Monday, June 2, 2014

மொள்ளமாரி பயலே... !!!

போடா மொள்ளமாரி பயலே என்று நாம் திட்டுவது உண்டு. ஆனால் அது என்ன மொள்ளமாரி?

முல்லை என்பது ஒருவரிடம் இருக்க வேண்டிய இயைபு ஆகும். இந்த இயைபில் இருந்து வேறுபடுபவர்களை தான் முல்லைமாரி என்று பழங்காலத்தில் அழைத்தனர். தொல்காப்பியர் வாகை திணையில் படைவீரத்தில் வெற்றிவாகை சூடுகிரவர்களை மட்டுமின்றி தத்தம் துறையில் சிறந்து விளங்குபவர்களை வாகை என்றார். அன்று இதை பின்பற்றி அரச முல்லை , பார்ப்பன முல்லை, வல்லான் முல்லை என பல துறைகள் புறப்பொருள் வெண்பாமாலை வகுத்துரைத்தது.

ஆக முல்லை என்பது கற்பு நிலை ஆகும். இது ஆணின் கற்பும் அடங்கியது ஆகும். எனவே கற்பு அல்லது ஒழுக்க நிலையிலிருந்து தவறும் ஒருவரை முல்லை மாறி என்று அழைத்து , பிற்காலத்தில் அது திரிந்து தான் மொள்ளமாரியானது.

0 comments:

Post a Comment