Wednesday, June 4, 2014

ரொம்ப சுலபம் இ காமர்ஸ் செய்வது!

செல்லிஸ் என்று ஒரு இணைய தளம் இருக்கிற‌து.எல்லோரையும் இ காமர்சிற்கு அழைத்து வரும் இணையதளம் இது. இ காமர்ஸ் என்றால் இனையம் மூலம் பொருட்களை வாங்குவது மட்டும் அல்ல இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதும் தான்.

ஆம் இந்த தளம் இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை மிகவும் சுலபமாக்கும் நோக்கோத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.அதை அழகாக நிறைவேற்றியும் தருகிற‌து.

இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதென்றால் அதற்கென தனியே இணையதளம் அமைக்க வேண்டும்,அதிலும் பொருட்களை காட்சிபடுத்தும் வசதி மற்றும் பணம் செலுத்துவதற்கான வசதி கொண்ட தளத்தை அமைக்க வேண்டும்,இதெல்லாம் சாமான்ய இணையவாசிகளுக்கு சாத்தியமில்லை என்று மலைப்பாக இருக்கலாம்.

ஆனால் இதெல்லாம் எதுவும் தேவையில்லை.செல்லிஸ் இணையதளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொன்டால் போதும் அடுத்த நொடி நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் பொருட்களை பட்டியலிட்டு அதற்கான விலையை குறிப்பிட்டு விற்பனையை துவக்கி விடலாம்.

சமூக வலைப்பின்னல் சேவைகளில் புகைப்படம் அல்லது தகவல்களை பதிவேற்றுவது போல இது மகிவும் எளிதானது.

இதற்கு பொருளின் புகைப்படத்தை இடம் பெற செய்து அதற்கான விலையை குறிப்பிட்டால் போதுமானது.  புத்தகங்கள், கலைப்பொருட்கள், இசை தட்டுக்கள் , க‌ம்ப்யூட்டர்கள், அறைகலன்கள் என எவற்றை வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்.  புகைப்படங்கள், வீடியோ, ஆடைகள் போன்ற‌வற்றையும் விற்பனை செய்யலாம்.

பட்டியலிடப்படும் பொருட்கள் அழகாக அந்த அந்த பிரிவில் வகைப்படுத்தப்படுகின்ற‌ன.

அதே போல ஒவ்வொருவருக்கும் ஒரு இணைய கடை போன்ற ஒரு இணைய பக்கம் உருவாக்கி தரப்படுகிறது அந்த பக்கத்தில் குறிப்பிட்ட நபர் விற்பனைக்கு வைத்துள்ள பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பொருட்களை வாங்க விரும்புகிறவர் செலுத்தும் தொகை நேரடியாக விற்பனையாளர் கணக்கிற்கே வந்து விடுகிறது.கமிஷன் போன்ற கழிவுகளும் கிடையாது.

முகப்பு பக்கத்தில் விற்பனைக்கு உள்ள பொருட்கள் புகைப்படத்தோடு வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த பொருளை கிளிக் செய்தால் மேற்கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.ஏதேனும் சந்தேகம் இருந்தால் விற்பனையாளரை தொடர்பு கொள்ளும் வசதியும் இருக்கிற‌து.விற்பனையாளரின் மற்ற பொருட்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த தளத்தில் விற்பனைக்கு பட்டியலிட்டு விட்டு அதற்கான இணைப்பை விற்பனையாளர்கள் தங்கள் வலைப்பதிவு ,டிவிட்டர்,பேஸ்புக் போன்ற்வற்றில் உள்ளீடு செய்து கொள்ளலாம்.இது விளம்பரம் போலவும் அமையும்.

பொருட்களை வாங்க விரும்புகிறவர்கள் தங்களுக்கு தேவையான் பொருள் விற்பனைக்கு உள்ளதா என தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.

எல்லோருக்குமான இணைய சந்தையை உருவாக்கி தரும் இந்த தளம் இ காமர்சை மேலும் ஜன‌நாயகமாயமாக்கி இருக்கிறது.

இந்த தளம் மூலம் அமோக விற்பனை நடக்குமா என்படது தெரியவில்லை. ஆனால் மிக சுலபமாக பொருட்களை பட்டியலிட்டு உங்களுக்கான இணைய கடையை உருவாக்கி கொண்டு நீங்களும் இ காம‌ர்சில் ஈடுபடலாம்.

இணையதள முகவரி;  https://sellies.com/

0 comments:

Post a Comment