தை உயர்த்தி காட்டும். கன்னங்களுக்கு பிங்க் நிற ப்ளஷரை பயன்படுத்தினால் நன்றாக  இருக்கும்.கண்கள் பெரியதாக தெரிந்தால் அளவுக்கு அதிகமாக ஐ-லைனரை பயன்படுத்தாதீர்கள். அதனை லேசாக போட்டு கண்களை சின்னதாகவும்,  மென்மையானதாகவும் காட்டுங்கள்.

உலாவரும் ஆபாசப் படங்கள்..!


 இண்டெர்நெட்டில் தற்போது ஸ்ருதிஹாசனின் ஆபாச படங்கள், அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கில் தான் நடித்த ‘ஏவுடு’ என்ற படத்தால் வந்துதான் இத்தனை பிரச்சனைகளும். அதில் ஒரு பாடலுக்கு கொஞ்சம் கிளாமரான உடையில் நடனமாடியிருக்கிறார் ஸ்ருதி.

பின்னால், அதை போட்டுப் பார்க்க மிகவும் அதிர்ந்து போனவர். அந்த பாடலில் இடம் பெற்ற சில காட்சிகளை நீக்கும்படி தயாரிப்பாளரிடம் முறையிட்டிருக்கிறார்.  அவரும் ஒப்புக்கொண்டு உறுதியளித்ததோடு, ஒப்பந்த்த்திலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். தற்போது அதை மீறும் விதமாக, அவர் குறிப்பிட்டு நீக்க சொன்ன அத்தனை படங்களும் தற்போது இண்டெர்நெட்டில் வந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து ஆந்திர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். தயாரிப்பு தரப்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி கை விரிக்க, தற்போது அந்த பட்த்தில் வேலை பார்த்த ஸ்டில் போட்டோகிராபர்களிடம் விசாரித்து வருகிறது போலீஸ்.

சந்தானம் - வடிவேலு இணைய திட்டம்...!






ரஜினியின் 'லிங்கா' படத்தில், வடிவேலுவையும், சந்தானத்தையும் இணைத்து நடிக்க வைக்கும், திட்டம் உள்ளதாம்.



சந்தானம், படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வடிவேலு தரப்பில் இருந்து, இன்னும் பதில் வரவில்லை என, கூறப்படுகிறது.



சந்தானம், ஹீரோவாகி விட்ட நிலையில், ரஜினிக்காக இந்த படத்தில் நடிக்கிறாராம்.

கமல்ஹாசனுடன் நடிக்க ஆசைப்படுகிறேன்: நடிகர் சந்தானம் பேட்டி!

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிவிட்ட சந்தானம், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சந்தானம் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ரஜினிகாந்துடன், 'லிங்கா' படத்தில் நடிக்கிறீர்களா?

பதில்:- நான், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவருடன், ‘எந்திரன்’ படத்தில் நடித்தது என் அதிர்ஷ்டம். அவருடன் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். இப்போது, ‘லிங்கா’ படத்திலும் நடிக்கிறேன். மீண்டும் அவருடன் நடிப்பதை பாக்கியமாக நினைக்கிறேன்.

கேள்வி:- கமல்ஹாசனுடன் எப்போது நடிக்கப்போகிறீர்கள்?

பதில்:- நான் ரஜினி ரசிகராக இருந்தாலும், கமல்ஹாசனுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என் ஆசை வெகுவிரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி:- சந்தானம் என்னிடம் சம்பளம் பற்றி பேசுவதே இல்லை என்று சுந்தர் சி. பெருமையாக கூறியிருக்கிறாரே?

பதில்:- அது உண்மைதான். அவரிடம் மட்டுமல்ல. இன்னும் சிலரிடம் கூட, இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று நான் கேட்பதில்லை. கொடுப்பதை வாங்கிக்கொள்கிறேன். சிலரிடம் வாங்காமலும் இருந்திருக்கிறேன்.

கேள்வி:- உங்களுக்கும், சிம்புவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக பேசப்படுகிறதே?

பதில்:- இப்படித்தான் எனக்கும், கார்த்திக்கும் கருத்து வேறுபாடு, மோதல் என வதந்தியை பரப்பினார்கள்.

