Thursday, December 5, 2013

உணவில் எந்த அளவிற்கு உப்பு சேர்ப்பது நலம்?



உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள், அந்த வகையில் நாம் உண்ணும் உணவிற்கு ருசி உண்டாக்குவதில் உப்பு பெரும் பங்கு வகிக்கிறது.

இருப்பினும் உப்பை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, உணவில் சேர்த்தால் தான் அது உடல்நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். அளவிற்கு மீறி சேர்க்கும் போது அதன் விளைவாக உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இது பற்றி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் உணவில் அதிக அளவில் உப்பு சேர்ப்பதால் வயிற்று புற்றுநோய், நெஞ்சுவலி, இருதய கோளாறு போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

உப்புசத்து குறைவான ரொட்டி(பிரட்), தானியங்களை காலை உணவில் சேர்க்கலாம். கடல்மீன், சிப்ஸ் ஆகியவற்றில் ஏற்கனவே உப்பு சேர்ந்திருப்பதால் குறைந்த அளவில் சேர்க்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 6 கிராம்(ஒரு டீஸ்பூன்) எடை அளவிற்கே உப்பு இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் 8.6 கிராம் அளவிற்கு சேர்க்கிறார்கள்.

ஆகவே குறைவான உப்பு சேர்க்கப்பட்ட உணவை உட்கொள்வது தான் உடலுக்கு ஆரோக்கியம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தள்ளனர்.

0 comments:

Post a Comment