Tuesday, December 24, 2013

உன்னை இன்றும் அம்மா என்று கூப்பிட ஆசை வருதே ஏன்..?




கால்களை உதைத்து
 கர்ப்பப்பையை
 கிழித்தாகிவிட்டது.

தொப்புள்கொடியை
 யாரோ
அறுத்தனர்.

முதல் பால் அருந்த
 முன்வரிசையில்
 காத்திருந்தேன்.

யாரும் என்னை
 கவனிப்பவராக இல்லை.

விட்டேன் ஒரு
 குவா குவா
 சத்தம்

 சாதம் ரெடி !

ஓ பிள்ளைக்கு
 பசிக்குது
 நீங்களே பால் குடுங்க
 நாங்கள் வெளியில் நிக்கிறோம்.

கண்ணை மூடியிருந்த
 இருட்டிலும்
 ஏதோ கரங்கள் என்னை தூக்கி
 மார்போடு அணைத்தது
 அப்பொழுது எரிந்தது
 என்னிடம் முதல் முறையாக
 அகல் விளக்கு.

பன்னீர்க்குடத்து
 நீரையெல்லாம்
 பகல் இரவாய் குடித்த எனக்கு
 பத்தினியின் முலைமார்பில்
 முதல் விருந்து
 முதல் அமிர்தம்.

யாரப்பா அது
 எனக்கு நீ பால் தர

 எல்லாமே
 இருட்டாயிருக்கே
 எப்படித் தேடுவது அவளை
 என்றிருக்கையில்

 என் செல்லம்
 என் குஞ்சு
 முத்த முத்திரைகளை
 முகமெல்லாம்
 குத்தியவர் யார்

 பஞ்சு விரல்கள் என்
 உடலை வருடி
 தென்றல் காற்றை பிடித்து என்
 தேகமெல்லாம் விட்டது யார்

 பிரசவ வலியென்னும்
 மிச்சமிருக்கையில்
 கொஞ்சிக்கொண்டே
 தாலாட்டு தமிழில் பாடியவர் யார்

 வந்த களைப்பில்
 உறங்கிக் கொண்டிருந்த
 மார்பு யாருடையது.
இலவம் பஞ்சைவிட
 அதுவேன் மென்மையாக
 இருந்தது

 கண்ணை விழிதொருநாள்
 கறுப்பு வெள்ளையில்
 படம் பார்த்தேன்
 பக்கத்தில் நின்றவள்
 ஈன்றவள்
 இவளா என் .. அம்மா

 உன்னை
 இன்றும் அம்மா என்று கூப்பிட
 ஆசை வருதே ஏன்

 உன் முலைப்பாலில்
 முதல் பாலில்
 முழு அன்பையும் கரைத்தது
 உன்னுடைய இரகசியம்

 அதுவே இந்த
 வசியம்.
வாத்தியமாய் இசைக்கிறேன்
 விடியும் வரை
 முடியும் வரை
 அம்மா அம்மா ..

0 comments:

Post a Comment