இப்போது சிம்புவுடன் தகராறு என்று வதந்தி பரப்பியிருக்கிறார்கள். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் திரைக்கு வந்ததும், சிம்பு எனக்கு வாழ்த்து சொன்னார். அவருக்கும், எனக்கும் எந்த மனஸ்தாபமும் இல்லை.

கேள்வி:- நகைச்சுவை காட்சிகளில் மற்ற எல்லோரையும் கிண்டல் செய்கிறீர்கள். அரசியல்வாதிகளை மட்டும் கிண்டல் செய்வதில்லையே, ஏன்?

பதில்:- படத்தை ‘ரிலீஸ்’ பண்ண வேண்டாமா?

கேள்வி:- இனிமேல் கதாநாயகனாக மட்டுமே நடிப்பீர்களா அல்லது மற்ற கதாநாயகர்களுடனும் இணைந்தும் நடிப்பீர்களா?

பதில்:- கதாநாயகனாகவும் நடிப்பேன். மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து ‘காமெடி’யும் பண்ணுவேன்.’’

இவ்வாறு சந்தானம் கூறினார்.

கோச்சடையான் - திரை விமர்சனம்! படிக்கலாம் வாங்க...!

 கோச்சடையான் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :


இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் படமும் கோச்சடையான் அளவிற்கு கேலிக்கு ஆளானதில்லை. பலவருட தயாரிப்பு, சுல்தான் தான் கோச்சடையான் - ராணா தான் கோச்சடையான் என ஏகப்பட்ட வதந்திகள், பொம்மைப் படம் எனும் குறை படத்தை ரிலீஸ் செய்வதில் எழுந்த சிக்கல்கள் என சூப்பர் ஸ்டாரே வெறுத்துப்போய் லிங்கா ஆகிவிட்டார். அப்படி ரிலீஸ்க்கு முன்பே புகழ்பெற்ற படம், இன்று ரிலீஸ் ஆகிவிட்டது. எப்படி இருக்குன்னு......

ஒரு ஊர்ல..:
கோட்டையபட்டினம் நாட்டின் தலைமைத்தளபதி கோச்சடையான். தன் படைவீரர்களைக் காக்க அவர் செய்யும் ஒரு செயலால், தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுகிறார். கோச்சடையானின் மகன் ராணா அவர் மீதான பழியை நீக்கி, பழிவாங்குவதே கதை. (அப்போ இந்தப் படம் ராணா தானேன்னு கேட்கக்கூடாது)

உரிச்சா....:

முதலிலேயே சொல்லிவிடுகிறேன்...நாம் பயந்த அளவிற்கு படம் மோசம் இல்லை.

படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திற்கு ‘இது ரஜினி தானா? சரத்குமார் தானா? தீபிகா தானா?’ என்று நம் மனம் ஆராய்ச்சியில் இறங்குவது வாஸ்தவம் தான். உயிரோடு இருக்கும் ஆட்களின் தோற்றத்தில் பொம்மைகள் நடமாடும்போது, நாம் கம்பேர் பண்ணுவது இயல்பு தான். ஆனால் முதல் அரைமணி நேரத்தில் ‘ஓகே’ என்று செட்டில் ஆகிவிடுகிறோம்.
சிறுவன் ராணா கோட்டயப்பட்டினம் நாட்டில் இருந்து, அவர்களின் எதிரி நாடான கலிங்கபுரிக்கு போவதில் ஆரம்பிக்கிறது படம். அங்கே வளரும் ராணா, தன் வீரத்தால் படைத்தளபதியாக ஆகிறார். மனதிற்குள் ஒரு திட்டத்தோடு காய் நகர்த்தி, அந்த நாட்டின் மன்னன் ஜாக்கிசெராப் - இளவரசர் ஆதியை ஏமாற்றி, தான் நினைத்தபடியே கோட்டயப்பட்டினத்திற்கு ஒரு வீரனாகத் திரும்பி வருகிறார்.

