Sunday, December 29, 2013

Sunday Special - உருண்டை குழம்பு....





Sunday Special - உருண்டை குழம்பு....


தேவையான பொருட்கள் :

கடலைபருப்பு - 1/2 கப்

துவரம்பருப்பு - 1/2 கப்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

சின்னவெங்காயம் - 7(அ) பெரியவெங்காயம் - 1

பட்டைமிளகாய் - 4

மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்


குழம்புக்கு தேவையானவை :


புளி - எலுமிச்சையளவு

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்

தக்காளி - 1

சின்னவெங்காயம் - 8

உப்பு தேவையான அளவு

சோம்பு தூள் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1 மேசைகரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை :


கடலை பருப்பு, துவரம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி உப்பு, பட்டை மிளகாய், சோம்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி அரைத்த பருப்புடன் சேர்க்கவும் இதனுடன் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் 1/4 டீஸ்பூன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
புளியை கரைத்து வடிகட்டி மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வைக்கவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெயிட்டு கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து தாளித்து குழம்பு கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பின் ஒரு பருப்பு உருண்டையை எடுத்து கொதிக்கும் குழம்பில் போட்டு சிறிது கொதி வந்தவுடன் உருண்டையை ஒரு கரண்டியால் எடுத்து பார்க்கவும்.

உருண்டை கரையாமல் வந்தால் மேலும் கொதிக்க கொதிக்க உருண்டைகளை போட்டு வேகவைத்து இறக்கவும்.

 (உருண்டைகள் கரைந்தால் இட்லி தட்டில் வைத்து லேசாக வேகவைத்து பின் குழம்பை நன்றாக சுண்டிய பின் உருண்டைகளை அதில் போட்டு இறக்கலாம்)

கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

0 comments:

Post a Comment