Friday, May 23, 2014

100 அரங்குகளில் கோச்சடையான் இன்று சிறப்புக்காட்சி!


அமெரிக்காவில் 250க்கும் அதிகமான அரங்குகளில் ரஜினியின் கோச்சடையான் படம் நாளை வெளியாகிறது.

இவற்றில் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் ஒரு நாள் முன்பாக, இன்று இரவே சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். கோச்சடையான் இதுவரை எந்த வெளிநாட்டு பிறமொழிப் படங்களும் அமெரிக்காவில் இவ்வளவு அரங்குகளில் வெளியானதில்லை என்று கோச்சடையானை வெளியிடும் அட்மஸ் எண்டர்டெயின்மென்ட் அறிவித்துள்ளது.

இதற்கு முன் கடந்த 9-ம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டபோது கோச்சடையான் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளுக்கு 200 திரையரங்குகள் வரை ஒதுக்கியிருந்தனர். ரிலீஸ் தேதி தள்ளிப் போய், நாளை வெளியாகும் கோச்சடையானுக்கு கூடுதல் அரங்குகள் கிடைத்துள்ளன பல நாடுகளில். குறிப்பாக நாளை எக்ஸ் மேன் ஹாலிவுட் படம் வெளியாக உள்ளநிலையில் இவ்வளவு கூடுதல் அரங்குகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒரு வெளிநாட்டுப் படத்துக்கு 200 தியேட்டர்கள் கிடைத்ததே அதிகம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 250-ஐத் தாண்டியிருப்பது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment