Thursday, May 29, 2014

காப்பர் பொருட்களை சுத்தம் செய்வதற்கான சில டிப்ஸ்...

            இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளின் சமையலறையிலும் நிச்சயம் காப்பர் பொருட்கள் இருக்கும். இத்தகைய காப்பர் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால், அவற்றின் நிறம் கருமையாக ஆரம்பிக்கும். மேலும் காப்பர் பொருட்களை சுத்தம் செய்வதற்கு நிறைய பொருட்கள் தற்போதைய மார்கெட்டில் கிடைக்கின்றன.

இருப்பினும் அனைத்து பெண்களும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்வதையே விரும்புவார்கள். ஏனெனில் இயற்கை பொருட்களால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்கும் என்பதால் தான். இங்கு காப்பர் பொருட்களை சுத்தம் செய்ய உதவும் சில இயற்கை பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு சுத்தம் செய்தால், காப்பர் பொருட்கள் பளிச்சென்று மின்னும். சரி, இப்போது அந்த பொருட்களைப் பார்ப்போமா!!!

வினிகர் மற்றும் உப்பு

காப்பர் பொருட்களை வினிகர் மற்றும் உப்பு பயன்படுத்தி தேய்த்து கழுவி, உலர வைத்தால், காப்பர் புதிது போன்று மின்னும்.

எலுமிச்சை

எலுமிச்சையைக் கொண்டு காப்பர் பொருட்களை தேய்த்து கழுவினால், எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், காப்பர் பாத்திரங்களானது சுத்தமாக இருக்கும்.
       
எலுமிச்சை மற்றும் உப்பு

இல்லாவிட்டால் எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டும் காப்பர் பொருட்களை தேய்த்து கழுவலாம்.

வினிகர் மற்றும் அரிசி மாவு

ஒரு டேபிள் ஸ்பூன் உப்பில், 1 கப் வெள்ளை வினிகரை ஊற்றி கலந்து, அதில் சிறிது அரிசி மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை காப்பர் பாத்திரத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தேய்த்து கழுவினால், பாலிஷ் போட்டது போன்று மின்னும்.

பேக்கிங் சோடா

 பேக்கிங் சோடாவைக் கொண்டும் காப்பர் பொருட்களை தேய்த்து கழுவலாம். வேண்டுமானால் அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் காப்பர் பாத்திரத்தில் உள்ள கருமையை எளிதில் போக்கலாம்.

0 comments:

Post a Comment