Wednesday, May 28, 2014

ரிஸ்க்கான பைக் காட்சியில் தல 55..!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் கதை, சென்னை பின்னணியில் நடப்பது மாதிரி என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர்.ரோடு பகுதியில் நடந்தது. இதனை தொடர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னை மவுன்ட் ரோடு மற்றும் நந்தனம் சிக்னல் பகுதிகளில் சில ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

அந்த காட்சிகளில் அஜீத்தின் ரிஸ்க்கான பைக் மற்றும் ஜீப் சேஸிங் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதை திரையில் பார்க்கும் போது மிகவும் பிரம்மிப்பாக இருக்கும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆக இந்த சேஸிங் சீன் பில்லா ல இருந்தா மாதிரி இருக்கும் போல

ஐ பட ஆடியோ விழாவிற்கு வரும் பிரம்மாண்டங்கள்..!

இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்டமாக இயக்கிக் கொண்டிருக்கும் படம் ஐ. இந்த படத்தில் விக்ரம், எமி ஜாக்சன் என பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொள்ள போவதாக நாம் அறிவித்திருந்தோம்.

இப்போது இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்ட்டனை அழைக்கிறார்களாம்.

ஆஸ்கர் ரவிச்சந்திரனின் இந்த முடிவு மற்ற தயாரிப்பாளர்கள் மூக்கின் மேல் கை வைத்து உட்காரும் அளவிற்கு ஆச்சர்யபட்டுவிட்டனராம்.

ஆனால் இவருடைய சினி வாழ்க்கையில் பிரம்மாண்டங்களை அழைப்பது இது ஒன்றும் புதிதல்ல, அதற்கு உதாரணமாக தசாவதாரம் படத்தை சொல்லலாம்.

இந்த பட பாடல் வெளியீட்டு விழாவிற்காக ஜாக்கிசானை சென்னை அழைத்து வந்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இதல்லாம் ஓகே, பில் கிளின்டன் வராரு எவ்வளவு பில் சார்???

பார்த்திபனின் புதிய போட்டி!

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவருகிறது கதை திரைக்கதை வசனம் இயக்கம். கதையே இல்லாமல் ஒரு படம்
என்ற சப்டைட்டிலுடன் உருவாகிவரும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். முன்னணி நடிகர் மற்றும்
நடிகைகளில் பெரும்பாலானவர்கள் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்குவரவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தப் புதிய முயற்சியிலும் இறங்கியிருக்கிறது படக்குழு. இப்படத்தின் டைட்டிலை நான்கு முக்கிய
இயக்குனர்கள் எழுதிக் கொடுத்ததாகவும், அதிலிருந்து ஒவ்வொரு வார்த்தையினை எடுத்து இப்படத்தின் டைட்டிலை வைத்ததாகவும் கூறியுள்ள பார்த்திபன், அந்தத் டைட்டிலை வைத்துக் கொண்டு அதன் ஒவ்வொரு வார்த்தையினையும் எந்த இயக்குனர் எழுதினார் என்று சரியாகக் கண்டுபிடிப்போருக்குப் படத்தினைப் பார்ப்பதற்கான நான்கு டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

சரியான விடையைக் கண்டுபிடிப்போர் ktvimovie2014@gmail.com என்ற மெயில் ஐடிக்கு தங்களது விடைகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுனர். மேலும் அத்துடன் உங்களின் முகவரி, போன் நம்பர் உள்ளிட்டவற்றையும் அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி ஜோடியா திரிஷா நடிக்கலை - நலன் குமாரசாமி!

சூதுகவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அதிரடி நகைச்சுவை இயக்குனராகக் களமிறங்கியவர் நலன் குமாரசாமி. அறிமுகப் படமே மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்ததால் இவரது அடுத்த படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எஸ்கிமோ காதல் என்று தலைப்பிடப்பட்ட கதையினை உருவாக்கிவருவதாகவும், விஜய் சேதுபதி இப்படத்தில்
நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எஸ்கிமோ காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக திரிஷா நடிப்பது குறித்து வந்திருக்கும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் வதந்தி என்றும், இப்படத்தில் நடிப்பதற்காக திரிஷாவை நாங்கள் யோசிக்கவே இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் இயக்குனர் நலன் குமாரசாமி. விஜய் சேதுபதி நடிக்கவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் அடுத்த ஆண்டு துவங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முயல் + ஆமை = இரட்டை வெற்றி..?

