Saturday, May 24, 2014

மார்பக டீசர்ட் – ஜப்பானில் இளம்பெண்களின் லேட்டஸ்ட் பேஷன்!

சில இளம்பெண்கள் தங்களுக்கு மார்பகங்கள் சிறியதாக இருப்பதற்காக வருத்தபடுவர். மேலை நாடுகளில் இளம்பெண்கள் மார்பகங்கள் சிறிதாக இருந்தால் அவற்றை பெரிதுபடுத்துவதற்காக உடற்பயிற்சிகள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சர்ஜரி செய்து கொள்வதுண்டு.ஆனால் இத்தகைய எண்ணம் உடையவர்களுக்காக ஜாப்பானிய உடை வடிவமைப்பாளர் தாகயுகி புகுசுவா பிரத்யேக டீ சர்ட் பனியன்களை வடிவமைத்து உள்ளார்.

இவர் விதவிதமான டிசைன்களில் மற்றும் கலர்களில் மார்பக படங்களுடன் கூடிய டீ-சர்ட்டுக்கள் தயாரித்துள்ளார். இதை அணிந்துகொண்டால் டிசைனிங் மார்பகங்கள் உண்மையான மார்பகங்கள் போலவே வெளியே தெரியும் வண்ணம் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் வசதிக்காகவே இத்தனகைய டிசைனில் தான் டீ-சர்ட்டுகள் தயாரித்ததாக ஜப்பானிய டிசைனர் கூறியுள்ளார்.

15 வருடமாக டிசைனிங் துறையில் இருந்து வரும் தாகயுகி புகுசுவா என்பவர்தான் இந்த வித்தியாசமான மார்பக டீசர்ட்டை உருவாக்கியுள்ளார். டீ-சர்ட்டில் மார்பகம் இருக்கும் இடத்தில் பஞ்சு போன்ற மென்மையான பொருளை வைத்து பெரிதாக இருக்குமாறு அவர் செய்துள்ள டிசைன் உண்மையான மார்பகங்கள் போலவே பார்ப்பதற்கு உள்ளதாக அதை வாங்கி உபயோகித்தவர்கள் கூறியுள்ளார்கள். ஜப்பானில் தற்போது இந்த புதிய வகை டீ-சர்ட்டுக்கள் மிக வேகமாக பரவி வருகிறது. விதவிதமான கலர்களில் வெளிவந்துள்ள இந்த டீசர்ட் இன்னும் சில நாட்களில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment