Tuesday, June 3, 2014

ஒரே கதை கருவில் முண்டாசு பட்டி மற்றும் அப்புச்சி கிராமம்!

இன்றைய தமிழ் சினிமாவில் புது புது முயற்சிகளை கையாள தொடங்கி விட்டார் .அதற்கெல்லாம் விதை போட்டவர் தயாரிப்பாளர் சி.வி குமார் இவருடைய தயாரிப்பில் ஜூன் 13 தேதி வெளிவரவிருக்கும் படம் முண்டாசு பட்டி. இப் படத்தில் விஷ்ணு, நந்திதா, காளி நடிக்க புதுமுக இயக்குனர் ராம்குமார் இயக்குகிறார்.அதே சமயம் செந்தில்குமார் தயாரிக்க. புதுமுகங்கள் நடிக்கும் அப்புச்சி கிராமமும் வரும் 13 தேதி வெளியாகிறது.

இதில் இரண்டு படங்களுக்கு ஒரு ஒற்றுமை என்னவென்றால் இரண்டு படங்களுமே எரிகல் சம்பந்த பட்ட கதை அதுமட்டும் இல்லாமல் கிராமத்தை கதை களமாக கொண்ட காமெடி படங்கள்.

அப்புச்சி கிராமம் பொறுத்து வரை மூட நம்பிக்கைகள் நிறைந்த கிராமத்தில் ஒரு பெரிய எரிகல் விழிந்து 20 நாட்களில் உலகம் அழியப்போகிறது என்ற தகவல் அந்த கிராமத்துக்கு கிடைக்கிறது. அந்த 20 நாளும் அந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்பது கதை. சொல்லி வைத்தமாதிரி எரிகல் அந்த கிராமத்தில் விழுகிறது, உலகமும் அழியவில்லை. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்

முண்டாசுபட்டியில் 1947ம் ஆண்டு ஒரு எரிகல் அந்த கிராமத்தில் விழுகிறது. அதை பார்த்து பயந்த மக்கள் அதிலிருந்த பல மூட நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதில் ஒன்று போட்டோ பிடித்தால் இறந்து விடுவோம் என்பது. ஒரு போட்டோ எடுக்க ஹீரோவும், அவரது நண்பர்களும் அந்த கிராமத்துக்கு செல்லும் அனுபவங்களை காமெடியாக சொல்வது முண்டாசுபட்டியின் கதை.

 இது ஒருபுறம் இருக்க மூடநம்பிக்கைகளை போன்ற விஷயங்களை மைய படுத்தி காமெடியாக சொல்லிருக்கும் படமாம்

முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார் இதை பற்றி கூறியபோது "அப்புச்சி கிராமத்தில் எரிகல் பற்றித்தான் மொத்த படமே என்று கேள்விப்பட்டிருக்கிறேன். முண்டாசுப்பட்டியில் எரிகல் படத்தின் ஆரம்பத்தில் வரும் சின்ன பிளாஷ் பேக்தான். மற்றபடி மூடநம்பிக்கை, காமெடி என்ற ஒற்றுமைகள் யதேச்சையாக அமைந்தது" என்கிறார்.

0 comments:

Post a Comment