கலிங்கபுரியில் மாமா நாகேஷ் (ஆம், அவர் கேரக்டரையும் பொருத்தமாக உருவாக்கியிருக்கிறார்கள்) கோச்சடையானின் தங்கையை வளர்த்து வருகிறார். கோச்சடையானின் அண்ணன் சிறுவயதிலேயே காணாமல் போய் விட்டதாகச் சொல்கிறார் நாகேஷ். ராணாவின் தங்கையை இளவரசர் சரத் குமார் காதலிக்க, இளவரசி தீபிகா படுகோனே ராணாவை காதலிக்கிறார். இந்த பண்டமாற்று முறை அரசர் நாசரை கடுப்பேற்றிவிடுகிறது. கூடவே ராணாவின் பழி வாங்கும் கதையும் சேர்ந்துகொள்ள, படம் அதன்பின் ஜெட் வேகத்தில் செல்கிறது.

உண்மையில் இந்தப் படத்தைக் காப்பாற்றுவது கே.எஸ்.ரவிகுமாரின் கதை-திரைக்கதை-வசனம் தான். கதை வலுவாக இருப்பதால், கொஞ்ச நேரத்திலேயே அனிமேசன் படம் என்பதை மறந்து படத்தில் ஒன்றிவிடுகிறோம்.இது அனிமேசன் இல்லை, மோசன் கேப்சரிங் டெக்னாலஜி என்றெல்லாம் சொல்கிறார்கள். நம் சிற்றறிவுக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. சில இடங்களில் முகத்தில் உணர்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதைத் தான் சொல்கிறார்களோ, என்னவோ. நமக்கு எல்லாமே பொம்மை தான்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பிண்ணனி இசையும் பாடல்களும் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கின்றன என்றே சொல்லலாம். மெதுவாகத்தான், கண்ணே கனியே, சில்லென்ற என எல்லாமே அட்டகாசமான பாடல்கள். காட்சிப்படுத்திய விதமும் பிண்ணனிக் காட்சிகளும் நன்றாகவே வந்திருக்கின்றன. படத்தின் ட்ரைலரும் பாடல் டீசரும் மொக்கையாகத் தெரிந்தன. ஆனால் தியேட்டரில் நன்றாகவே இருக்கின்றன.

அனிமேசன் கேரக்டர்களில் சூப்பர் ஸ்டார், நாசர், சோபனா, ஆதி உருவங்கள் அருமை. சரத் குமார், ஜாக்கி செராஃப் உருவங்கள் பரவாயில்லை. ஆனால் மிகவும் மோசம், தீபிகா படுகோனே மற்றும் தங்கையாக வரும் ருக்மிணி(பொம்மலாட்டம் ஹீரோயின்), சண்முகராஜா உருவங்கள் தான். அதிலும் தீபிகாவை க்ளோசப்பில் காட்டும்போது.......ஆத்தீ!

அதென்னவோ தெரியவில்லை, எல்லா சரித்திரப்படங்களிலும் மன்னன் மகளையே ஹீரோக்கள் லவட்டுகிறார்கள். அந்தக் காலத்திம் நம் மன்னர்களுக்குப் பெரும் தலைவலியாக இந்தப் பிரச்சினை இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அவதார் படத்தின் பட்ஜெட்டும் அவர்களின் டெக்னிகல் வசதிகளும் கோச்சடையானை விட, பலமடங்கு அதிகம். எனவே அதனுடன் இந்த ’ஸ்லோ’ மோசனை கம்பேர் செய்வது நியாயம் அல்ல. ஆனாலும் இந்திய சினிமா வரலாற்றில் இது புதிய தொடக்கமாக அமையலாம். அந்தவகையில் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இதுவரை அனிமேசன் படங்களுக்கென்று, தமிழ் சினிமாவில் மார்க்கெட் கிடையாது. இனி அது உருவாகலாம்.  அதே போன்றே மற்ற ரஜினி படங்களை நினைத்துப் பார்த்தாலும் கஷ்டம் தான். இரண்டு மணிநேரத்தில் படம் முடிவது, இன்னொரு ஆறுதல்.