              முன்னொரு காலத்தில் முயல் மற்றும் ஆமையிடையே யாரால் வேகமாக செல்லமுடியும் என்ற வாதம் எழுந்தது. ஓட்டப் பந்தயத்தின் மூலமாக கண்டறிய தீர்மானித்தனர். போட்டி நடக்கும் தேதி, ஆரம்பிக்கும் இடம், முடியும் இடம் போன்றவைகளை முடிவு செய்தன.

போட்டி தேதியும் வந்தது, போட்டியும் ஆரம்பித்தது. மிகவும் வேகமாக ஓடிய முயல் இலக்கை அடைய சிறிது தூரம் இருக்கும் போது, மிகத் தொலைவில் ஆமை வருவதைக் கண்டு சிறிது இளைப்பாற எண்ணியது. ஆனால் அசதியில் தூங்கிவிட்டது முயல்.

நிதானமாக வந்த ஆமை இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. விழித்து எழுந்த முயல், ஆமை வெற்றி பெற்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது.

இதன் மூலம் நாம் அறிவது : நிதானமாகவும் விவேகத்துடனும் செய்யும் செயலில் நிச்சயமாக வெற்றியடைய முடியும்.

ஆனால் கதை இன்னமும் முடியவில்லை. சில சுவாரசியமான நிகழ்வுகளுடன் தொடர்கிறது கதை.

தோற்றுப் போனதால் வருத்தமடைந்த முயல் தன்னுடைய தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தது. தனக்கு சாதகமாகவே அனைத்தும் நடக்கும் என்ற எண்ணம், தன்னால் மட்டுமே முடியும் என்ற தலைகனம், இவைதான் தன் தோல்விக்கான காரணம் என்பதை உணர்ந்தது.

இதனால் ஆமையை மறுபடியும் போட்டிக்கு அழைத்தது முயல். ஆமையும் போட்டிக்கு சம்மதித்தது. மறுபடியும் நடந்த போட்டியில், தன்னுடைய குறைகளை முன்பே அறிந்திருந்த முயல் வேகமாக சென்று இலக்கையடைந்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் நாம் அறிவது : சிந்தித்து செயல்படுவதன் மூலம் உறுதியாக வெற்றியடைய முடியும்.

இப்போதும் கதை முடியவில்லை. இம்முறை ஆமை தன்னுடைய தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தது.

சிறிது நேரம் யோசித்த ஆமை, முயலை மறுபடியும் போட்டிக்கு அழைத்தது. பந்தயத்திற்கு சற்று வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்தது. முயலும் போட்டிக்கு சம்மதித்தது. ஆனால் முயலால் நதிக்கரையை அடையும் வரை மட்டுமே வேகமாக ஓடமுடிந்தது. நதியை கடந்தால் மட்டுமே இலக்கை அடையக்கூடிய நிலை.

அதிர்ச்சியில் செய்வதறியாமல் நின்றது முயல். சிறிது நேரத்தில் அங்கு வந்தடைந்த ஆமை நிதானமாக ஆற்றை கடந்து இலக்கையடைந்து வெற்றி பெற்றது.
       
இதன் மூலம் நாம் அறிவது : நம்முடைய போட்டியாளரின் பலமறிந்து, பிறகு தன்னுடைய பலத்திற்கேற்ப போட்டியிடும் களத்தை முடிவு செய்ய வேண்டும்.

இன்னும் கதை தொடர்கிறது. இருவரும் போட்டிகளின் மூலமாக நல்ல நண்பர்களாகினர். இருவரும் சேர்ந்து யோசித்து ஒரு தீர்மானத்தை அடைந்தனர். இறுதியாக, இருவரும் இணைந்து போட்டியில் பங்கு பெற முடிவு செய்தனர்.

