Thursday, May 22, 2014

அன்பே சிவத்தால் என் வீட்டை இழந்தேன் - சுந்தர் சி புலம்பல்!


தொடர்ந்து நகைச்சுவைப்படங்களை இயக்கி வரும் சுந்தர்.சி தான் கமல் நடித்த அன்பே சிவம் படத்தின் இயக்குநர் - என்ற தகவல் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அன்பே சிவம் கமல் படமாகவே மக்களின் மனதில் பதிந்ததாலோ என்னவோ, அப்படத்தின் இயக்குநரான சுந்தர்.சி பெயர் மறக்கடிப்பட்டுவிட்டது.

அன்பே சிவம் படம் வெளியாகி பல வருடங்கள் கடந்துவிட்டநிலையில், அன்பே சிவம் படத்தினால் என் சொத்துக்களை இழந்தேன் என்று வேதனைப்பட்டார் இயக்குநர் சுந்தர் சி.
தற்போது அவர் இயக்கி வரும் அரண்மனை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது இப்படி குறிப்பிட்டார்.

அன்பே சிவம் படம் வெளியானபோது அந்தப் படத்தை யாரும் பார்க்கவில்லை. இப்போது டிவியில் பார்த்துவிட்டு பலரும் பாராட்டுகிறார்கள். காலம் கடந்த பாராட்டினால் என்ன பிரயோஜனம்? என்று வருத்தப்பட்ட சுந்தர் சி, அன்பே சிவம் படத்தை இயக்கியதால் தன் சொத்தக்களை இழந்த கதையையும் பகிர்ந்து கொண்டார்.

அன்பே சிவம் படத்தினால் நஷ்டம் ஏற்பட்டதால் எனக்கு பேசிய சம்பளத்தை தயாரிப்பாளர் தரவில்லை. அதனால் அப்போது என்னால் இன்கம்டாக்ஸ் கட்ட முடியாமல் போனது. எனவே என் பேங்க் அக்கவுண்ட்டை முடக்கியது இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட். நான் கட்ட வேண்டிய இன்கம்டாக்ஸ் தொகையை கட்டுவதற்காக என் வீட்டை விற்று அந்தப் பணத்தில் டாக்ஸ் கட்டினேன். அதன் பிறகே என் அக்கவுண்ட்டை ரிலீஸ் பண்ணினார்கள். அதனால் அன்பே சிவம் என்னைப்பொருத்தவரை கெட்ட கனவுதான் என்று வேதனையுடன் குறிப்பிட்டார் சுந்தர் சி.

3 comments:

  1. தமிழில் இதுவரை வந்த சிறந்த படங்களில் அன்பே சிவமும் ஒன்று .வழக்கம் போலவே இந்த படத்தையும் தோல்வி படங்களில் ஒன்றாக ஆக்கி வைத்த பெருமைக்குரியவர்கள் தமிழ் ரசிகர்கள் .அது அறிவாளிகளுக்கான படம் .மூளை இல்லாத ரசிகர்களுக்கு ஏற்ற படமல்ல .

    ReplyDelete
  2. nadunilai naadi யின் கருத்தை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் . மிக்க நன்றி .

    ReplyDelete