கிளைமாக்ஸில் ராணா தன் தாயின் சபதத்தை நிறைவேற்றிவிடுகிறார். ஆனால் அதனாலேயே தந்தை கோச்சடையானின் சபதத்தை மீறிவிடுகிறார். படத்தின் இறுதிக்காட்சியில் காணாமல் போன அண்ணன் சோணா (அதுவும் ரஜினி தான்) வந்து நிற்கிறார். தம்பியும் அண்ணனும் மோத வேண்டிய சூழலில்.........தொடரும் போட்டு விடுகிறார்கள். சோ, இன்னொரு பாகமும் வரலாம்!

நெகடிவ் பாயிண்ட்ஸ் :


- படத்தைப் பற்றி நெகடின் இமேஜ் வரும் அளவிற்கு படத்தை உருவாக்க நேரம் எடுத்துக்கொண்டது
- படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல், கேப்டன் கூட்டணிப் பேச்சுவார்த்தை போல் விளையாட்டு காட்டியது
- மூலம் வந்தவங்க மாதிரி, காலை அகட்டி அகட்டி பல கேரக்டர்கள் நடப்பது
- என்ன இருந்தாலும், இது சூப்பர் ஸ்டார் படம் இல்லை

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- நச்சென்று எழுதப்பட்டிருக்கும் வசனங்கள்
- போரடிக்காமல் நகரும் திரைக்கதை
- கோச்சடையான் ஃப்ளாஷ்பேக்
- ஏ.ஆர்.ரஹ்மான்
- ரசிக்க வைத்த நாகேஷ்

பார்க்கலாமா? :


அதிகம் எதிர்பார்க்காமல் இது பொம்மைப் படம் என்ற புரிதலுடன் போனால், ஒருமுறை பார்க்கலாம்.

நன்றி: செங்கோவி
http://sengovi.blogspot.in

வித்தியாசமான உதவி...குட்டிக்கதை!

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான்.

அவனுக்குப் பசியெடுத்தது.

ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.

மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில
பழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின்
நுனியில் இருந்தன.

அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.

குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது.

ஏற்க்கெனவே பயந்து போயிருந்த அவன்,

மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு

"யாராவது காப்பாற்றுங்கள்'

என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான்.

உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார்.

மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார்.

அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.

கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது.

"பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே.

அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார்.

மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு,

"நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்"
என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்.

இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து
கிளைமேல் ஏறி விட்டான்.

விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான்.

அவரை சரமாரியாகத் திட்டினான்,

"ஏன் அப்படிச் செய்தீர்?

உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே,

"தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார்.

இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார்.

"நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால்
உறைந்து போயிருந்தாய்.

உன் மூளை வேலை செய்யவில்லை.

நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய்.

யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்.

உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை.

உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.

அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

'ஹாலிவுட் மோஷன் கேப்சர் படங்களை விட நன்றாக இருக்கிறது கோச்சடையான்' - பில் ஸ்டில்கோ!


ஹாலிவுட்டில் வெளியாகும் மோஷன் கேப்சர் படங்களை விட எவ்வளவோ மேம்பட்டதாக உள்ளது ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம், என்று பாராட்டியுள்ளார் ஹாலிவுட்டின் பிரபல மோஷன் கேப்சரிங் நிறுவனத் தலைவர் பில் ஸ்டில்கோ.

ஹாலிவுட்டில் அனிமேஷன் மற்றும் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் நிறுவனம் சென்ட்ராய்ட் மோஷன் கேப்சர் கம்பெனி.

இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் பில் ஸ்டில்கோ. இவர்தான் இப்போது தலைவராகவும் செயல்படுகிறார். லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோவில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

'ஹாலிவுட் மோஷன் கேப்சர் படங்களை விட நன்றாக இருக்கிறது கோச்சடையான்' - பில் ஸ்டில்கோ

கோச்சடையான் 3டி படத்தைப் பார்த்த பில் ஸ்டில்கோ ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள எக்ஸ்க்ளூசிவ் பேட்டி:

நான் இந்தத் துறையில் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளேன். ஹாலிவுட்டில் இந்தத் தொழில்நுட்பம் புகுந்த ஆரம்ப நாளிலிருந்து படங்களைப் பார்த்து வருகிறேன். நிச்சயமாகச் சொல்வேன், இதற்கு முன் ஹாலிவுட்டில் இந்த மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் வெளியான எத்தனையோ படங்களைக் காட்டிலும், பல மடங்கு சிறப்பாக வந்துள்ளது கோச்சடையான்.