போட்டி நாளன்று ஓடும் போது முயல் ஆமையை சுமந்து கொண்டு ஓடியது. நதியை அடந்ததும் ஆமை முயலை தன்னுடைய முதுகில் சுமந்து அக்கரையை அடைந்தது. அக்கரையில் இருந்து மீண்டும் முயல் ஆமையை சுமந்து சென்று இலக்கையடைந்தது. இருவரும் அதுவரை பெறாத சந்தோஷத்தையும், தன்னிறைவையும் பெற்றனர்.

இதன் மூலம் நாம் அறிவது : தனித்தன்மையுடன் நல்ல ஆரோக்கியமான போட்டியாளருடன் போட்டியிடுவது பாராட்டுக்குரியது. மற்றவர்களுடன் இணைந்து ஒரு குழுவாக செயல் படாதவரைட்டால் மிகவும் எளிய முறையில் வெற்றி பெற முடியும். ஏனென்றால் அனைத்து செயல்களையும், சரிவர செய்ய இயலாது. குழுவாக இணைந்து செயல்படுவதென்பது, சூழ்நிலைக்கேற்ப திறமையானவர்கள் பொறுப்பேற்க முன்வருவதே.

மேற்கூறிய கதையில் முயலோ ஆமையோ தோல்வியைக் கண்டு சோர்வடையவில்லை. முயல் தன்னுடைய தோல்விக்குப் பிறகு கடினமாக உழைத்தது. ஆமை தன்னுடைய தோல்விக்குப் பிறகு இயன்ற அளவு முயற்சி செய்தது மட்டுல்லாமல் போட்டியிடும் களத்தை மாற்றியமைத்தது.

வாழ்வில் தோல்விகள் அடையும் போது கடின உழைப்பின் மூலம் அதனை வெற்றியாக மாற்ற முயல்வது ஓரு வகை. வழக்கமான சிந்தனையை மாற்றி முயன்று வெற்றி பெறுவது இன்னொரு வகை.

சில நேரங்களில் இரு வகையிலும் முயற்சி மேற்கொள்ளும் நிலை ஏற்படும். இந்த உண்மையை முயலும் ஆமையும் உணர்ந்தன. நம்முடைய போட்டியாளருடன் போட்டியிடுவதை விடுத்து போட்டியாளருடன் இணைந்து பிரச்சினைகளை எதிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் எளிதாக இலக்கை அடைய முடியும்.

முயலும் ஆமையும் இணைந்து நமக்கு சொல்லும் பாடங்களாவன :

* நிதானமாக செயல்படுதல் மூலம் வெற்றியை நிச்சயமாக அடைய முடியும்.

* யோசித்து விரைவாக செயல்படுபவர்கள், நிதானமாக செயல்படுபவர்களை விட எளிதில் வெற்றியை அடைய முடியும்.
குழுவாக இணைந்து செயல்படுவதன் மூலமாக வெற்றியை அடைவது நிச்சயம்.

* தோல்வியைக் கண்டு துவளக்கூடாது.

* போட்டியாளருடன் எதிர்ப்பதை விடுத்து பிரச்சனைகளை எதிர்கொள்ளப் பழகவேண்டும்.

ஹாலிவுட் படம் அளவுக்கு கோச்சடையான் இல்லை - சிம்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கோச்சடையான் திரைப்படம் பல்வேறுவகையான விமர்சனங்களைச் சந்தித்துவருகிறது. திரைத்துறையைச் சார்ந்தவர்கள் வழக்கம்போலவே படம் சூப்பரோ சூப்பர் என்று கொண்டாடினாலும் சாதாரணப் பொதுமக்களும், விமர்சகர்களும் இப்படத்தின் நிறை குறைகளைக் கலந்து சொல்லிவருகின்றனர்.

சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவும் கோச்சடையான் திரைப்படம் குறித்து தனது கருத்துக்களைக் கூறியுள்ளார். அவர்
கூறியிருக்கும் கருத்துக்களின் அடிப்படையில், கோச்சடையானின் கிராபிக்ஸ் காட்சிகளை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடமுடியாது என்றும், ஆனாலும் ஒரு ஆரம்பமாக இப்படத்தினை உருவாக்கியதற்கு இப்படத்தின் இயக்குனருக்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்திற்குக் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எடிட்டர்
ஆண்டனி ஆகியோரையும் பெருமளவில் பாராட்டியுள்ளார். வசனங்கள் மிகச் சிறப்பாக இருப்பதாகவும் தெரித்துள்ளார். அத்துடன் கோச்சடையான் திரைப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இப்படத்தினை இயக்கியதற்காக சௌந்தர்யாவைப் பார்த்துப் பெருமிதப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சொந்தமா வீடு கட்டுறீங்களா? இதையெல்லாம் கவனிக்க மறக்காதீங்க!

           பணம் குறைவு, உடனடியாக குடியேறலாம் என்பதால் பிளாட் வாங்குவதுதான் இப்போது பிரபலமாகிவிட்டது. இருந்தாலும், தனி வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையுள்ள பலர், நகரத்தை விட்டு வெகு தொலைவு சென்றாலும், ஒரு கால் கிரவுண்ட் வாங்கியாவது வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சிலர் பூர்வீக இடம் இருந்தால் அதில் வீடு கட்ட திட்டமிடுவார்கள். எப்படியோ, வீடு கட்டுபவர்கள் சில விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்கவேண்டியது மிக அவசியம். மனையை சதுரம் செய்யும்போது மூலை மட்டம் கொண்டு 90 டிகிரி இருக்கும் வகையில் அமைக்கவேண்டும். அஸ்திவாரம் அமைக்கும்போது மண் பிடிமானம் இல்லாவிட்டால் திமிசு கட்டையால் நன்றாக அடித்தபிறகு கான்கிரீட் போடவேண்டும்.

அஸ்திவாரத்துக்கு பதிலாக பில்லர் அமைத்து வீடு கட்டுபவர்களுக்கு பிரச்னை இருக்காது. நல்ல அனுபவம் வாய்ந்த பொறியாளரை தேர்வு செய்து பணியை ஒப்படைத்தால் கட்டுமானம் காலாகாலத்துக்கு நிலைத்து நிற்கும்.  உங்கள் மேற்பார்வையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றால், எல்லா நிலைகளிலும் வாட்டர் லெவல் டியூப் பயன்படுத்தப்படுகிறதா என கவனியுங்கள். அஸ்திவாரம், பெல்ட் லிண்டல், கான்கிரீட் என அனைத்து கட்டுமான நிலைகளிலும் லெவல் டியூப் அவசியம் பயன்படுத்த வேண்டும். கதவு ஜன்னல் பொருத்தும்போதும் வாட்டர் லெவல் டியூப் பயன்படுத்துவது அவசியம். செங்கற்களை தண்ணீரில் நனைத்த பிறகே கட்ட அனுமதிக்கவேண்டும். செங்கல் சுவர் ஒவ்வொரு அடுக்காக கட்டும்போது முடிவில் குத்துக்கல்லாக வைத்து கட்டப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள்.

 சுவர் கட்டும்போதும் இணைப்பு வரும்போதும் கண்டிக்கல் உடைத்துப்போட்டு கட்ட வேண்டும். ஒரே நாளில் 5 அடிக்கு மேல் கட்டுவதற்கு பெரும்பாலும் அனுமதிக்காதீர்கள். அப்போதுதான் தரம் குறையாமல் இருக்கும். செங்கல் சுவருடன் காலம் பீம் இணைக்கும்போது கம்பி வலை வைத்து கட்ட வேண்டும். கலவையின்போது மணல், ஜல்லி சிமெண்ட், தண்ணீர் சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். குறிப்பாக மணலை நன்றாக சலித்துவிட்டே கட்டவேண்டும்.  கட்டிடத்துக்கு காலை, மாலை இருவேளையும் தண்ணீர் விடப்படுகிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

