Monday, October 7, 2013

தாய்ப்பால் கொடுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

தாய்ப்பால் கொடுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்


கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் பிரசவத்திற்கு பின்னரும் பெண்கள் பல டயட்களை பின்பற்ற வேண்டியுள்ளது. குழந்தையை பெற்றெடுத்துவிட்டால் மட்டும் ஒரு தாயின் பெரிய கடமை முடிந்துவிட்டது என்பதில்லை.

அதற்கு பின்னர் தான் அந்த கடமையே ஆரம்பிக்கிறது.ஆம், குழந்தை பிறந்த பின் அதன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே அவர்களுக்கு வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் தான் அளிக்கும். ஆனால் அதே நேரம் தாயின் உடலும் மிகவும் வலுவின்றி இருக்கும்.

அதனால் அவர்கள் நிறைய சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் சத்தான உணவுகள் என்றதும், அனைத்து உணவுகளையுமே சாப்பிட்டுவிட முடியாது.குழந்தைகளுக்கு பிரச்சனை வராமல் இருக்க எந்த வகை உணவுகளை தாய்மார்கள் சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

வெங்காயம், மிளகாய் மற்றும் மிளகு போன்ற காரமான உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றிற்கு உப்புசத்தை ஏற்படுத்தும். மேலும் சில நேரங்களில் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி போன்றவற்றை கூட ஏற்பட நேரிடும்.

ஏனெனில் குழந்தையின் செரிமான மண்டலமானது மிகவும் சென்சிட்டிவ்வானது. ஆகவே இத்தகைய காரமான பொருட்களை அவர்களது உடல் ஏற்றுக் கொள்ளாது.அன்னாசி, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் பலவற்றை தாய்மார்கள் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றில் ஒருவித அரிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது. பிரசவத்திற்கு பின் பெண்கள் உடலை தேற்றுவதற்கு நன்கு காய்கறிகளை சாப்பிட வேண்டியது தான். ஆனால் அவற்றில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இந்த உணவுப் பொருட்கள் குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் போது அதிகமான அளவில் பால் பொருட்களை சாப்பிட்டால், அவை குழந்தைக்கு பெருங்குடலில் பெரும் வலி ஏற்படும்.

ஆகவே அந்த பால் பொருட்களை அதிக அளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மீன்களில் கானாங்கெளுத்தி, ஸ்வார்டுபிஷ், டைல்ஃபிஷ் மற்றும் சுறா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் அதிக அளவில் மெர்குரி உள்ளது.

இது குழந்தைக்கு மிகவும் பாதிப்பானது. ஆகவே மெர்குரியின் குறைவாக உள்ள மீன்களான டூனா, கெளுத்தி, சாலமன் மற்றும் பல மீன்களை குறைந்த அளவில் சாப்பிடலாம்.காப்பியை குறைந்த அளவில் குடிக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தையின் தூக்கத்தை கெடுக்கும். அதுமட்டுமின்றி, குழந்தைக்கு ஒரு வித நடுக்கம் மற்றும் உடலில் எரிச்சலை உண்டாக்கும்.

0 comments:

Post a Comment