இந்தப் படம் பற்றி, அது வெளியாகும் முன்பே சில விமர்சனங்கள் வந்ததை அறிந்தேன். ஆனால் நிச்சயம் அது வேறு ஏதோ காரணங்களுக்காக வந்திருக்கலாம். படம் பார்த்தால் அவர்கள் அமைதியாகிவிடுவார்கள்.

என் ஆர்வமெல்லாம், பத்தாண்டுகளில் இந்தத் தொழில்நுட்பம் எந்த அளவு வளர்ந்திருக்கிறது.. இதை இந்தியா எப்படி இனி பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதுதான்.

கோச்சடையானை இதே தொழில்நுட்பத்தில் இதற்கு முன் வந்த எந்தப் படத்தோடும் ஒப்பிட முடியாது. காரணம், இந்தப் படம் உருவாக்கப்பட்ட விதம் மற்றும் பின்னணி.

இந்தப் படத்தை வேறு படங்களோடு ஒப்பிடுவது மிகவும் தவறு. வேறுபட்ட பட்ஜெட்கள், வேறுபட்ட கால அவகாசம் மற்றும் வேறுபட்ட அனுபவங்கள்தான் அதற்குக் காரணம். அடுத்த 5 அல்ல பத்தாண்டுகளில் இந்த மாதிரி ஒப்பீடுகள் கூட இருக்காது என நினைக்கிறேன். தாங்கள் எப்படிப்பட்ட தவறான முடிவுகளுக்கு வந்துவிட்டோம் என விமர்சகர்கள் உணர்வார்கள்.

எல்லா மோஷன் கேப்சர் படங்களும் அதிக பட்ஜெட்டில் உருவானவை என்று சொல்ல முடியாது.

டின் டின், அவதார் படங்களுக்கு பெரிய அளவில் செலவானது ஏன் என்று கேட்கிறார்கள். இந்தப் படங்கள் உருவானபோது, மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் அதன் ஆரம்பத்தில் இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் புதிதாகக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினோம். அந்த கண்டுபிடிப்புச் செலவும் படத்தின் பட்ஜெட்டில் சேர்ந்து கொண்டது.

ஆனால் இந்தியாவுக்கு அந்தக் கஷ்டம் இல்லை. இந்தத் தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி படம் எடுத்ததால் ரூ 125 கோடியில் கோச்சடையானை எடுக்க முடிந்திருக்கிறது.

ரஜினிகாந்த் என்ற மிகப்பெரிய ஈர்ப்புள்ள நடிகர் இந்தப் படம் முழுக்க இருப்பதே, கோச்சடையானை மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படம் இந்தியப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

மோஷன் கேப்சர் டெக்னாலஜியை இந்திய சினிமாவில் அழுத்தமாக அறிமுகப்படுத்த ரஜினிகாந்த்தான் சிறந்த தேர்வு. இந்த மாதிரி ஒரு புதுமையான விஷயத்துக்கு அவர்தான் தேவை.

கோச்சடையானை குழந்தைகளுக்கான ஒரு அனிமேஷன் படம் என்று சிலர் பார்க்கிறார்கள். இது அவர்களின் சினிமா ரசனை எந்த அளவு பாமரத்தனமாக உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம். கிராபிக் நாவல்கள், காமிக்ஸ்களைப் படிக்கத் தவறியதாலேயே இப்படியெல்லாம் அவர்கள் பேசுகிறார்கள். இந்தப் படத்தை ஆதரிக்கத் தவறினால், இந்தத் தொழில்நுட்பத்தை தவறவிடுவதாக அர்த்தம்."

-இவ்வாறு பில் ஸ்டில்கோ கூறியுள்ளார்.