படிகள் அமைக்கும்போது, அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளதா என பாருங்கள். எலக்ட்ரிக்கல் பாயின்ட் அமைக்கும்போது அனைத்து இடத்திலும் சம அளவு உயரம் இருக்கவேண்டும். எந்த இடத்தில் என்ன மின்சாதனம் வைக்கப்போகிறீர்கள். மின்விசிறி, லைட் எங்கு அமைப்பது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ப எலக்ட்ரிக் பாயின்ட், சீலிங் கிளாம்புகள் அமைக்க வேண்டும்.

ரஜினி பஞ்ச் டயலாக் விக்ரமின் படப்பெயர்..?

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது என்று நாம் கூறியிருந்தோம்.

தற்போது இந்த படத்தை பற்றி மற்றொரு தகவல் வந்துள்ளது. அதாவது படத்துக்கு பத்து எண்றதுகுள்ளே (before counting 10) என்று பெயர் வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

மேலும் இந்த பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர், ஆனால் படக்குழுவினர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் டி.இமான் இசையமைக்கிறார்.

பாபா பஞ்ச் டயலாக் சூப்பர்

மீடியாவை கண்டு பயப்படும் கவுண்டமணி..?

இரண்டு, மூன்று வருடமாக சினிமா பக்கம் தலைக்காட்டாத கவுண்டமணி, தற்போது 49 ஓ திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

அவர் சினிமா திரையுலகில் தலைக்காட்டாத பட்சத்திலும் அவரது காமெடிகள் இப்போதும் ஓயாத அலையாய் அடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மிக எளிமையாக அவர் பிறந்தநாளை அவரது அலுவலகத்திலேயே கொண்டாடிய கவுண்டமணி,

மீடியாக்கு அளித்த பேட்டியில், படங்களே பார்ப்பதில்லை என்றும் ஆனால் ஆங்கில படத்தின் காமெடியை மட்டும் ரசிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் பத்திரிக்கைகளை கண்டு பயப்படுவதாகவும், தான் ஒன்று சொன்னால் அவர்கள் வேறு ஒன்றை எழுதி, ஏழரையை கூட்டுகிறார்கள் என்றும் கூறியிருகிறார் நம்ம கவுண்டர்.

அதையடுத்து, மற்ற அனைத்து கேள்விகளுக்கும் 49 ஓ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் பதிலளிப்பதாக தெரிவித்துள்ளாராம்.

49 ஓ திரைப்படத்தில் கவுண்டரின் கவுண்ட் டவுன் ஸ்டார்ட் !

அஜீத் பட ஷுட்டிங் – பட யூனிட் தூக்கம் காலி..!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் ஒரு புதிய படம் நடித்துக் கொண்டு வருவது நமக்கு தெரிந்த பழைய விஷயம்.

அஜீத் ஈசிஆர் ரோட்டில் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார் என்ற செய்தி அப்படியே சென்னையை சுற்றி பரவ, வந்தது பாருங்க கூட்டம், அப்படி ஒரு கூட்டம்.

இந்த கூட்டத்தை பார்த்து படம் எடுக்க முடியலையேனு கடுப்பாகி அதிரடியாக கௌதம் மேனன் எடுத்த முடிவின் விளைவு சுமார் 100 பேருக்கு தூக்கம் போச்சு

பகலில் படப்பிடிப்பு நடத்தினால் நம்ம படம் எடுக்க முடியாதுனு புரிந்து கொண்ட கௌதம், ஷுட்டிங்கை நள்ளிரவில் நடத்துகிறார். அதுவும் தனது யூனிட்டை சேர்ந்தவர்களுக்கு கூட ஈசிஆரில் எந்த இடத்தில் படப்பிடிப்பு என்பதையும் கடைசி நேர தகவலாகவே சொல்கிறாராம்.

இவ்வளவு ஜாக்கிரதையாக படம் எடுத்தாலும், நடு இரவில் தலலலலனு குரல் மட்டும் வருதாம்.

