Sunday, June 1, 2014

விக்ரமால் முருகதாஸுக்கு நடந்த சோகம் - ஒரு ப்ளாஷ்பேக்..!

இந்த தலைப்பை கேட்ட உடனே ஏதோ ஒரு கதையை சொல்ல போகிறோம் என்று நினைக்க வேண்டாம் (இது கதையல்ல நிஜம்)

ஏ.ஆர்.முருகதாஸின் வளர்ச்சி இன்று பிரமிக்கதக்க நிலையை அடைந்திருப்பது என்றால் அது அவர் கடந்து வந்த பல இன்னல்களின் வெளிப்பாடு தான் இந்த வெற்றி என்று கூற வேண்டும்.

என்றோ ஒரு நாள் நடந்த ஒரு சம்பவத்தை இன்று நான் ஏன் கிளற வேண்டும் என்று நினைக்கும் உள்ளங்களுக்கு விஷயம் இருக்கு.

தற்போது விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்துக் கொண்டு இருப்பது நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் என்றவுடன் விக்ரமிற்கு வேர்த்து விருவிருத்து விட்டதாம்.

ஏனென்றால் ஏ.ஆர்.முருகதாஸ் ரமணா படம் முடித்திருந்த சமயம். அப்போது ரமணா படத்தின் சர்ச்சையில் சிக்கி இருந்தாலும் பரவாயில்லை என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் விக்ரம் வெச்சு படம் பண்ண போரும். அதனால நீங்க ஒரு கதையை ரெடி பண்ணி தாங்க என்று முருகதாஸிடம் அட்வான்ஸ் கொடுத்தாராம்.

கொடுத்த வேகத்தில் கதையை ரெடி பண்ணிய முருகதாஸ் விக்ரம் கிட்ட கதையும் சொன்னாராம். அதற்கு பிறகு ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் பேசிய விக்ரம், ‘கதையெல்லாம் ஓ.கே தான், பட் அந்த பையன் மேல எனக்கு நம்பிக்கையில்ல’ என்று சொல்லி பல மாதங்கள் ஏ.ஆர்.முருகதாஸை காக்க வைத்து விட்டு கடைசியில் படம் வொர்கவுட் ஆக வில்லை என்று சொல்லி அனுப்பிவைத்தாராம்.

இந்த இடை பட்ட நேரத்தில் படம் கிடைத்துவிடும் என்ற சந்தோஷத்தில் தவணை முறையில் டி.வி, சோபா, கார் இன்னபிற அத்தியாவசிய பொருட்களையும் வாங்கியிருந்தாராம் முருகதாஸ்.

ஆனால் கடைசியில் அவர் கண் முன்பே எல்லாவற்றையும் ஒரு நாள் அள்ளிக் கொண்டு போனார்கள்.

காலங்கள் கடக்க முருகதாஸ் தற்போது இயக்குனர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் ஒரு நல்ல இடத்தை பிடித்து விட்டார். இந்த தருணத்தில் தான் விஜய் மில்டன் கோலிசோட ஹிட்கு பிறகு விக்ரம் கிட்ட கதை சொல்ல ஓகே ஆனது.

தற்போது எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் விக்ரம் ஓகே ஆனவுடன் ‘விக்ரமுக்கு அட்வான்ஸ் பணத்தை என் கையால் தான் கொடுப்பேன்’ என்று கூறிவிட்டாராம் முருகதாஸ்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் பல இன்னல்களும் துன்பங்களும் இருக்கும் என்பதற்கு இந்த செய்தி ஒரு சாட்சி.

0 comments:

Post a Comment