ஹாரி பாட்டர், அயன்மேன், ஹ்யூகோ, டோட்டல் ரீகால், வோர்ல்ட் வார்ஸ், 2012, லாஸ்ட் இன் ஸ்பேஸ், குவாண்டம் ஆப் சோலேஸ் உள்பட ஏராளமான படங்களுக்கு மோஷன் கேப்சரிங் மற்றும் 3 டி பணிகள் செய்தது பில் ஸ்டில்கோவின் சென்ட்ராய்ட் நிறுவனம். இப்போது கோச்சடையானுக்கும் மோஷன் கேப்சரிங் பணியாற்றியுள்ளது.

சென்னையில் இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் பிற மொழிப் படங்களுக்கு பணியாற்ற முடிவு செய்துள்ளது சென்ட்ராய்ட்.

100 அரங்குகளில் கோச்சடையான் இன்று சிறப்புக்காட்சி!


அமெரிக்காவில் 250க்கும் அதிகமான அரங்குகளில் ரஜினியின் கோச்சடையான் படம் நாளை வெளியாகிறது.

இவற்றில் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் ஒரு நாள் முன்பாக, இன்று இரவே சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். கோச்சடையான் இதுவரை எந்த வெளிநாட்டு பிறமொழிப் படங்களும் அமெரிக்காவில் இவ்வளவு அரங்குகளில் வெளியானதில்லை என்று கோச்சடையானை வெளியிடும் அட்மஸ் எண்டர்டெயின்மென்ட் அறிவித்துள்ளது.

இதற்கு முன் கடந்த 9-ம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டபோது கோச்சடையான் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளுக்கு 200 திரையரங்குகள் வரை ஒதுக்கியிருந்தனர். ரிலீஸ் தேதி தள்ளிப் போய், நாளை வெளியாகும் கோச்சடையானுக்கு கூடுதல் அரங்குகள் கிடைத்துள்ளன பல நாடுகளில். குறிப்பாக நாளை எக்ஸ் மேன் ஹாலிவுட் படம் வெளியாக உள்ளநிலையில் இவ்வளவு கூடுதல் அரங்குகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒரு வெளிநாட்டுப் படத்துக்கு 200 தியேட்டர்கள் கிடைத்ததே அதிகம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 250-ஐத் தாண்டியிருப்பது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

கருவுற்றிருக்கையில் எலாஸ்டிக் உடைகளை அணியக் கூடாதா?


கருவுற்றிருக்கையில் எலாஸ்டிக் உள்ள உடைகளை அணியக் கூடாது என்கிறார் என் மாமியார். கருவுற்ற நேரத்தில் உடை விஷயத்தில் என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? எலாஸ்டிக் பொருத்தப்பட்ட உடைகள், நம் உடலில் அதிக வியர்வையை ஏற்படுத்தும். இவை, நம் உடலை இறுக்கமாகப் பற்றிக் கொள்வதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அணியும் இடத்தில் கறுப்பான தழும்புகள் உருவாகும். இதனால் பூஞ்சைகள்

உருவாகி அரிப்புகளும் உண்டாகும். இதை கண்டுகொள்ளாமல் விட்டால் தோல் புற்று நோய் வரும் ஆபத்து கூட இருக்கிறது. அதனால் தளர்வான காட்டன் உடைகளே நம் பருவநிலைக்கும் கர்ப்ப காலத்துக்கும் ஏற்றவை.

குழந்தை அழுகிறதா ..? அழுகையை நிறுத்த இப்படி பண்ணுங்க!


பொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். வீட்டில் பெரியவர்கள் பாட்டி, தாத்தா போன்ற அனுபவசாலிகள் இருந்தால் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கவலை இல்லை. அப்படி பெரியவர்கள் இல்லாத வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. குழந்தைகள் காரணமே இல்லாமல் திடீரென பெரும் அலறலுடன் அழும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

சாதாரணமாக ஏதேனும் பிரச்னை என்றால் தான் குழந்தை அழும். சிறிய குழந்தைகளுக்கு பசி ஏற்பட்டால் அழும். மேலும் புதுவிதமான பிடிக்காத உணவை கொடுத்தாலும் அழும். அந்நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. பசி இல்லாவிட்டாலும் உறிஞ்சுவது அக்குழந்தைக்கு ஆறுதல் அளிக்கும். சில சமயம் பெற்றோர் கண்ணில் படாத நேரங்களிலும் குழந்தைகள் அழும்.