தல ரசிகர்கள் நாங்கள், தல காட்டாம இருப்போ மா.

இயக்குனர் நற்காலிக்கு ரீ என்ட்ரி கொடுத்த அர்ஜூன்..!

சேவகன் படத்தின் மூலம் தனது இயக்குனர் பாதையை தொடங்கியவர் அர்ஜூன்.

பின் வேதம், ஏழுமலை போன்ற படங்களை இயக்கி வந்தவர், மதராஸி திரைப்படம் தோல்வியில் முடிந்ததால், தன் இயக்குனர் பாதையை கைவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பின் தற்போது ஜெய்ஹிந்த் - 2 திரைப்படத்தில் மீண்டும் தனது இயக்குனர் வாழ்க்கையை அரம்பித்துள்ளார் அர்ஜூன்.

கல்வி முறையையும் அதன் குறைபாடுகளையும் மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் தான் ஜெய்ஹிந்த்.

இந்தியவையே புரட்டிபோடும் ஒரு கதையில் இப்படம் உருவாக டில்லி, மும்பை, சென்னை மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தியுள்ளதாக தெரிவித்திருக்கிறார் அர்ஜூன்.

மேலும் இப்படம் மீடியாக்களுக்கும், அப்துல்காலமிற்கும் சமர்ப்பிக்க எடுக்கப்பட்டுள்ள ஒரு படம் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

டி.வி தொகுப்பாளர்களின் அதிர வைக்கும் சம்பளங்கள்..!

வெளியே பார்க்கும் போது பிரம்மாண்டமாக தெரியும் தொகுப்பாளர்களுக்கு எல்லாம் தனியார் தொலைக்காட்சிகளில் கொடுக்கும் சம்பளம் என்னவோ குறைவு தான்,

ஆனாலும் அவர்கள் சினிமா நிகழ்ச்சிக்காக வாங்கும் சம்பளமோ விண்ணை தொடும் அளவிற்கு அதிகம். நான் கூறுவது அனைத்தும், பெண் தொகுப்பாளினிகளுக்கு மட்டுமே என்பது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.

நம் எல்லோருக்கும் தெரிந்த டிடி என்கிற திவ்யதர்ஷினியின் சம்பளம் தான் அனைத்து நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் சம்பளத்தையும் விட அதிகமானது.

டிடியின் சம்பளம் ஒரு நிகழ்ச்சிக்கு 60 ஆயிரமிலிருந்து 75 வரையாம். அவரை அடுத்து இருப்பது பாவனா அவரின் சம்பளமோ 35 ஆயிரமாம். அடுத்த இடத்தில் இருக்கும் ரம்யாவிற்கு 25 முதல் 30 ஆயிரம் வரையாம் மேலும் மற்ற தொகுப்பாளினிகளுக்கான சம்பளம் 5 ஆயிரத்தில் தொடங்கி 20 ஆயிரத்தில் முடிந்து விடுகிறதாம்.

சினிமா நிகழ்ச்சிகளுக்கு இவ்வளவு வாங்கும் இவர்களின் சம்பளம் கமர்ஷியல் நிகழ்ச்சிகளில் இன்னும் அதிகமாம் அதிலும் வெளியூர் என்றால் சொல்லவே வேண்டாம் இந்த சம்பளத்தில் இரண்டுமடங்கு சம்பளம் வாங்குகிறார்கள்.

இதை தவிர்த்து இவர்களது வந்து போகும் செலவு, தங்கும் ஒட்டல் செலவு எல்லாமே தனி கணக்கு, அதுவும் ஒரு வாரத்திற்கு முன்பே புக் செய்து பாதி சம்பளத்தை அட்வான்ஸாக கொடுக்க வேண்டும் என்று இப்படி ஏகப்பட்ட விதிமுறைகள்.

ஆனால் ஆண்களுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரைதான் சம்பளம்

அட ! ஆண்களுக்கு என்ன இப்படி சப்புனு முடிஞ்சிடுச்சு !