Monday, October 7, 2013

ஈஸி எக்ஸ்ட்ரா டிப்ஸ்!


*  காற்றோட்டமில்லாத அறைகளில் அதிக நேரம் இருந்தாலோ அப்படிப்பட்ட வீடுகளில் குடியிருந்தாலோ சிறுநீரகக் கோளாறு வரலாம்.

*  ஊறுகாய், கருவாடு, வடாம் ஆகியவற்றை அடிக்கடியோ அதிகமாகவோ சேர்த்துக்கொள்வது சிறுநீரகத்துக்கு நல்லதல்ல.

*  சிறுநீரகச் செயலிழப்பு இருப்பவர்கள் தண்ணீரை அதிகமாகக் குடிக்கக் கூடாது. மீறினால் நீர்ச்சத்து அதிகமாகி, மூச்சு வாங்குதல், உடல் வீக்கம் போன்றவை நிகழலாம். அதே நேரம் நன்னாரி வேரை இடித்து நீரில் போட்டு அந்த நீரைக் குடிக்கலாம்.

*  தேவையில்லாத பயம், மனத்தளர்ச்சி போன்றவையும் சிறுநீரக சக்தி குறைவதன் அடையாளமே!


அதிகாலை 3 முதல் 5 மணி வரையிலான நேரம் நுரையீரலின் செயல்பாடு உச்சத்தில் இருக்கும் நேரம். ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் இந்த நேரத்தில் எளிய மூச்சுப் பயிற்சிகளைச் செய்யலாம்.


இனிப்புகள் மற்றும் மைதாவால் செய்யப்பட்ட உணவுப்பொருள்களை ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். மிளகு, பூண்டு முதலானவற்றை அதிகம் சேர்க்கலாம்.


மூச்சுவிட சிரமப்படும்போது நடு மார்பில் கடிகாரச் சுற்றில் இதமாக கட்டை விரலால் அழுத்தி விடும்போது நல்ல பலன் கிடைக்கும்.


தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களில் வசிப்பவர்கள் திறந்தவெளி இடங்களுக்குச் சென்று அடிக்கடி பிராணாயாமம் போன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டியது அவசியம்.


0 comments:

Post a Comment