அப்போது குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சினால் அழுகையை நிறுத்தி விடும். இறுக்கும் துணிகள், மிகவும் உஷ்ணமாக்கும், மிகவும் குளிர்ச்சியான துணிகள் அணிவதால் ஏற்படும் உணர்வால் அழும். மேலும் பல் முளைத்தல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படும் போதெல்லாம் கூட அழலாம். இப்பிரச்னையை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.கால்களை உதைத்து உதைத்து உரக்க அழுதால் குழந்தைக்கு மலப்பையில் ஏற்பட்ட பிடிப்பினால் வயிற்று வலி உள்ளது என்று அர்த்தம்.

சாதாரணமாக காய்ச்சல் உள்ள குழந்தையின் அழுகை சத்தம் குறைவாக இருக்கும். அரற்றும். வலியின் காரணம் தெரிந்தால் சரி செய்து குழந்தையை தேற்ற வேண்டும். இல்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். கால்களை உதைத்து அழும்போது அடிவயிற்று வலி இருக்கிறது என்று அர்த்தம். இதற்கு நேராக மேல் நோக்கி சில நொடிகள் பிடிப்பது பிரச்னையை தீர்க்கும். சிவந்த, பிசுபிசுப்பான கண்களாக இருந்தால் கண் நோய் ஏற்பட்டதாக கருதலாம்.

இதற்கு கண்களை வெந்நீரால் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகள் எப்போதாவது மலம் கழிக்கும். கெட்டியாக, சிரமப்பட்டு போனால் அதற்கு மலச்சிக்கல் நோய் தொற்றியுள்ளது என்பதை உணர வேண்டும். இதற்கு பாலூட்டுவதும், ஆகாரமும் குறைவாக உள்ளதா? என்பதை சரி பார்க்க வேண்டும். கூடுதல் திரவ ஆகாரங்கள், பழச்சாறு கொடுக்கலாம்.

இளகிய, நீராக மலம் போனால் சீத பேதி ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். இதற்கு நிறைய திரவ பதார்த்தங்களை கொடுக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ். மற்றும் தொடர்ந்து வழக்கமான ஆகாரம் கொடுக்க வேண்டும். தொடைகள் மற்றும் பின்புறம் சிவந்திருந்தாலும் நேப்பி ரேஷ் வந்துள்ளதை அறியலாம். இதற்கு நேப்பியை அடிக்கடி மாற்ற வேண்டும். குழந்தையை சுத்தமாக, உலர்வாக வைத்திருப்பது அவசியமாகும்.

பின்புறத்திற்கு நல்ல காற்றோட்டம் தேவையாகும். தலையில் மஞ்சள் செதில்கள் உருவாகி பொடுகால் குழந்தைகள் அழலாம். இதற்கு ஒரு வாரத்திற்கு தினமும் குழந்தையின் தலைமுடிக்கு ஷாம்பூ போட்டு அல சினால் பொடுகு குணமாகும். இவைகள் மூலம் குழந்தைகள் என்ன காரணத்திற்காக அழுகிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வைத்தியம் செய்வது குழந்தைகள் அழுகையை நிறுத்த வழி செய்யும்.

கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரியை வசூலிக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை ஐகோர்ட்டில் எர்ணாவூரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்தையா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

திரைப்பட தணிக்கை துறையிடம் 'யு' சான்றிதழ் பெற்ற திரைப்படம், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் விதமாக உள்ள திரைப்படம், பெரும்பான்மையான வசனங்கள் தமிழில் உள்ள திரைப்படம் ஆகியவைகளுக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின்படி பல திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசிடம் வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களை பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து தியேட்டர் உரிமையாளர்கள் வரியை வசூலிப்பதாகவும், இதில் மிகப்பெரிய மோசடி நடப்பதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும் 2011-ம் ஆண்டு அரசாணைக்கு தடை விதித்து கடந்த ஏப்ரல் 10-ந் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையில், 'தெனாலிராமன்' மற்றும் 'என்னமோ ஏதோ' ஆகிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி கேட்டு அந்த திரைப்படங்களில் தயாரிப்பாளர் அரசிடம் விண்ணப்பம் செய்தனர். வரி விலக்கு தொடர்பான அரசாணைக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளதால், அவர்களது விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியாது என்று தமிழக வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை முதன்மை செயலாளர், ஆணையாளர் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால் தமிழக அரசு 'கோச்சடையான்' படத்துக்கு வரி விலக்கு அளித்து கடந்த 12-ந் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.

