Thursday, November 28, 2013

மோடி அமர்ந்த நாற்காலி ரூ.4 லட்சத்துக்கு ஏலம் போனது!

 nov 28 -modi chair

மோடி எங்கி போனாலும் சர்ச்சைக்கு பந்ஜ்சமில்லை .ஆனால் இந்த முறை அவரது பேச்சால் மட்டுமின்றி அவர் உட்கார்ந்து சென்ற நாற்காலியால் கூட சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் பா.ஜ. பேரணி நடந்தது. இதில், கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதில், மோடி அமர்வதற்காக ஆக்ரா நகராட்சி மன்ற பாஜ கவுன்சிலர், வித்தியாசமான நாற்காலியை உருவாக்கினார்.கூட்டம் முடிந்ததும் மோடி அமர்ந்த நாற்காலியை ஏலம் விடும்படி, கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜ நிர்வாகிகள் சிலர் கூறினர். ஒருவர் ஸி2 ஆயிரம் ஏலம் கொடுப்பதாக கூறியதும் போட்டி ஏற்பட்டது. மற்ற பாஜ.வினரும் அதை போட்டிப் போட்டு ஏலம் கேட்க, அன்றைய தினமே ஸி1.25 லட்சத்துக்கு ஏலம் எட்டியது.

இதையடுத்து அப்போது, நாற்காலியை ஏலம் விடாமல், மோடியின் நினைவாக அதை தானே வைத்து கொள்வதாக கூறி கவுன்சிலர் எடுத்துச் சென்று விட்டார். ஆனால், ஏலம் கேட்பது மட்டும் நின்றபாடில்லை. நேற்று இந்த நாற்காலியை உள்ளூர் பாஜ தலைவர் ஒருவர் ரூ.4.21 லட்சத்துக்கு ஏலம் கேட்டதாக கவுன்சிலர் தெரிவித்தார்.

பின்னர் இந்த ஏல விவகாரம் பற்றி பா.ஜ. தலைவர் புருசோத்தம் கந்தல்வால் கூறுகையில், ‘‘தலைவர்கள் அமர்ந்த நாற்காலிகளை ஏலம் விடுவது கட்சியின் கலாசாரத்துக்கு விரோதமானது. இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்தி விட்டது’’ என்று குற்றம்சாட்டினார்.

0 comments:

Post a Comment