Thursday, May 29, 2014

கோடையில் காய்கறிகளை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

              கோடை க்காலத்தில் வெயிலின் தாக்கமானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், மார்கெட் சென்று வாங்கி வரும் காய்கறிகளானது சீக்கிரம் வாடிவிடும். காய்கறிகளை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்துக் கொள்வது என்பது ஈஸியானது அல்ல. அதிலும் ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளில் காய்கறிகளானது ஒரு நாளைக்கு மேல் நிலைக்காது.

மேலும் நிபுணர்கள் காய்கறிகளை சமைத்து சாப்பிடும் வரை பிரஷ்ஷாக வைத்துக் கொள்ள சில வழிகள் இருப்பதாக சொல்கின்றனர். இங்கு தமிழ் போல்ட் ஸ்கை வெயிலில் கஷ்டப்பட்டு மார்கெட் சென்று வாங்கி வரும் காய்கறிகள் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளது. அதன்படி காய்கறிகளைப் பராமரித்தால், காய்கறிகளானது பிரஷ்ஷாக இருக்கும்.
       
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை வாங்கி வந்தால், அதனை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து வைக்கக்கூடாது. குறிப்பாக வெங்காயத்துடன் சேர்த்து வைக்கக்கூடாது. ஏனெனில் வெங்காயத்தில் இருந்து வெளிவரும் வாயுவானது உருளைக்கிழங்கை விரைவில் வாடச் செய்யும்.

வெங்காயம்

வெங்காயத்தை எப்போதும் தனியாகவும், காற்றோட்டமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
       
செலரி

செலரி நீண்ட நாட்கள் ஃப்ரட்ஜில் இருக்க வேண்டுமானால், தண்டுப்பகுதியில் தண்ணீரை தெளித்து ஒரு கவரில் போட்டு வையுங்கள்.

காளான்

காளானை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, அதில் ஆங்காங்கு சிறு ஓட்டைகளைப் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் வரும்.

கத்திரிக்காய்

கத்திரிக்காயை நீண்ட நாட்கள் சேகரித்து வைப்பது மிகவும் சுலபம். ஏனெனில் இதை கனிந்த பின்னரும் சமைக்கப் பயன்படுத்தலாம்.
   
முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸை வெயில் படாதவாறு, எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் இடத்தில் வைத்துக் கொண்டால், நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

குடைமிளகாய்

குடைமிளகாய் வாங்கிய பின், அதன் காம்புகளை வெட்டி எடுத்துவிட்டு, அதனை ஈரமான துணியால் சுற்றி வைத்தால், நீண்ட நாட்கள் இருக்கும்.

கேரட்

 கேரட்டின் மேல் பகுதியை வெட்டி, ஈரமான டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் வரும்.
       
ப்ராக்கோலி

ப்ராக்கோலியை ஈரமான துணியால் சுற்றி, ஃப்ரிட்ஜில் வைத்தாலும் சரி அல்லது ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தாலும் சரி நீண்ட நாட்கள் இருக்கும்.

வெள்ளரிக்காய்

கோடையில் வெள்ளரிக்காய் சீசன் என்பதால் பலர் இதனை அதிகம் வாங்கி வருவார்கள். அப்படி வாங்கி வரும் வெள்ளரிக்காயை ஈரத்துணியில் போட்டு சுற்றி வைத்தால், நீண்ட நாட்கள் வரும்.

பூண்டு

பூண்டு நீண்ட நாட்கள் வர வேண்டுமானால், அதனை இருட்டான இடத்திலோ அல்லது குளிர்ச்சியான இடத்திலோ பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.
       
பீன்ஸ்

 ஈரப்பதமான இடத்தில் பீன்ஸ் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும். எனவே பீன்ஸை ஈரத்துணியில் போட்டு சுற்றி வைக்க வேண்டும்.

வெண்டைக்காய்

இது மற்ற காய்கறிகளைப் போல் ஈரப்பதமுள்ள இடத்தில் இருக்காது. ஆகவே வெண்டைக்காயை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.

பசலைக்கீரை

பசலைக்கீரையை டப்பாவில் போட்டு மூடாமல், அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்தால், அது பல நாட்கள் நன்றாக இருக்கும்.

0 comments:

Post a Comment