வரி விலக்கு அளிக்கும் அரசாணைக்கு இந்த ஐகோர்ட்டு தடை விதித்து இருக்கும்போது, இதுபோன்ற வரி விலக்கு அளிக்க முடியாது. ஆனால், கோச்சடையான் படத்துக்கு எப்படி வரி விலக்கு வழங்கப்பட்டது? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிகாரிகளின் இந்த செயல் கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும்.

தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டம் அல்லது தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றின் கீழ் ஏதாவது ஒரு உத்தரவு பிறப்பிக்கும்போது, தமிழக அரசின் ஒப்புதலை பெறவேண்டும் என்பதையும் இந்த அதிகாரிகள் கவனிக்க தவறியுள்ளனர்.

திரையரங்கு உரிமையாளர்களுடன் கூட்டுச்சேர்ந்து, தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டத்தை தவறாக பயன்படுத்தி, அரசுக்கு மிகப்பெரிய இழப்பை இந்த அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

கேளிக்கை வரி விலக்கு என்பது பொதுமக்களுக்குத்தானே தவிர, அது தனி நபருக்கு இல்லை என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. எனவே, கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யவேண்டும்.

இந்த வழக்கு பைசலாகும் வரை அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். எனவே, திரையரங்கு உரிமையாளர்கள், கோச்சடையான் படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து கேளிக்கை வரியை வசூலிக்கக்கூடாது.

கேளிக்கை வரி சேர்க்காமல், அரசு நிர்ணயம் செய்துள்ள டிக்கெட் கட்டணத்தை மட்டுமே திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்க வேண்டும். இந்த வழக்கில், திரையரங்கு உரிமையாளர்களை எதிர்மனுதாரராக மனுதாரர் சேர்க்க வேண்டும். வழக்கை, ஏற்கனவே கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

உத்தம வில்லன்... இப்ப சென்னையிலேயே ஷூட்டிங்!


உத்தம வில்லன் படத்துக்காக கமல் மற்றும் குழுவினர் ஆஸ்திரேலியா செல்கின்றனர், துருக்கி செல்கின்றனர் என வெவ்வேறு தகவல்கள் வந்த நிலையில்.. இப்போது ஷூட்டிங் சென்னையிலேயே நடக்கிறது.

கமல் ஹாஸன் திரைக்கதை எழுதி, நடிக்க அவரது நண்பர் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் படம் உத்தமவில்லன். கமலுக்கு இதில் இரண்டு ஜோடிகள். பூஜா குமார், ஆன்ட்ரியா இருவரும் நடிக்கின்றனர். கூடவே பார்வதியும் உண்டு.

 உத்தம வில்லன்... இப்ப சென்னையிலேயே ஷூட்டிங்! இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் பெங்களூரில் நடந்து முடிந்தது. 21-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை பெங்களூரில் படமாக்கினர். உத்தம வில்லன்... இப்ப சென்னையிலேயே ஷூட்டிங்!

அடுத்து 8-ம் நூற்றாண்டின் தெய்யம் கலைஞராக கமல் வரும் காட்சிகளை ஆஸ்திரேலியா அல்லது துருக்கியில் படமாக்கவிருந்தனர். ஆனால் அந்த படப்பிடிப்பை சென்னையிலேயே வைத்துக் கொள்வதென மாற்றிக் கொண்டார்களாம்.

அதன்படி உத்தம வில்லன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் நடக்கிறது. உத்தம வில்லன்... இப்ப சென்னையிலேயே ஷூட்டிங்! கேன்ஸ் விழாவுக்குப் போன கமல், கடந்த ஞாயிறன்று சென்னை திரும்பினார். இப்போது உத்தம வில்லன் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.