Monday, May 26, 2014

பாலிவுட் - கோச்சடையானை பின்னுக்குத் தள்ளிய எக்ஸ்மென்

பாலிவுட்டில் 23ம் தேதியன்று 'கோச்சடையான், எக்ஸ்மென், ஹீரோபான்டி' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஹீரோபான்டி மட்டுமே ஒரிஜனலான ஹிந்தித் திரைப்படம்.
இந்த படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராப் மகன் டைகர் ஷெராப் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார்.

மேற் சொன்ன மூன்று படங்களில் வசூல் ரீதியாக மிகப் பெரிய ஓபனிங்கை ஏற்படுத்தியது எக்ஸ்மென் படம்தானாம். கோச்சடையான படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு ஓபனிங் இல்லையாம். காரணம் படம் சொன்ன தேதியில் வெளிவராமல் இருவாரங்கள் கழித்து வெளிவந்ததே என்கிறார்கள்.

அதே சமயம் 'ஹீரோபான்டி' படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது என்கிறார்கள். முதல் நாளிலேயே சுமார் 7 கோடி ரூபாயை வசூல் செய்துள்ள இப்படத்தின் வசூல் போகப் போக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பாலிவுட் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

எக்ஸ்மென் படத்திற்கு 70 சதவீதத்திற்கு மேலும், ஹீரோபான்டி படத்திற்கு 60 சதவீதத்திற்கு மேலும், கோச்சடையான் படத்திற்கு 30 சதவீதததிற்கு மேலும்தான் திரையரங்குகளில் கூட்டம் கூடியதாம்.

ஹிந்தியில் மிகப் பெரிய செலவு செய்து கோச்சடையான் படத்திற்கு விளம்பரம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி ரசிகர்கள் கோச்சடையான் படத்தில் உருவாக்கப்பட்டுள்ள அனிமேஷனை அவ்வளவா ரசிக்கவில்லையாம். ஆனாலும், படத்தின் கதையம்சம் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் போகப் போக கூட்டம் கூடும் என்கிறார்கள்.

ரசிகர்கள் ரிலீசான மறுநாளே கோச்சடையான் திருட்டு விசிடி: பொறி வைத்து பிடித்தனர் ரஜினி

 சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் படம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 23) ரிலீசானது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்திற்கு திருட்டி விசிடி வெளியாகும் வாய்ப்பு அதிகம் என்பதால் ரஜினி ரசிகர்கள் அதனை தடுக்க மாட்டம் வாரியாக கண்காணிப்பு படையை உருவாக்கி உள்ளனர்.

சேலம் கண்காணிப்பு படையினர் நேற்று (மே 24) பொறிவைத்து திருட்சி விசிடியை பிடித்தனர். சேலம் பகுதியில் கோச்சடையான் திருட்டு விசிடி விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் பழனிவேல் தலைமையில் ரசிகர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். சேலம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சிடி கடையில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுவதை கண்டு அதை கண்காணித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பெரிய பார்சல் ஒன்றை கொண்டு வந்த ஒருவர் கடைக்குள் நுழைந்தார். அவரை பின் தொடர்ந்து சென்ற ரசிகர்கள் அந்த பார்சலை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 500 கோச்சடையான் திருட்டு விசிடிக்கள் இருந்தன.

உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சிடிக்களை கைப்பற்றி கடை உரிமையாளரையும், ஊழியர்களையும் கைது செய்தனர். தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள்.