Thursday, May 29, 2014

எந்த நேரத்தில் என்னென்ன சாப்பிட வேண்டும்?

          * தயிரைத் தயிராக உண்ண ஒரு பக்குவம் இருக்கிறது. முப்பது வயதுக்கு மேல் தயிரை மோராக்கித்தான் உண்ண வேண்டும். அந்த வயதுக்கு மேல் நிறைய மோரே சாப்பிட வேண்டும். தயிரைச் சாப்பிடுவதானால் அதை ரசம், குழம்பு, சாதம் சாப்பிட்ட பின் கடைசியாக உண்ணக் கூடாது. தயிரை காலையில்தான் உண்ண வேண்டும்.

காலையில் வெறும் தயிரில் லேசாக உப்புச் சேர்த்து ஸ்பூனால் எடுத்து விழுங்கலாம். இட்லியில் தோய்த்து உண்ணலாம். ரொட்டிக்குப் போட்டு கொண்டால் உப்புத் தேவையில்லை. ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

இரவில் தயிர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மோர் சேர்த்துக் கொள்ளலாம். இரவு வெறும் மோர் சோறும், பழங்களும் போதும். இரவில் பலகாரங்களை உண்ணக் கூடாது. பழங்கள் நல்ல இரவு ஆகாரம்.

* காலையில் முழுச்சாப்பாடு சாப்பிடக் கூடாது. அப்போது ஆவியில் அவித்த அல்லது அதிகம் எண்ணெய் சேராத இட்லி, தோசை, ரொட்டி, சாப்பாத்தி,  கொழுக்கட்டை ஆகியவைகளை உண்ணலாம்.

* உண்ணும் உணவில் மிளகாய்(சிவப்பு) அறவே இருக்கக் கூடாது. அவசியமானால் சில பச்சை மிளகாய்களைச் சேர்த்துக் கொள்ளலாம். காரம் தேவை என்றால் மிளகைத்தான் பயன்படுத்த வேண்டும். வடை, போண்டாக்களில் கட்டாயம் மிளகு இருக்க வேண்டும். இஞ்சியும், மிளகும் சேர்ந்த அரிசிப் பொங்கல் மிகச்சிறந்த உணவு. முழுமையான சத்துள்ள உணவு. அதில் உடலின் எதிரிகளே இல்லை.

* பொரித்த அப்பளம் கூடாது. சுட்ட அப்பளம் சிறந்தது. கரி அடுப்பில்தான் அப்பளம் சுட வேண்டும்.

* தினசரி உணவில் பருப்புச் சேர்க்கக் கூடாது. வாரத்தில் இரண்டு நாள்தான் பருப்புச் சேர்க்க வேண்டும். அதாவது இரண்டு நாள்தான் சாம்பார், ரசம் வைக்கலாம். மற்ற நாட்களில் மோர்க் குழம்பு, மிளகு ரசம், எலுமிச்சை ரசம் சேர்க்க வேண்டும்.

* மதிய உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் முழுச் சாப்பாடு சாப்பிடலாம். பருப்புச் சாதம், மோர் சாதம் என்று பலவகையாக அது இருக்க வேண்டும். அல்லது வற்றல் குழம்பு சாதம், மோர் சாதம் என்றும் இருக்கலாம். கட்டாயம் கீரை இருக்க வேண்டும். தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். ஏதாவது ஒரு கடலை சுண்டல் உணவில் இருப்பது நல்லது.

* மாலை நேரம் நவதானியங்களை முளைகட்டி சுண்டல் செய்து சாப்பிடலாம். ரஸ்க், பன், கார்ன்ப்ளாக், ஓட்ஸ் இது போன்ற ஏதாவது எண்ணெய் இல்லாத ஓர் அயிட்டத்தை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment