Monday, June 2, 2014

ஜெயராமுக்கும் கமலுக்கும் என்ன தொடர்பு..? விளக்குகிறார் இவர்..?

 அதிகளவு விளம்பரமில்லாமல் திடீரென தொடங்கப்பட்டது கமலின் உத்தம வில்லன். கமலின் வழக்கமான காமெடிப் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் நூற்றாண்டுகள் தாவிச் செல்லும் கதையும், படத்துக்கான உழைப்பும், படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களும் இது வழக்கமான காமெடிப் படம் இல்லை என்கின்றன.
கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் போன்ற சூப்பர் சீனியர்கள் தொடங்கி ஜெயராம், ஊர்வசி போன்ற சீனியர்களும் ஆண்ட்ரியா, பூஜா குமார் மாதிரியான ஜுனியர்களும் பார்வதி மேனன் என்ற சப் ஜுனியரும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களில் பார்வதி மேனனுக்கு உத்தம வில்லன் கொஞ்சம் ஸ்பெஷல்.

பூ படத்தில் அறிமுகமான பார்வதி மேனனுக்கு அதற்கடுத்து சரியான வாய்ப்பு அமையவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த மரியான் நல்ல பெயரை வாங்கித் தந்தாலும் படம் ஓடாததால் ஓட்டைப் பானையில் நீர் இறைத்த மாதிரியானது நிலைமை. இந்நிலையில்தான் கமலின் உத்தம வில்லனில் நடிக்க அழைப்பு வந்தது பார்வதி மேனனுக்கு.
படத்தில் ஜெயராமின் மகளாக வருகிறார் பார்வதி. கதைப்படி கமலின் மருமகள். கமலின் ஜோ‌டி இல்லாவிடினும் கமலுடன் காம்பினேஷன் காட்சிகள் இருக்கிறதாம். அதுவே என்னுடைய பாக்கியம்தான் என புல்லரிக்கிறார்.

ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாடகக் கலைஞராகவும் இந்த காலத்து சினிமா நடிகராகவும் இரு வேடங்களில் கமல் நடித்து வருகிறார். ஜிப்ரான் இசை.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும், கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனலும் இணைந்து படத்தை தயாரித்து வருகின்றன.

0 comments:

Post a Comment